தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
1990-களில் அடல்ட் ஒன்லி படங்களில் நடித்து கவர்ச்சி பாம் என பெயர் பெற்றார்.
மலையாள நடிகையான இவர் ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாகியுள்ளனர்.
இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருக்கிறார்.
நேரிடையாக இந்தியில் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட ஷகிலா பேசும் போது…
“சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்றை சொல்கிறேன்.
என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள்.
பெண்களுக்கு ஷகிலா படம் மேசேஜ் சொல்லும் படமாக இருக்கும்” என்றார்.
Actress Shakeela talks about her biopic
