த்ரிஷாவுக்கு பிடித்த 3 ஹீரோக்கள் இவர்கள் மட்டும்தானா..?

த்ரிஷாவுக்கு பிடித்த 3 ஹீரோக்கள் இவர்கள் மட்டும்தானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trishaஇன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

தனக்கு பிடித்த பாடலாக மன்னிப்பாயா பாடலையும், பிடித்த வெப் சீரிஸாக செக்ஸ் அன்ட் சிட்டி தொடரையும் தெரிவித்தார்.

அப்போது தனக்கு பிடித்த 3 ஹீரோக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் கமல்ஹாசன்.

2வதாக மலையாள நடிகர் மோகன்லாலையும், 3வதாக பாலிவுட் நடிகர் அமீர்கானையும் பிடிக்கும் என த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

கமலுடன் தூங்காவனம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா.

தற்போது மலையாளத்தில் மோகன்லாலின் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

Capture1

Capture

kamal-haasan-supports-jallikattu-and-trisha-21

மோடி அறிவித்த 20 லட்சம் கோடி கார்ப்பரேட்டுக்கு போனால் அவ்வளவுதான்.. – ‘ஆடவர்’ தயாரிப்பாளர் சிவகுமார்

மோடி அறிவித்த 20 லட்சம் கோடி கார்ப்பரேட்டுக்கு போனால் அவ்வளவுதான்.. – ‘ஆடவர்’ தயாரிப்பாளர் சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer sivakumarகொரானாவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மத்திய மாநில அரசு இருக்கிறது நான்காம் கட்ட ஊரடங்கில் என்ன செய்யபோகிறது இந்திய அரசு தெரியவில்லை …

பொருளாதாரம் வளர்ச்சி பெற இருபது லட்சம் கோடி திட்டம் கொண்டு வரப்போவதாக பிரதமர் திரு மோடி அவர்கள் கூறியுள்ளார் அந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனளிக்க கூடியவகையில் இருக்க வேண்டும் …

பணக்காரர்களுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்க கூடாது …

இன்றைக்கு இருந்த காசுகளை செலவு செய்துவிட்டு பணப்புழக்கம் இல்லாமல் இருப்பது அவர்கள்தான் அவர்கள் கைகளில் காசு புழங்கினால்தான் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெரும் …

பணக்காரர்களிடம் அந்த பணம் போனால் பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிவிடும்….

சொ. சிவக்குமார் பிள்ளை

தலைவர்

மக்கள் செயல் பேரவை

Attachments area

BREAKING டாஸ்மாக் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி.; மக்களே நீதி மய்யமாக மாறனும்..- கமல்

BREAKING டாஸ்மாக் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி.; மக்களே நீதி மய்யமாக மாறனும்..- கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Supreme Court granted permission to open Tasmac shops Kamal condemns Court order கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 50 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது.

இதனையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர்.

இதில் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து, ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு உத்தரவிட்டனர்.

ஆனால் ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பது சாத்தியமில்லை எனவும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் வாதம் செய்தது.

ஆன்லைனின் மதுக்கள் விற்றால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில்…

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.

என பதிவிட்டுள்ளார்.

Supreme Court granted permission to open Tasmac shops Kamal condemns Court order

மக்கள் அரசனுக்காக இணையும் ‘மேதாவி-கள் விஜய் & அர்ஜூன் & ஜீவா

மக்கள் அரசனுக்காக இணையும் ‘மேதாவி-கள் விஜய் & அர்ஜூன் & ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjun Vijay Jeeva team up for Methavi மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”.

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் முன்றாவது படம் இது.

இன்று (மே 15) பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) இன்று வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நேர்த்தியான கதையுடன் சமூக கருத்தையும் பதிவிடும் பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார்.

ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் “ஆக்சன் கிங்” அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.

நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.

தயாரிப்பு மேற்பார்வை – கணேஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ்

இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குனர் பா.விஜய் கூறியுள்ளார்.

Arjun Vijay Jeeva team up for Methavi

Arjun Vijay Jeeva team up for Methavi

பொண்டாட்டி என்ன வேலைக்காரியா.? VTV கணேஷுடன் சிம்பு விவாதம் (வீடியோ)

பொண்டாட்டி என்ன வேலைக்காரியா.? VTV கணேஷுடன் சிம்பு விவாதம் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu talking about his wife Video goes viralநடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் விடிவி கணேஷ். இவர்கள் இருவரும் விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் சிம்பு கிச்சனில் சிக்கன் மற்றும் மட்டன் கறி சமையல் செய்துள்ளார்.

அதை அருகில் இருந்து பார்த்த விடிவி கணேஷ்…

நீ என்னப்பா… வர போற பொண்டாட்டிக்கு வேலை இல்லாம பண்ணிடுவ போல இருக்கே. நீயே சமையல் எல்லாம் பண்ற? என கேள்வி கேட்கிறார்.

அதற்கு சிம்பு…

கல்யாணம் பண்ணிட்டு வேலை செய்யவா வராங்க… பொண்டாட்டி என்ன வேலைக்காரின்னு நினைச்சிங்களா? என கேட்கிறார்..

Simbu talking about his wife Video goes viral

இந்த விவாதம் இன்னும் நீள்கிறது.. நீங்களே அந்த வீடியோவை இங்கே பாருங்கள்…

ஜோதிகா & கீர்த்தி சுரேஷ் படங்களின் ஆன்லைன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா & கீர்த்தி சுரேஷ் படங்களின் ஆன்லைன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ponmagal Vandhal and Penguin OTT release dates hereகொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டு 2 மாதங்களாகிறது. இதனால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை ஆன்லைன் (OTT) ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் தற்போது ஆன்லைன் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதில்…

சூர்யா தயாரித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இந்த படத்தில் ஜோதிகாவுடன் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஃப்ரெட்ரிக் என்பவர் இயக்க ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 96 படப்புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்க ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளனர்.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Ponmagal Vandhal and Penguin OTT release dates here

மேலே சொல்லப்பட்ட இரு தமிழ் படங்களும் மற்ற மொழி படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#PonMagalVandhal – May 29
#GulaboSitabo – June 12
#Penguin – June 19
#Law – June 26
#FrenchBriyani – July 24
#ShakuntalaDevi – DTBA
#SufiyumSujatavum – DTBA

Ponmagal Vandhal and Penguin OTT release dates here

More Articles
Follows