தன் 40வது பிறந்தநாளை தன் மகளுடன் கொண்டாடிய விஜய்-அஜித் பட நடிகை

தன் 40வது பிறந்தநாளை தன் மகளுடன் கொண்டாடிய விஜய்-அஜித் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surekha vaniவிஜய்யுடன் ‘மெர்சல்’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகியப் படங்களிலும், அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்தவர் சுரேகா.

மேலும் பல தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நடிகை சுரேகா வாணி.

இவர் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அந்த கொண்டாட்டத்தில் இவரது மகள் சுப்ரிதாவும் கலந்துக் கொண்டார்.

பர்த்டே பார்ட்டி கொண்டாட்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுரேகா வாணி.

விரைவில் தெலுங்கு சினிமாவில் தன் மகள் சுப்ரிதாவை நாயகியாக்க உள்ளார் சுரேகா.

Actress Sureka Vani celebrated birthday with her daughter

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ல் தொடங்காது..; மாநகர ஆணையர் அதிர்ச்சி தகவல்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ல் தொடங்காது..; மாநகர ஆணையர் அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு மாநகர ஆணையர் பிரகாஷ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“கொரோனா 2ம் அலை தீவிரமாக உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டை காட்டிலும் சென்னையில் 3 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் பரிசோதனையின் போது 20% பாசிட்டிவ் ஏற்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1 நாளையே உடனடியாக அமலுக்கு வராது. அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.

தற்போது போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. எனவே திட்டம் நாளை தொடங்காது.

ஆனால் அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் தொடர்ந்து செலுத்தப்படும்.

சென்னையில் 1.46 ஆக கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

தடுப்பூசி இருப்பை பொறுத்தே 2ம் தவணை செலுத்த முடியும். சிலருக்கு 2ம் தவணை தடுப்பூசிகள் தாமதமாகிவிட்டது.

2, 3 நாட்கள் தாமதமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் தவறில்லை.

30 வயதை ஒட்டிய இளைஞர்கள் சிலர் அலட்சியமாக உள்ளனர்.

சாதாரண காய்ச்சல் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுப்பதில் யாரும் வெட்கப்படக்கூடாது.”

என மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu not in a position to kick-start the vaccination for 18+ people

விஜய்சேதுபதியை அடுத்து சென்ராயனுக்கு ‘கோமாளி’ போட்டோ ஷூட் நடத்திய ராமசந்திரன்

விஜய்சேதுபதியை அடுத்து சென்ராயனுக்கு ‘கோமாளி’ போட்டோ ஷூட் நடத்திய ராமசந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சென்ராயன்.

‘மூடர் கூடம்’ என்ற படத்தில் இவர் காமெடியனாக அறியப்பட்டாலும் ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் வில்லனாக அடையாளம் காணப்பட்டார்.

2019ல் கமல் நடத்திய ‘பிக்பாஸ் சீசன் 2’-ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் சென்ராயன்.

இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக புகழ் போட்டோகிராஃபர் ராமசந்திரன் நடத்திய போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றார் சென்ராயன்.

இதன் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அதில் விளக்கியுள்ளார்.

கோமாளியாக இருந்துவிட்டால் கொரோனா நம்மை தொற்றிக் கொ(ல்)ள்ளும் எனவே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்றை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்ற விழிப்புணர்வுக்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறினார் போட்டோகிராஃபர் எல். ராமச்சந்திரன்.

எல். ராமச்சந்திரன் பற்றிய சிறுகுறிப்பு..

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் அருகேயுள்ள வலங்கைமான் ஊரில் பிறந்தவர் எல். ராமசந்திரன்.

தனது படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளார். கடுமையாக உழைத்து தற்போது படிப்படியாக முன்னேறி வருகிறார்.

உலகளவில் பிரபலமான பிளே பாய், மேக்ஸிம் உள்ளிட்ட மேகஸின்களுக்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றி புகழ்பெற்றவர்.

யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நடிகைகளை மிக அழகாக அவர்களே வியக்கும் வண்ணம் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

2020ல் கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த ஒரு மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக விஜய்சேதுபதிக்கும் ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்
ராமச்சந்திரன்.

Sendrayan comali photoshoot by photographer L Ramachandran

IMG-20210430-WA0048

IMG-20210430-WA0049

திமுக வெற்றி.: உடன்பிறப்பின் உயிரே முக்கியம்.. வீதிகள் வெறிச்சோடட்டும்..; ஸ்டாலின் அறிக்கை

திமுக வெற்றி.: உடன்பிறப்பின் உயிரே முக்கியம்.. வீதிகள் வெறிச்சோடட்டும்..; ஸ்டாலின் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalin (1)திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் வெளியிட்ட்அறிக்கை இதோ..

“அன்புடன் வேண்டுகோள்

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் கழகத்தைச் சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.

வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ்த் திருநாட்டின் வாக்காளர் பெருமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது.

தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன்.

இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்று கூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு.

கழக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வீதிகள் வெறிச்சோடட்டும்…
உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்…

MK Stalin statement on exit polls

சிம்புவை இயக்க காத்திருந்த கேவி ஆனந்த்..; ‘காப்பான்’ இயக்குனரின் கடைசி நிமிடங்கள் பற்றி சிம்பு உருக்கம்

சிம்புவை இயக்க காத்திருந்த கேவி ஆனந்த்..; ‘காப்பான்’ இயக்குனரின் கடைசி நிமிடங்கள் பற்றி சிம்பு உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu kv anand (1)இந்திய சினிமா துறைக்கு ஒளிப்பதிவாளராக நுழைந்தவர் கே.வி. ஆனந்த். (தற்போதைய வயது 54.)

இவர் முதன்முறையாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற படத்திற்காக தேசிய விருதை பெற்றார். இந்த படமே பின்னர் தமிழில் ரஜினி நடிப்பில் ‘முத்து’ என்றானது.

முதல்வன், பாய்ஸ் படங்களிலும் ரஜினி நடித்த சிவாஜி படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் இயக்குனர் ஷங்கருடன் தோன்றியிருப்பார்.

ஆனால் அதற்கு முன்பே பத்திரிகை துறையில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியிருக்கிறார்.

ஶ்ரீகாந்த் கோபிகா பிரித்வி ராஜ் விவேக் நடித்த ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கி அதன் பின்னர் இயக்குநராக அறியப்பட்டவர் இவர்.

கோ, கவண், அனேகன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் சூர்யாவின் ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை இயக்கியுள்ளார்.

கே.வி. ஆனந்த் அவர்களின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது.

இவர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார்.

இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது இவரே காரை ஓட்டிக்கொண்டு ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

ஆனால், அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை.

அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆனந்த் மறைவுக்கு சிம்பு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

*தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது..

மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது.

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.

பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே வி ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு.

அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்”.

இவ்வாறு சிம்பு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

STR’s condolence message to director KV Anand

சினிமாவை அழிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ பெயரில் திரைப்படம்.: மர்ம நபர்கள் மிரட்டல்.; ஜாக்குவார் தங்கம் எச்சரிக்கை

சினிமாவை அழிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ பெயரில் திரைப்படம்.: மர்ம நபர்கள் மிரட்டல்.; ஜாக்குவார் தங்கம் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Rockersஒரு படம் தியேட்டரில் ரிலீசான சில மணி நேரங்களிலேயே ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுவது வழக்கமாகி விட்டது.

இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ தளத்தை முடக்க திரையுலகினர் முயற்சித்தாலும் அது முடியவில்லை. அவர்களுக்கு சவால் விட்டு புதிய படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால் தமிழ் சினிமா ரிலீசாகும் தியேட்டர்களில் சரியான வசூல் இல்லாமல் அழிவு பாதையை நோக்கி பயணித்து வருகிறது.

இந்த நிலையில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பில் திரைப்படம் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி.

இந்த தலைப்பை மாற்றும்படி மிரட்டல் விடுத்துள்ளனர் மர்ம நபர்கள்.

அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார.

இது குறித்து இன்று காலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜாக்குவார் தங்கம் கூறியதாவது:

தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி என்பவர் கில்டில் ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பை பதிவு செய்தார். நாங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய சங்கங்களை முறையாக விசாரித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே தலைப்பை கில்டு (GUILD) சார்பாக பதிவு செய்தோம்.

தற்போது முழு திரைப்படத்தையும் முடுத்து விட்டதோடு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பில், தயாரிப்பாளர் பிச்சாண்டி தணிக்கை சான்றிதழும் பெற்றுவிட்டார்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் பிச்சாண்டிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

அதேபோல், தயாரிப்பாளர் வாகனத்தில் செல்லும் போதும் சிலர், அவரை தலைப்பை மாற்றும்படி மிரட்டியுள்ளனர்.

தயாரிப்பாளரின் நண்பர் சரவணனையும் இது தொடர்பாக மிரட்டியுள்ளனர்.

மத்திய அரசு அங்கீகரித்த தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்ல நீங்கள் யார்? அப்படியே அந்த தலைப்பில் எதாவது பிரச்சனை என்றால், அது குறித்து சங்கத்தில் புகார் அளிக்கலாம்.

அதை விட்டுவிட்டு தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் மிரட்டுவது சரியல்ல. இனியும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தால், காவல்துறையில் சங்கம் சார்பாக புகார் அளிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு துணையாக நிற்போம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.

Jaguar Thangam supports Tamil Rockers film producer

More Articles
Follows