பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டார்ச் லைட் எடுக்கும் அந்நியன் நாயகி

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டார்ச் லைட் எடுக்கும் அந்நியன் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sadha act as Prostitute in Torch light movieநடிகை சதா தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட் ‘ என்கிற படத்தை தயாரிக்கிறார்.

டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் அந்நியன் பட நாயகி சதா.

பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து ‘தமிழன் ‘படத்தை இயக்கிய அப்துல் மஜீத்.

கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது.

இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது.

பெண்களைப் போதைப் பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.

இது ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது. படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள்.

நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது, ” நான் முதலில் இயக்கிய “தமிழன்” படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அது பரவலான பாராட்டு பெற்றது மட்டுமல்ல பெரிய வெற்றியும் பெற்றது.

அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் டார்ச் லைட் டுக்கான விஷயம் மனதில் பதிந்த போது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது. நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது.

வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் .

இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாகப் உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து இருந்தேன்.

நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறிய போது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர். இப்படி 40 பேரிடம் சொல்லியிருப்பேன்.

கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோப் பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார். தான் நடிக்கச் சம்மதம் என்றார்.

இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். அதே போல நடிகை ரித்விகாவும் கதை கேட்டு கலங்கிக் கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.” என்கிறார் மஜீத்.

படத்தின் பிரதான பாத்திரத்தை சதா ஏற்க ரித்விகா, புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இது 90களில் நடக்கும் கதை என்பதால் பலவற்றைக் கவனிக்க வேண்டியிருந்ததாம்.

அப்போது இருந்த இரு வழிப் பாதைகள் எல்லாம் இப்போது நான்கு வழிப்பாதைகளாக மாறி விட்டன. எனவே சிரமப்பட்டு இடங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படமாக்கியுள்ளனர். செல்போன், டிவி எல்லாம் இல்லாமல் படமாக்க வேண்டியிருந்ததாம்.

டார்ச் லைட் படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து, எடிட்டிங் -மாரீஸ், கலை -சேகர், நடனம் – சிவராகவ், ஷெரீப்.

தயாரிப்பு அப்துல் மஜீத்,
எம். அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்.

Actress Sadha act as Prostitute in Torch light movie

sadha in torch light movie

பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்தை பார்க்க 10 காரணங்கள் இதோ…

பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்தை பார்க்க 10 காரணங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

10 reasons to watch Majid Majidi’s next Beyond The CloudsOscar nominated Iranian auteur Majid Majidi, known for his poetic cinematic narrative in films like Children of Heaven, The Colors of Paradise, The Song of Sparrows, Baran is ready to release his first film Hindi language film – Beyond The Clouds worldwide this Fri – ie April 20

Produced by Zee Studios and Namah Pictures, Beyond the Clouds has undoubtedly been this year’s most talked about and anticipated film for various reasons and those along with many others are reasons why you should not miss this cinematic masterpiece in the threates!

Here goes :
1. The Oscar nominated Iranian director shot this film in India with an all Indian crew!

2. A brother-sister story, this film launches Bollywood newest stars – Ishaan Khatter and Malavika Mohanan

3. When two legends unite, you can expect sheer magic. And that’s exactly one can expect from the musical partnership of AR Rahman and Majid Majidi in Beyond The Clouds.

4. In addition to A R Rahman, the film brings together some of the best Indian artists and technicians and boasts of a powerful line up : Hindi Dialogue Writer : Vishal Bharadwaj, DOP : Anil Mehta, Casting Director : Honey Trehan

5. The film is a story set against the backdrop of the city of dreams – Mumbai. The island city is shot in a way like it has never been seen on the big screen before. All courtesy the vision of Majid Majidi and the genius of DOP Anil Mehta creating perceptive moments against the exhilarating colors of Mumbai.

6. Keeping in sync with Majid Majidi’s world of cinema, this film too is a beautiful take on human relationships – highlighting the dreams and hustle of a brother-sister duo. The film showcases the inner struggle of protagonists between good and evil, light and dark, insanity and acceptance of life as it is.

7. The magic of Rahman’s music brings out the core of Mumbai in the two most popular tracks of the film’s album – Ey Chote Motor Chala and Aala Re

8. The film has traveled and been premiered in film festivals – London, Busan, Dubai, Palm Springs, Istanbul and IFFI in Goa. It has been hugely appreciated with rave reviews across each of them.

9. The film is a pioneering effort to put an Indian story on the global map by virtue of its universal theme centred around hope and relationships that go beyond the bounds of blood

10. Beyond the Clouds is being referred to by some as the grown-up version of Majid Majidi’s Oscar nominated film Children of Heaven

விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் காரணம்..: எஸ்ஏசி ஓபன் டாக்

விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் காரணம்..: எஸ்ஏசி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director SAC talks about Vijayakanths huge contribution to Vijays successவிஜயகாந்த் திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

எனவே அவருக்கு தேமுதிக சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, சத்யராஜ் உள்ளிட்ட பல திரையுல பிரபலங்கள் கலந்துக கொண்டு வாழ்த்தினர்.

அப்போது விழாவில் பேசிய எஸ்ஏ. சந்திரசேகர் பழைய நினைவுகளைப் பற்றி மீண்டும் பேசினார்.

“என் மகன் விஜய் நடிகனாக ஆசைப்பட்டதும், நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை.

விஜயகாந்துடன் இணைந்து நடித்தால் அவரால் நல்ல நடிகராக முடியும் என்று நினைத்தேன்.

