நாகரீக மோகத்தில் பெண்கள்.. திணறும் காவல்துறை.; ஆதிராஜன் சொல்லும் ‘தீராப்பகை’

நாகரீக மோகத்தில் பெண்கள்.. திணறும் காவல்துறை.; ஆதிராஜன் சொல்லும் ‘தீராப்பகை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாகரீக மோகத்தில் பெண்கள்.. திணறும் காவல்துறை.; ஆதிராஜன் சொல்லும் ‘தீராப்பகை’

தமிழில் ‘சிலந்தி’, ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிராஜன்.

தற்போது அவர் கோல்டன் மேஜிக் கிரியேட்டர் சார்பில் எழுதி இயக்கி, ஏ.சூர்யாவுடன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தீராப்பகை’.

இதில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜய ராகவேந்திரா நடித்துள்ளார்.

இவருடன் ஹரிப்பிரியா, ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் நடித்துள்ளனர்.

ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடியுள்ளார். ராஜேஷ் கே.நாராயண் ஒளிப்பதிவு செய்ய, எம்.ஜி.கார்த்திக் இசை அமைத்துள்ளார்.

‘கேஜிஎஃப்’ காந்த் கவுடா எடிட்டிங் செய்துள்ளார். சினேகன், ஆதிராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படம் குறித்து ஆதிராஜன் கூறுகையில்…

‘சென்னை, பெங்களூரு, கோவை ஆகிய பகுதிகளில், ஒரே பாணியில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.

இது கொலையா, தற்கொலையா? அமானுஷ்ய விஷயமா என்று முடிவுக்கு வர முடியாமல் காவல்துறை திணறுகிறது. விசாரணை தீவிரம் அடையும் நிலையில், அதிர்ச்சியான மர்மம் ஒன்று வெளியாகிறது.

அதீத சுதந்திரத்தாலும், நாகரீக மோகத்தாலும் பெண்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பதை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்புக்கு 6 டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. திரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் முழுமையான விருந்தாக இருக்கும்’ என்றார்.

Adhirajan directorial movie Theerapagai

சோனியா & ஸ்ம்ருதி இணைந்த 7ஜி.. : பிளாக் மேஜிக் ஃபீல் குட் ஹாரர் படம்

சோனியா & ஸ்ம்ருதி இணைந்த 7ஜி.. : பிளாக் மேஜிக் ஃபீல் குட் ஹாரர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சோனியா & ஸ்ம்ருதி இணைந்த 7ஜி.. : பிளாக் மேஜிக் ஃபீல் குட் ஹாரர் படம்

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது..

Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன்.

புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள்.

அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்ததுடன், எழுதி, இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜு V டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் வரும் ஜூலை 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிரைலர் – https://youtu.be/Om8du5NjWpY

Soniya agarwal and Smruthi Venkat starring 7G

சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

*மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!*

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘ விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார்.

இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , ஆக்சன் காட்சிகளும், வேதிகாவின் வித்தியாசமான தோற்றமும்.. ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

Prabu Deva and Sunny Leone starring Petta Rap

——-

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

*’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது..

“எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”.

எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன்…

“எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகத்தில் பல படங்களை ஓடிடிக்கு கொடுத்து வந்தோம். ஆனால், பேஷன் ஸ்டுடியோஸூக்கு ‘மகாராஜா’ பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி”.

நடிகர் மணிகண்டன்…

“இந்தப் படத்தில் என்னுடைய ரோல் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால், இப்போது படம் பார்த்தப் பிறகுதான் கதையே எனக்குத் தெரிகிறது. நிறைய பாராட்டுகள் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது. ‘மகாராஜா’ படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி”

நடிகர் அருள்தாஸ்…

“தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘மகாராஜா’ படம் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. நித்திலன் சின்சியரான இயக்குநர். படப்பிடிப்புத் தளத்தில் எங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குறுகிய காலத்தில் விஜய்சேதுபதிக்கு ஐம்பதாவது படம் வெற்றியாக அமைந்துள்ளது சாதாரண விஷயம் கிடையாது. எங்கள் எல்லோருக்கும் இது சந்தோஷமான விஷயம். படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே இது பெரிய பெயர் வாங்கித் தந்துள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”

நடிகர் வினோத்…

“இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சேது சாருடைய நடிப்பு மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”.

நடிகர் கல்கி…

“தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதங்களாக நல்ல படம் இல்லை என்ற பேச்சு எழுந்தபோது, ‘என்னடா அங்க சத்தம்?’ என்று வந்த படம்தான் ‘மகாராஜா’. உங்களுடைய அனைவரது வாழ்த்துக்கும் நன்றி. பழகுவதற்கும் சரி, நடிப்பிலும் சரி எங்கள் அண்ணன் சேது ‘மகாராஜா’தான்!”.

நடிகர் துரை…

“’மகாராஜா’ படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வரம்தான். நேற்று இரவு காசி டாக்கீஸில் போய் படம் பார்த்தோம். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. சேது அண்ணன் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம்”.

நடிகை மம்தா மோகன்தாஸ்..

“நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது பேசத் தோன்றவில்லை. இந்தக் கதைக்காக என்னைக் கூப்பிட்ட நித்திலன் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரம் சிறிது பெரிது என்றில்லாமல் இந்த நல்ல கதையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

விஜய்சேதுபதியின் 50வது படமான இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி. மலையாளத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. என் நடிப்பில் வெளியான சமீபத்திய எந்தப் படங்களுக்கும் இப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனக்கும் படத்திற்கும் நல்ல வரவேற்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!”.

இயக்குநர் நித்திலன்…

“என்னையும் படத்தையும் பாராட்டி கடந்த சில நாட்களாக ஆயிரம் கால் வந்திருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. படத்தில் சிலருக்கு சில மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

சேது அண்ணன், சிங்கம்புலி அண்ணன், மணிகண்டன், சாக்‌ஷனா என நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. சேது அண்ணா சிறப்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சிங்கம்புலி அண்ணாவை இந்த கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்ந்தெடுத்தேன் எனப் பலரும் கேட்கிறார்கள்.

ஒரு பிரஸ்மீட்டில் தான் இயக்கியுள்ள படம் பற்றி தொகுப்பாளருக்கு கோவமாக எடுத்து சொன்னார் சிங்கம்புலி. அதில் அவரின் ஆட்டிடியூட் வைத்துதான் இந்த கதைக்கு அவர் வில்லன் எனத் தேர்ந்தெடுத்தேன். படத்தின் கதை கேட்டு ஓகே செய்த தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…

“இந்தக் கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம்.

இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பேனர் கட்டும்போது கூட சிலர், ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

Vijaysethupathi emotional speech at Maharaja success meet

——

‘மழை பிடிக்காத மனிதன்’ விஜய்ஆண்டனி… ரசிகர்களைக் கவர்ந்த ‘தீரா மழை’ இசை

‘மழை பிடிக்காத மனிதன்’ விஜய்ஆண்டனி… ரசிகர்களைக் கவர்ந்த ‘தீரா மழை’ இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மழை பிடிக்காத மனிதன்’ விஜய்ஆண்டனி… ரசிகர்களைக் கவர்ந்த ‘தீரா மழை’ இசை

*நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் முதல் முதல் சிங்கிள் ’தீரா மழை’ வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது..

விஜய் ஆண்டனியின் படங்கள் எப்போதுமே அழகான பாடல்களுக்காக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அவரது வரவிருக்கும் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘தீரா மழை’யும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது.

இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பெப்பி, ஃபாஸ்ட்-பீட், பவர் பேக்ட் பாடல்கள் இந்த காலத்தில் டிரெண்டிங் என்ற நிலையில், மெலோடியாக வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் இசை ஆர்வலகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘தீரா மழை’ பாடலை இந்தி படங்களில் பிரபல இசையமைப்பாளர் ராய் இசையமைத்து பாடியுள்ளார்.

வந்தனா மசான் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலின் தெலுங்கு பதிப்பான ‘தூஃபன் லா’ ஏற்கனவே 200K+ பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, வாகு மசான் மற்றும் ஹரி டஃபுசியா. படத்தொகுப்பு பிரவீன் கே.எல். செய்துள்ளார்.

Theera Mazhai song from MPM movie goes viral

———–

என் வாழ்க்கையில் இதுவே சிறந்த தந்தையர் தினம்.; மகன் சூர்யாவை வாழ்த்திய விஜய்சேதுபதி

என் வாழ்க்கையில் இதுவே சிறந்த தந்தையர் தினம்.; மகன் சூர்யாவை வாழ்த்திய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் வாழ்க்கையில் இதுவே சிறந்த தந்தையர் தினம்.; மகன் சூர்யாவை வாழ்த்திய விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களிலேயே அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.

தற்போது சூர்யா ஹீரோவாக அறிமுகமாகி விட்டார்.

சூர்யா நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ் வீழான். ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன், வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.

அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த டீஸரில் பாக்ஸர் ஆன சூர்யா சிறை செல்கிறார். அங்கு அடியாட்களை அனுப்பி சிறையில் இருக்கும் சூர்யாவை கொலை செய்ய முயற்சி நடக்கிறது.. அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சூர்யா செய்யும் ஆக்சன் தான் இந்த ‘பீனிக்ஸ்’ படம்..

இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த டீசர் விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசும்போது.. சினிமாவில் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.. ஆனாலும் பிடிவாதமாக சினிமா தான் வேண்டும் என சூர்யா சொல்லிவிட்டால் எனவே அவனது விருப்பத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டேன்.

அவனைப் பெற்ற இந்த 19 வருடத்தில் இந்த தந்தையர் தினம் தான் மிக ஸ்பெஷல் என்று பேசினார் விஜய் சேதுபதி.

இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் சூர்யா. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியில்.. அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பேசிய நீங்கள் தற்போது ‘பீனிக்ஸ்’ படத்தின் புரொமோசன் பணிக்காக அப்பாவை அழைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்..

தந்தையர் தினத்தன்று அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன். அதனால் அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அப்பா மட்டும் வரவில்லை, என்னோட அம்மா சகோதரி என அனைவரும் வந்துள்ளனர்” என்றார்.

Vijay Sethupathi speech about his son Surya

More Articles
Follows