மீண்டும் விஜய்சேதுபதி் படத்தில் போலீஸாக இணைந்த ராதிகா

மீண்டும் விஜய்சேதுபதி் படத்தில் போலீஸாக இணைந்த ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஸ்ரீராம் ராகவன்.

இவர் அந்ததூண், ஏஜெண்ட் வினோத் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

‘அந்தாதூன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைபெற்ற நிலையில் தற்போது தமிழில் பிரசாந்த் நடிப்பில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணையும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீராம் ராகவன்.

(ஏற்கனவே ‘மும்பைகார்’ என்ற பாலிவுட் படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.)

’96’ படம் ஹிந்தி ரீமேக் குறித்து விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா.?

‘மேரி கிறிஸ்துமஸ்’ படம் தமிழில் வெளியாகி ஹிட்டான ‘மாநகரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அதில் முனீஸ்காந்த் நடித்த கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தை ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே தயாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராதிகா படப்பிடிப்பு தளத்தில் கேத்ரினா உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில், “ஒரு வாரமாக காத்ரினா கைஃப்போடு பணிபுரிந்தேன். உன்னதமான நபர்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நாயகனின் அம்மாவாக போலீஸ் கேரக்டரில் ராதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Radika joins the sets of Merry Christmas

ஜெய் படத்திற்காக ரூ 1 கோடி மதிப்பில் கார்கோ விமான செட்

ஜெய் படத்திற்காக ரூ 1 கோடி மதிப்பில் கார்கோ விமான செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சிகள் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்டில், மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்…

சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது.

ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய ஆக்சன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் தானே ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தார்.

படப்பிடிப்பு முழுவதும் ஜெய் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்து ஒத்துழைத்ததால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது.

இத்திரைப்படத்தில் பானு ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா, மோகன்ராம், தேனப்பன், பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.

தொழில் நுட்ப குழுவில் ஒளிப்பதிவு- ஜானி லால் / செவிலோராஜா D. F. Tech, படத்தொகுப்பு – ஆண்டனி, இசை – விஷால் பீட்டர், கலை இயக்கம் – N.M.மகேஷ், Vfx மேற்பார்வையாளர் – பிரபாகர், ஸ்டண்ட் – ஸ்டன்னர் சாம், நடனம் – ராதிகா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Rs 1 crore-worth flight set put up for Jai’s superhero film

‘தெலுங்கில் நஸ்ரியா அறிமுகம்..; 3 மொழிகளில் ரிலீசாகும் நானியின் புதிய படம்

‘தெலுங்கில் நஸ்ரியா அறிமுகம்..; 3 மொழிகளில் ரிலீசாகும் நானியின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா= பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான ‘அன்டே சுந்தரனக்கி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இணைந்து முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’.

இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.

இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது.

இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார்.

இதன் காரணமாகவே அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றவேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.

இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். அவரது பெயரே அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை குறிக்கிறது.

இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை.

இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் பிரத்யேக முத்திரை அவரது எழுத்திலும், இயக்கத்திலும் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் விவேக் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.

மைத்திரி மூவி மேக்கர் தயாரிப்பு என்பதால் இந்தப்படத்தின் தரம் முதன்மையானதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரத்தியேக வசன உச்சரிப்பு, இப்படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது.

அதே தருணத்தில் நடிகை நஸ்ரியா நசீம் உடனான அவரது கெமிஸ்ட்ரி, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. நானி மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நகைச்சுவை பகுதியை சிறப்பித்திருக்கிறார்கள். ரவிதேஜா கிரிஜாலா இப்படத்தை தொகுத்திருக்கிறார்.

அண்மையில் வெளியான டீஸர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானளாவிய அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

இந்தப்படம் தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘ஆஹா சுந்தரா’ என்ற பெயரிலும் ஜூன் 10ஆம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.

