தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விவாகரத்து ஆகாத பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதால் நிறைய புகார்கள் மற்றும் வழக்குளை சந்தித்தார் வனிதா.
நடிகை கஸ்தூரி, புரொடியூசர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் கண்டனங்களை எதிர்கொண்டார்.
அண்மையில் கோவாவுக்கு ஹனிமூன் சென்று வந்த வனிதா தன் 3வது கணவர் பீட்டர் குறித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
அவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என பகிரங்கமாக வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில் நடிகை வனிதா பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து அவர் பேசும்போது…
பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன். இப்போது அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
அவர் சொல்வதை பார்த்தால் விரைவில் இணைவார் என்றே தெரிகிறது. ஆனால் எப்போது? என்பது மட்டும் தான் கேள்வியாகவுள்ளது.
நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், குஷ்பு பாஜக.வில் அண்மையில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Vanitha Vijayakumar to join BJP ?
