ஜெயம் ரவியின் 25வது படத்தில் நடிப்பது பெருமை..; பூரிப்பில் ‘பூமி’ பட நடிகை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூக்குத்தி அம்மன் மற்றும் Hotstar Specials உடைய முதல் தமிழ் தொடரான ட்ரிப்ள்ஸ்-ன் அதிரடி வெற்றியை தொடர்ந்து, Disney + Hotstar VIP “பூமி” படத்தின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டது.

மேலும் இப்படம் தமிழகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனையை, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக, அதிஅற்புதமான தரத்தில் வழங்குகிறது.

ஜெயம் ரவி மற்றும் நிதி அகர்வால் நடித்துள்ள “பூமி” திரைப்படம், விண்வெளிக்கு செல்லும் சாகச பயணத்திற்கு முன், ஒரு தனி மனிதன் தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டத்தை அழகாக சொல்கிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறியதாவது…..

“பூமி” திரைப்படம் எனது மனத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு திரைப்படம். ஒரு சில கதைகள் தான் நேர்மறையான கருத்துக்கள் மூலம் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இப்படம்.

இயக்குனர் லக்‌ஷ்மண் பொழுதுபோக்கு அம்சத்தையும் இப்படத்தில் மிகவும் நேர்த்தியாக இணைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, எல்லோரும் குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கும் வகையில் கனகச்சிதமாக எடுக்கபட்ட படம். ஜெயம் ரவி மற்றும் நிதி அகர்வால் திரைப்பயணத்தில் “பூமி” திரைப்படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக இருக்கும்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும், மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு அற்புதமான திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

Disney + Hotstar VIP-ல் படம் வெளியாவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது…

ஜெயம் ரவி, இயக்குநர் லக்‌ஷ்மண் கூட்டணியுடன் இது எனக்கு மூன்றாவது படமாகும். ஒவ்வொரு முறையும் லக்‌ஷ்மண் ஒரு கதையுடன் வரும்போது அது அவரது முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தளத்தில் மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கும்.

ரோமியோ ஜூலியட், போகன், பூமி இவை ஒவ்வொன்றும் முற்றிலும் மாறுபட்ட கதைதளங்களில் வித்தியாசமான கதைசொல்லல் கொண்டிருக்கும்.

அவரது கதை மிக ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் இருப்பதால் அதை ஈடு செய்யுமளவு எனக்கு பெரும் சாவலை தரும். பூமி கதையை என்னிடம் கூறியபோது அதில் இசைக்கான வாய்ப்பு அதிகம் இருந்ததை உணர்ந்தேன்.

இந்த படத்தின் இறுதி வடிவத்தை கண்டேன் இப்படம் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொங்கல் விருந்தாக இருக்கும்

நாயகி நிதி அகர்வால் கூறியதாவது…

வழக்கமாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காக போராடும் நாயகனின் கதைகள் மற்றும் நாயகி பாத்திரம் அத்தனை கவனிக்கும்படியானதாக இருக்காது.

ஆனால் பூமி அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இப்படத்தில் என் நடிப்பு திறமையை காட்டுமளவிலான ஒரு பாத்திரம் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்.

ஜெயம் ரவி மிகவும் அன்பானவர் சேர்ந்து நடிக்கும் போது மிகவும் ஆதரவாக இருந்தார்.

அவரது அர்ப்பணிப்பும் சினிமா மீதான அபரிமிதமான காதலும் தான் மக்களிடம் அவருக்கு இத்தனை அன்பை பெற்று தந்துள்ளது. அவரது 25 வது படத்தில் பங்கு கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன்.

அனைத்து இடங்களிலும் எளிதில் கொண்டாடும்படியான படைப்புடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லக்‌ஷ்மன்.

இது 100 % குடும்பங்கள் கொண்டாடும் படம். Disney + Hotstar VIP இப்படத்தினை பொங்கல் திருநாளன்று அனைத்து வீடுகளுக்கும் விருந்தாக கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சி

மிகவும் அழுத்தமான கதை கொண்ட இப்படம் மிக பிரமாண்டமான நடிகர் குழுவை கொண்டுள்ளது.

நடிகர் ரோனித் ராய் எதிர்மறைதன்மை கொண்ட பாத்திரத்தில் நடிக்க அவருடன் சதிஷ், தம்பி ராமையா, தத்தோ ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படம் உழவர்களின் கொண்டாட்ட பண்டிகை சமயத்தில், பொங்கல் திருநாளில் 14 ஜனவரி 2021 அன்று Disney + Hotstar VIP வெளியாகிறது.

Actress Niddhi Agerwal is sharing her working experience in Bhoomi

‘வாட்ஸ் அப்’ அவ்ளோதானா..; இனிமே ‘அரட்டை’ அடிக்கலாம்.. Install பண்ணீட்டீங்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாட்ஸ் அப் என்ற செயலி பலரது வாழ்க்கையை மாற்றிவிட்டது எனலாம்.