நடிகர்கள்
நானி
நஸ்ரியா
பகத் ஃபாசில்
நதியா
ஹர்ஷவர்தன்
ராகுல் ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு
எழுத்து & இயக்கம். : விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி & ரவிசங்கர். ஒய்.
தயாரிப்பு நிறுவனம் : மைத்திரி மூவி மேக்கர்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி : செர்ரி
இசை : விவேக் சாகர்
ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி
படத்தொகுப்பு : ரவிதேஜா கிரிஜாலா
தயாரிப்பு வடிவமைப்பு : லதா நாயுடு
விளம்பர வடிவமைப்பு : அணில் & பானு
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Adade Sundara Teaser Dropped

மொபைல் போனை விழுங்கியதால் சாக கிடக்கும் நோயாளி பற்றிய சாங்

மொபைல் போனை விழுங்கியதால் சாக கிடக்கும் நோயாளி பற்றிய சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு மருத்துவர் (பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின் (அனிவீ) சோக கதையை கேட்கும் ஒரு ஃபன் வீடியோ தான் இது.

நீங்கள் வாசித்தது சரி தான்- மொபைல் போனை விழுங்கிவிட்டான், இது பற்றி இயக்குனரிடம் (சன்மார்கன்) கேட்டதற்கு அவர் கருத்து எதுவும் கூறவில்லை.

பாடலின் வரிகள் 2010-ன் பாப் கலாச்சாரத்தை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஹீரோ அவனது காதலை வெளிபடுத்த முடியாததை பற்றி கூறுவது போன்று எழுதபட்டுள்ளது.

இந்த வித்தியாசமான கான்செப்ட்க்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பாடல்வரிகள் அமைக்கபட்டுள்ளது.

பிராங்க்ஸ்டர் ராகுல் ஒரு நடிகனாக அவரது திறனை தாண்டி, இதை புரிந்து கொண்டு இந்த பாடலுக்கு ஏற்ற அசத்தலான நடனத்தை கொடுத்துள்ளார்.

சுரேன்.M பாடலின் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் அர்விந்த் கைலாசம் பாடலுக்கு ஒரு புது திரை வண்ணத்தை அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிவீ அவரது முழு திறமையையும் செலுத்தி, ஒரு அற்புதமான பிரேக்கப் பாடலை கொடுத்துள்ளார். பாடல் பற்றி கேட்டதற்கு அனிவீ. ”இது ஒரு சோக பாடல்” என கூறினார்.

அந்தோனி தாசன், அனிவீயுடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார். “மயக்கிறியே” என்ற வெற்றி பாடலுக்கு பிறகு இசையமைப்பாளர் அனிவீ, சரிகம உடன் இணையும் இரண்டாவது பாடல் இது.

Luck illa maamey – a fun video song

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.

இவர் நடித்து அண்மையில் வெளியான ‘புஷ்பா’ படம் பான் இந்தியா படமாக வசூலில் சக்கைப் போடு போட்டது. இதில் இடம்பெற்ற ஓ.. சாமீ.. சாமீ… & ஊ சொல்றீயா மாமா… ஆகிய பாடல்கள் பட்டைய கிளப்பியது.

அல்லு அர்ஜுன் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அனைத்து துறைகளையும் அறிந்தவர் அல்லு அர்ஜூன்..; அசந்து நின்ற ‘அண்ணாத்த’ சிவா

ரெட் பஸ்… ராபிடோ உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்து வந்தார் அல்லு அர்ஜுன்.

இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று தங்களது புகையிலை விளம்பரப்படத்தில் நடிக்க அணுகி கோடிகளில் சம்பளம் தர தயாராக இருந்தனர்

ஆனால் புகையிலையை விளம்பரப்படுத்தினால் தன் ரசிகர்கள் & மக்கள் அதை பயன்படுத்த கூடும் என்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன்.

Allu Arjun turns down tobacco commercial despite being offered hefty salary

AK61 பட போஸ்டர் FIRE ma… விக்னேஷ் சிவன் பதிவால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி

AK61 பட போஸ்டர் FIRE ma… விக்னேஷ் சிவன் பதிவால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ படத்தை முடித்து விட்டு தன் AK 61வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்.

போனிகபூர் தயாரிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கி உள்ளது.

AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதனையடுத்து லைகா சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இப்பட படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளது.

AK61 பட சூட்டிங்கை தொடங்கினார் வினோத்.; அஜித்தின் ஹைதராபாத் ராசி.?

இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்..

“AK61 படத்தின் ரசிகர் உருவாக்க போஸ்டரை பகிர்ந்து Fire-ma என தெரிவித்துள்ளார்.

இந்த போஸ்ட்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Vignesh shivan appreciates fan’s art work

More Articles
Follows