விஜய்யைப் பற்றி விஜயகாந்திடம் சொன்னதும், எப்போது ஆரம்பிக்கிறோம் என்று உடனே சம்மதம் சொன்னார். அவருடைய சம்பளம் பற்றி கேட்டதும், முதலில் ஷுட்டிங்கை ஆரம்பியுங்கள், விஜய் நல்ல நடிகராக வரட்டும் பின்னர் பேசுவோம் என்றார்.

செந்தூரபாண்டி படம் எடுத்து முடித்தோம், பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகள் மிகப் பெரிய இடத்தில் உள்ளன,” என்று பேசினார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ 1981 படம்தான் விஜயகாந்தை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Director SAC talks about Vijayakanths huge contribution to Vijays success

Captain 40 Celebration Photos (20)

நாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.? நம்பிக்கையில் திரையுலகினர்!

நாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.? நம்பிக்கையில் திரையுலகினர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cine Industry expect will Strike come to an end 17th April 2018கியூப் டிஜிட்டல் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரைத்துறையினர் கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதனால் புதுப்படங்களோ, அது தொடர்பான சினிமா நிகழ்வுகளோ நடைபெறவில்லை.

இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள், கியூப் நிறுவன நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள்கள் அனைத்தும தோல்வியில் முடிந்தது.

எனவே ஏரோக்ஸ் உள்ளிட்ட புதிய டிஜிட்டல் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நாளை ஏப்ரல் 17 முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர்கள் ரோகினி பன்னீர் செல்வம், அபிராமி ராமநாதன், மற்றும் கியூப் நிறுவன அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள் என கூறப்படுகிறது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய விஷயங்கள் பற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று கூடி விவாதித்தனர்.

அப்போது கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்டுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதியின் அடிப்படையில்தான் புதுப்படங்களை ரிலீஸ் செய்வது எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.

Cine Industry expect will Strike come to an end 17th April 2018

தெலுங்கு மொழி படங்களில் சத்யராஜ் நடிக்க இதான் காரணமா..?

தெலுங்கு மொழி படங்களில் சத்யராஜ் நடிக்க இதான் காரணமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathyarajசென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலு மகேந்திரா நூலகம் தொடங்கப்பட்டது.

நடிகர்கள் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம், சுப்பிரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் இதை தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யராஜ் பேசும் போது…

“நான் நடித்த ‘கடலோர கவிதைகள்’ படம் பார்த்து விட்டு சிவாஜி என்னிடம், “ அடுத்த 10 வருடங்களுக்கு உன்னை யாரும் அசைக்க முடியாது” என்றார்.

‘வேதம்புதிது’ பார்த்து விட்டு எம்.ஜி.ஆர். என் கையை பிடித்து முத்தம் கொடுத்தார்.

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் பார்த்த பாலுமகேந்திரா என்னை கட்டிப் பிடித்து கண் கலங்கி பாராட்டினார். அவர்கள் பாராட்டு நான் வளரஉதவியது.

அஜயன் பாலா எழுதிய ‘மர்லன் பிராண்டோ’ புத்தகத்தை படித்த பிறகு தான் மொழி தெரியாத படங்களிலும் நடிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். தெலுங்கு படங்களில் நடித்து சம்பாதிக்க தொடங்கினேன்.

அதற்கு காரணமான அஜயன் பாலா தொடங்கிய இந்த நூலகத்துக்கு பெரிதாக உதவவேண்டும் என்று நினைக்கிறேன். விரைவில் அதை அறிவிப்பேன்” என்றார்.

தொடர்ந்து வெற்றிமாறன், ராம், ஏ.எல்.விஜய், ரோகிணி உள்பட பலர் பேசினார்கள்.

நிகழ்ச்சி முடிவில், கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு சத்யராஜ் கண்கள் கலங்க இரங்கல் தெரிவித்தார்.

விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் ஆசிபாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

மீண்டும் இம்சை அரசனாக முடியாது; ஷங்கர் படத்திலிருந்து விலகிய வடிவேலு

மீண்டும் இம்சை அரசனாக முடியாது; ஷங்கர் படத்திலிருந்து விலகிய வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadiveluடைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கி வடிவேலு இரு வேடங்களில் நடித்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

சரித்திர காலத்து படம் என்றாலும் காமெடியாக எடுக்கப்பட்டதால் குழந்தைகள் முதல் அனைவரையும் இப்படம் கவர்ந்தது.

இந்நிலையில் இதே கூட்டணியில் இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகவிருந்தது.

இம்சை அரசன் 24ம் புலிகேசி என்று பெயரிடப்பட்டு இதன் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து விலகுவதாக வடிவேலு அறிவித்துள்ளார்.

எனவே அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

எனவே வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கு பதில் அளித்து நடிகர் சங்கத்துக்கு வடிவேல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க 1-6-2016-ல் ஒப்புக்கொண்டேன். 2016 டிசம்பருக்குள் படத்தை முடித்து விடுவதாகவும் அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால் வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.

ஆனால் டிசம்பர் 2016 வரை படப்பிடிப்பை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர். ஆனாலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு தேதிகளில் அந்த படத்தில் நடித்து கொடுத்தேன்.

இந்த நிலையில் என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ்.பிக்சர்ஸ் (ஷங்கர் பட நிறுவனம்) நிறுவனம் நீக்கியது.

அத்துடன் கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து அந்த கடிதத்தில் ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

நான் நடித்து தர மறுத்து இருந்தால் பட நிறுவனம் ஏன் டிசம்பர் 2016-க்குள் புகாரை தரவில்லை.

ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு 2016-2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன்.

இதனால் எனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு என்னை நேரில் அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது.

இந்த படத்தில் நாசர் நடிப்பதால் நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால் நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார் வடிவேலு.

More Articles
Follows