“இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது”; நடிகை சச்சு பெருமிதம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்’ சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சச்சு கூறியதாவது,

“எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம்தொட்டு கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.. இப்போதுள்ள இயக்குனர்கள் எனக்கென்று ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறி என்னை அழைப்பதையே மிக பெருமையாக நினைக்கிறேன்.. இப்போதைய கலைஞர்கள் எங்களுக்காக என எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.. ஆனால் நான் அவர்களுக்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்கிறேன்.

அதனால் தான் இந்த படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரம் என்றதும் என்னால் எளிதில் ஒப்புக்கொள்ள முடிந்தது. இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது. வயதானாலும் கூட பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த கதாபாத்திரம் போன்றே இப்போதும் கூட நிஜத்தில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன்.. அதைத்தான் இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறேன்..

பெண்கள் எந்த வயதில் இருந்தாலும் தங்கள் அழகை பேணிக்காப்பதில் அக்கறை காட்டவேண்டும். அதற்கு பியூட்டி பார்லர் தான் போக வேண்டுமென கட்டாயமில்லை.. இயற்கையான முறையிலேயே தங்களது அழகை வெளிப்படுத்தலாம்.. இந்த விஷயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை எங்கே எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறது. சில தவறான இடங்களில் அதை பயன்படுத்தும் போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன அதன் பிரச்சனைகள் என்ன என்பதை தான் இந்த பேரழகி ‘ஐ எஸ் ஓ’ படத்தில் முக்கியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயன். அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயன்” என்கிறார் சச்சு.

CROWD FUNDINGல் தயாரான நெடுநல்வாடை-க்கு கிடைத்த பாராட்டுக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் பூராமு, இளங்கோ, அஞ்சலி நடித்த ‘நெடுநல்வாடை’ படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தை பார்த்த அனைவரும் தங்கள் பாராட்டுக்களை தெரித்தனர்.

இதனிடையில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட (Innovatie Film Acadamy (IFA) ‘நெடுநல்வாடை’ படம் அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது.

அதன்பின்னர் இயக்குனர் செல்வக்கண்ணன் பேசியதாவது,

பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

எங்களை அங்கீகரித்த குழுவினருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி.

தமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் நெடுநல்வாடை.

என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேசினார்.

Nedunalvaadai movie got award news and updates

‘இராவண கோட்டம்’ படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.

சாந்தனு நடிக்கவுள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

இதில் சாந்தனு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கவுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

Kayal Anandhi joins Shanthanus Ravana Kottam

சிவகார்த்திகேயனை அடுத்து மீண்டும் சூர்யாவை இயக்கும் பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தற்போது சன் டிவி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் பாண்டிராஜ்.

இந்த நிலையில் சூர்யாவுக்காக ஒரு பக்காவான கிராமத்து கதையை உருவாக்கி வைத்திருக்கிறாராம் பாண்டிராஜ்.

இதற்கு முன்பே சூர்யா நடித்து தயாரித்து பசங்க 2 படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandiraj plans to direct Suriya again for his new movie

எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் கோமாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்களும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர் போல இருக்கிறது. முந்தைய படமான “அடங்க மறு” உட்பட தொடர்ந்து கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்து வரவிருக்கும் கோமாளி படத்தை காமெடி மற்றும் எமோஷன் கலந்த முழுநீள பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, “ஆம், நாங்கள் நகைச்சுவை அம்சங்களை கொண்ட குடும்பத்துடன் ரசிக்கும் முழுநீள பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே, ஜெயம் ரவி சார் தனி ஒருவன் மற்றும் அடங்க மறு போன்ற திரைப்படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிப்பதையே பார்த்து வந்திருக்கிறோம். இது காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். இது சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம், இறுதியில் நல்ல ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயம் ரவி சார் 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுவார், 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் ஆகியோர் படத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார்கள். YouTube பரிதாபங்கள் புகழ் RJ ஆனந்தியை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர் ஒரு தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் ஒரு நல்ல அனுபவமுள்ள நடிகை, அவர் எப்போதும் நடிப்பை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார். ஒவ்வொரு முறையும், ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் ஜோடியை நான் பார்க்கும் போது, ஒரு மேஜிக்கை உணர்வேன். ரசிகர்களும் அதை உணர்வார்கள் என நம்புகிறேன். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரம் இந்த கதைக்கு தேவைப்பட்டது. அத்துடன் அவர் சிறப்பாக நடிப்பவராகவும் இருக்க வேண்டும். எனவே கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே அதை சரியாக செய்வார் என்று நினைத்து அவரை நடிக்க வைத்திருக்கிறோம். கன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான நடிகையாக புகழ் பெற்றவர் அவர். அவரது நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும், பாராட்டப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவை பற்றி அவர் கூறும்போது, “அவர் இளைஞர்களின் இசை சின்னமாக மாறிவிட்டார், மேலும் இந்த படத்தில் மிகவும் சுவாரஸ்யமான பாடல்களை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். குறிப்பாக ‘பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல், காஜல் அகர்வால்க்கு கோயில் கட்டப்பட, அது ஒரு பப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதாக இருக்கும். பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது, ரசிகர்கள் அதை கேட்டு ரசிப்பதை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்த கோமாளி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