காலையில் எழுந்தவுடன் பல் கூட தேய்க்காமல் வாட்ஸ் அப் ஆன் செய்து பார்ப்பதையே பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.. (நான் உட்பட)

கடந்த 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-ஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களை அவர்களது தொலைபேசி எண், இருப்பிடம் உள்ளிட்ட சுயவிவரங்களை பேஸ்புக்கில் பதிவிட வற்புறுத்தி வருகிறது.

மேலும் புதிய ப்ரைவசி பாலிசியால் பயனாளர்கள் பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற பிற செயலிகளை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் தமிழக பன்னாட்டு நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் ‘அரட்டை’ செயலி புதிதாக களமிறங்கியுள்ளது.

‘அ’ என்ற தமிழ் மொழியின் முதல் எழுத்தை லோகோவாக வைத்துள்ளனர்.

இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்திருக்கிறார்களாம்.

இன்னும் சில வாரங்களில் இந்த செயலி முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zoho develops WhatsApp alternative ‘Arattai’

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. யுவன் இசையமைக்கிறார்.

இதில் ‘ஈஸ்வர மூர்த்தி’ என்கிற காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் அஜித்.

ரஜினியின் ‘காலா’ புகழ் ஹீமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கிற்கு பின் இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது.

தற்போது ராஜஸ்தானில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடக்கின்றன.

இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் பரவியது.

அவரும் அஜித்துடன் இணைந்து பைக் ரேஸராக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்த தகவலை ‘வலிமை’ படத்தயாரிப்பு மறுத்துள்ளது.

Actor John Abraham is part of Valimai ?

ஆண்ட்ரியா & பூர்ணா இணையும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்க பாடிய சித் ஶ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார்.

இப்பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலை பாட அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார் பாடகர் சித் ஶ்ரீராம்.

ஏற்கனவே ‘பிசாசு 2’ படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு – T.முருகானந்தம் (ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்)
எழுத்து இயக்கம் – மிஷ்கின்
இசை – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – சிவா சாந்தகுமார்
க்ரியேடிவ் புரொடுயுசர் – K.B.ஶ்ரீராம்
லைன் புரொடுயுசர் – L.V. ஶ்ரீகாந்த் லக்‌ஷ்மணன்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கண்ணதாசன்

Sid Sri Ram croons for Mysskin’s Pisaasu 2

மூன்று மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனவரி 10 ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ‘வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ளார்.

இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளருமான எஸ்.பி.செளத்ரி தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு, ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.

படத்துக்கு இசை ஜிப்ரான்.

கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

நடுத்தர குடும்பத்து பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதால் கதையைக் கேட்டதுமே படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம் இந்த ‘டிரைவர் ஜமுனா’ ஐஸ்வர்யா.

Aishwarya Rajesh team up with Vathikuchi director for #DriverJamuna

தவறி விழுந்த மொபைல்..; பிடிக்க முயன்று கிணற்றுக்குள் விழுந்த நமீதா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழுந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் “பெளவ் வெளவ்” படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா.

படப்பிடிப்பு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் நடந்து கொண்டிருந்த போது, நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்தது.

கிணற்றுக்குள் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பதறிய போது, “கட் கட் சூப்பர்” என கை தட்டினர். இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா.

இந்த செய்தியை உண்மை என்று நம்பிய மக்கள் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டனர்.

நமீதாஸ் புரொடக்சன்ஸ் மற்றும் எஸ் நாத் பிக்சர்ஸ் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் “பெளவ் வெளவ்” படத்தின் வசனம் மற்றும் பாடல்களை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார்.

கிருஷ்ணா பி.ஏஸ். ஒளிப்பதிவு செய்கிறார். ரெஜிமோன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அனில் கும்பளா செய்திருக்கிறார்.

எஸ் நாத் ஃபிலிம்ஸ் சுபாஷ் மற்றும் நமீதாஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் பெளவ் வெளவ் படத்தை ஆர் எல் ரவி – மேத்யூ ஸ்கேரியா ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது.

இயக்கம் : ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா

ஒளிப்பதிவு: கிருஷ்ணா பி.எஸ்
இசை: ரெஜிமோன்

வசனம் & பாடல்கள்: முருகன் மந்திரம்

நிர்வாகத் தயாரிப்பு: சுரேஷ் புன்னசேரில்.

கலை இயக்கம் : அனில் கும்பளா.

சண்டை வடிவமைப்பு : ஃபையர் கார்த்தி.

படத்தொகுப்பு: அனந்து எஸ் விஜய்.

தயாரிப்பு: நமீதாஸ் புரொடக்சன்ஸ் & எஸ் நாத் ஃபிலிம்ஸ்.

மக்கள் தொடர்பு: இரா. குமரேசன்.

Actress Namitha fell into a well ? People panic !

More Articles
Follows