தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் த்ரிஷா இணைந்து நடித்து வரும் படம் 96.
இப்படத்தின் கதை 1996 காலக்கட்டத்தில் நடப்பதாலும், 96 வயது கேரக்டரிலும் விஜய் சேதுபதி நடிப்பதாலும் இப்படத்திற்கு 96 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரேம்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இதில் த்ரிஷா டீச்சராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தையுடன் இருக்கும் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை அடுத்த ஆண்டு 2018ல் ரிலீசாக உள்ளது.