‘தொடையழகி’ தொட்டதெல்லாம் தொழிற்சாலை.; ரம்பாவின் போட்டோஸ் வைரல்

‘தொடையழகி’ தொட்டதெல்லாம் தொழிற்சாலை.; ரம்பாவின் போட்டோஸ் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகிய லைலா.. இவளது ஸ்டைலா.. என்ற இந்த பாடலைக் கேட்டால் நாம் நினைவுக்கு வருவது ரம்பாவும் அவரது தொடை அழகும் தான்.

1990களில் தன் தொடை அழகால் தென்னிந்திய ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை ரம்பா.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சத்யராஜ் ஆகியோருடன் நடித்துள்ளார்.

மேலும் அஜித் , விஜய் , பிரசாந்த் ஆகியோருடனும் டூயட் பாடியுள்ளார் ரம்பா.

அவர் 2010ல் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் திருமணம் இல்லற வாழ்க்கை என்ற செட்டிலாகி சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்பா தனது குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.

ரம்பாவின் கணவர் இந்திரகுமார் கனடாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.

கிட்சன் உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை தான் அது.

சமீபத்தில் ரம்பா அவரது குடும்பத்துடன் அந்த தொழிற்சாலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டு இருக்கிறார்…

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்பா

Actress Rambha photo with family goes viral

JUST IN ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்.; அவரது வாழ்க்கை தொகுப்பு

JUST IN ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்.; அவரது வாழ்க்கை தொகுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராசர் மற்றும் பாடலாசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர் நெல்லை கண்ணன்.

இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டுமென்றால்
. youtube தளங்களில் இவரது பேச்சு பிரபலம்.

பெருந்தலைவர் காமராஜரிடம் நெருங்கி பழகியதால் இவர் சொல்வதில் யதார்த்தம் உண்மை கலந்திருக்கும். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் இவரின் கம்பீர குரல் ஒலித்து வந்தது.

பாற்கடல் போல் தமிழ் மொழியில் புலமைப் பெற்றிருந்ததால் இவரை தமிழ்க்கடல் என்று அழைத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

77 வயதான இவர் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் இன்று மதியம் காலமானார்.

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

நெல்லை கண்ணன் வாழ்க்கை தொகுப்பு :

சுப்பையா பிள்ளை இலக்குமி அம்மையார் ஆகியோரின் 4-வது மகனாக 1946ல் பிறந்தவர். தகப்பனார் குடும்பம் நெல்லையை பூர்விகமாகக் கொண்டது.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீது தனியாத ஆர்வம் கொண்டவர்.

பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையும் கற்றவர்.

பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர்.

இவரது பேச்சாற்றலும், நினைவாற்றலும், பேச்சு இலக்கிய நயமும் சிறப்பாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், இளம் வயது முதலே கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் கண்ணன்.

சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது, அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றியவர்.

பிரதமராக ராஜீவ் காந்தி இருந்த நிலையில், பிரசாரத்திற்காக அவர் நெல்லை வருகை தந்தபோது இவரது வீட்டில் மதிய உணவு எடுத்துக்கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போது இவருக்கு திருநெல்வேலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இரு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

1996ல் சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார்.

ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்த தாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை.

தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.

Tamil orator Nellai Kannan passed away

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவின் திருமண அப்டேட்

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவின் திருமண அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் இரு வேடங்களில் நடித்த ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா.

இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘குஷி’ என்ற படத்தை இயக்கி அந்தப் படத்தையும் வெற்றி படமாக்கி காட்டினார்.

இதன் பின்னர் நியூ’ படத்தின் மூலம் அவரே கதையின் நாயகனாக அறிமுகமானார்.

இதன் பின்னர் சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். அந்த படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில் திடீரென இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார்.

இதன் பின்னர் இறைவி, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை ஒரு குணச்சித்திர நடிகராகவும் காட்டினார்.

மெர்சல், டான், மாநாடு உள்ளிட்ட படங்களை வில்லனாக நடித்தும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார்.

அண்மையில் இவர் நாயகனாக நடித்த கடமையை செய் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்த வருகிறார்.

இந்த நிலையில் 52 வயதாகும் எஸ் ஜே சூர்யாவிற்கு அவரது குடும்பத்தார் பெண் பார்த்து வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது பெண் முடிவாகிவிட்டதாகவும் விரைவில் அது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Actor and director SJ Surya’s wedding update

விஜய்யின் ‘வாரிசு’ பட சூட்டிங்கில் செல்போனுக்கு தடை.; இதான் காரணமா?

விஜய்யின் ‘வாரிசு’ பட சூட்டிங்கில் செல்போனுக்கு தடை.; இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் படம் ‘வாரிசு’.

தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசை அமைக்கிறார்.

இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், பிரபு, யோகி பாபு, குஷ்பு, சங்கீதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

அதே நேரம் படப்பிடிப்பு வீடியோ & போட்டோக்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

பின்னர் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட காட்சியும் லீக்கான நிலையில் தற்போது மருத்துவமனைக் காட்சி ஒன்றும் கசிந்துள்ளது.

அதில்… ஸ்டிரெச்சரில் இருக்கும் சரத்குமாரை டாக்டரான பிரபு உள்ளே கொண்டு செல்கிறார். அவர்களுடன் விஜய்யும் செல்வது போல காட்சி இருக்கிறது.

அடிக்கடி காட்சிகள் லீக் ஆவதால் படப்பிடிப்பில் செல்போன் எடுத்து வர படக்குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cell phone ban on Vijay’s ‘Varisu’ shooting.; Is this the reason?

‘மங்காத்தா’ & ‘வேலாயுதம்’ பட மேஜிக் மீண்டும் நடக்குமா.? காத்திருக்கும் விஜய் – அஜித் ரசிகர்கள்

‘மங்காத்தா’ & ‘வேலாயுதம்’ பட மேஜிக் மீண்டும் நடக்குமா.? காத்திருக்கும் விஜய் – அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார்.

அஜித் நடித்து வரும் ‘ஏகே61’ படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இதில் அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

தற்போது ‘ஏகே61’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்றிருக்கிறார் அஜித். அங்கு சூட்டிங் நடந்து வருகிறது.

அதே போல வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, ஷாம், சரத்குமார், பிரபு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

எனவே இந்த இரு படப்பிடிப்புகளுக்கு மத்தியில் விஜய் & அஜித் ஒருவரையொருவர் சந்திப்பார்களா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் ‘மங்காத்தா’ & ‘வேலாயுதம்’ படங்களின் படப்பிடிப்பின்போது, இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Will ‘Mankatha’ & ‘Velayutham’ movie magic happen again?

40 கோடியை வேட்டையாடிய ‘விருமன்’.; சூர்யா கார்த்திக்கு வைரங்களில் பரிசளித்த சக்திவேலன்

40 கோடியை வேட்டையாடிய ‘விருமன்’.; சூர்யா கார்த்திக்கு வைரங்களில் பரிசளித்த சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.

அத்துடன் ‘விருமன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.

‘விருமன்’ படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனுக்கும், படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார்.

இந்த படத்தின் இயக்குநரான முத்தையாவிற்கும் வைர மோதிரத்தை பரிசளித்து உற்சாகப்படுத்தினார்.

நடிகர் சூர்யா ‘விக்ரம்’ படத்தில் நடித்ததற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார் என்பதும், தற்போது ‘விருமன்’ படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Distributor Sakthivelan gifted Surya and Karthi with diamonds

More Articles
Follows