தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பிரபல நடிகையான இவர் தற்போது அரசியலில் கலக்கி வருகிறார்.
முதலில் தி.மு.க வில் இணைந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இதனிடையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்த போதிலும் அதற்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருந்தார்.
எனவே விரைவில் குஷ்பூ பாஜகவில் இணையப் போகிறார் என தகவல்கள் வந்தன.
இதனை குஷ்பு கடுமையாக கண்டித்தார்.
அதுபோல உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார்.
பா.ஜ.கவில் இணைவதாக இருந்தால், நான் ஏன் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்? என்று காட்டமாக பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், குஷ்பூ பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
டெல்லி சென்றுள்ள அவர் நாளை ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க முன்னிலையில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை வரை அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.
சினிமாவில் தான் அடிக்கடி எதிர்பாராத காட்சிகள் இடம்பெறும். தற்போது காட்சிகளை போல கட்சிகளை மாற்றுகிறாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Actress/Politician Khushboo joins BJP
பாஜ இணையப்போகிறீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு பதில்..
நோ கமெண்ட்ஸ்… என பதிலளித்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