“இந்தியத்தாயின் பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” – இயக்குனர் அமீர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், தேச ஒற்றுமைக்குப் பாடுபட்டவருமான சர் முகமது இக்பால் என்பவர் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனும் பாடலை, தமிழ்க் கவி வேந்தர் மு.மேத்தா அவர்கள் மொழிபெயர்த்து, இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்து, நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய “தாயே, இந்தியத் தாயே …” எனும் பாடலை கவிக்கோ மன்ற நிறுவனரும் சிங்கைத் தமிழருமான எம்.ஏ.முஸ்தபா அவர்கள் தயாரித்திருக்கிறார்.

இவ்வளவு நாட்கள் ஒரு இசையமைப்பாளராக நாம் பார்த்துவந்த தாஜ்நூர் இந்த பாடல் மூலமாக ஒரு சிறந்த இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.. ஆம்.. இன்றைய சூழலில், ஒரு பாடல் இசையால் மட்டும் பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்ந்துவிடாது.. அந்த பாடலுக்கு ஏற்றாற்போல் காட்சியமைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த பாடல் முழு வெற்றி அடையும் என்பதில் தாஜ்நூர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.. அந்தவிதத்தில் இந்தப்பாடலுக்கு இசையமைத்ததது மட்டுமில்லாமல், 6 மாதங்களுக்கும் மேலாக பாடலுக்கான காட்சி வடிவத்தையும் இயக்கி, ஒரு இயக்குனராகவும் தனது பங்களிப்பை செய்துள்ளார். இதன் மூலம் திரையுலகில் தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த இசைப்பாடலை ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் வெளியிட இயக்குனர் அமீர் பெற்றுக்கொண்டார் பாடல் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மு.மேத்தா, தாஜ்நூர், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், இயக்குனர் மீரா கதிரவன், எம்.ஏ.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்..

இதில் இயக்குனர் அமீர் பேசும்போது,

“இந்த விழாவுக்கு கிளம்பும்போது இந்தியத்தாயை வாழ்த்த கிளம்பி விட்டீர்களா..? அப்படியென்றால் தமிழ் தேசியம் என்னாயிற்று என்று சிலர் கேட்டார்கள்.. நானும் இந்தியத்தாயின் பிள்ளையாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன்.. பாரத மாதாவின் காலடியில் இருக்கிறோம் என்றாலும் தாயின் காலடியில் தான் சொர்க்கம் என்பது போல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.. ஆனால் முகத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை காலுக்கு கொடுப்பதில்லை.. பாரத மாதாவின் காலாக இருக்கும் தமிழகத்தை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஆனால் கால் இல்லாமல் வாழவே முடியாது என்பதை மறந்து விடுகின்றனர்.

இன்று செய்வதற்கே அஞ்சுகின்ற பஞ்சமா பாதகச்செயலை செய்பவர்கள் கூட ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷமிட்டுக் கொண்டு செல்கிறார்கள்.. தேசத்தை நேசிக்காமல் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செல்லும் அவர்களை விட, இந்த தேசத்தை யார் உண்மையாக நேசிக்கிறோம் என்பது மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த பாடல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் எண்ணமாகவும் தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என” கூறினார் அமீர்.

More Articles
Follows