விசுவாசம் படத்துடன் மற்றொரு படத்திலும் நேற்றே கமிட்டான நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் வளர்ந்துள்ள `இமைக்கா நொடிகள்’ மற்றும் `கோலமாவு கோகிலா’ ஆகியவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனையடுத்து `கொலையுதிர் காலம்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதுதவிர அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று அஜித் அஜித் ஜோடியாக `விஸ்வாசம்’ படத்தில் நடிக்க கமிட்டானார்.

இதே நாளில் `லெக்‌ஷ்மி’, `மா’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்திலும் நயன்தாரா நடிக்கவுள்தாக செய்திகள் வெளியானது.

ரம்யாநம்பீசன் உறவினர் நடிகை திவ்யாஉன்னி 2வது திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாளையத்து அம்மன்,  கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளவர் மலையாள நடிகை திவ்யாஉன்னி.

இவர் மீரா நந்தன், ரம்யா நம்பீசன் ஆகியோரின் உறவினர் ஆவார.

இவர் 2002-ல் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கும் டாக்டர் சுதீஷ் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கே குடியேறினார்.

இந்த தம்பதியருக்கு அர்ஜுன், மீனாட்சி என்ற குழந்தைகள் உள்ளனர்.

சில காலங்கள் வாழ்ந்த பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

சமீபத்தில் விவாகரத்து பெற்ற திவ்யாஉன்னி தற்போது திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த மாப்பிள்ளையும் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யா உன்னியின் 2வது திருமணம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malayala Actress Dhivya Unni got 2nd marriage

கோடைக்கு ஒரு படம்; கிறிஸ்துமஸ்க்கு ஒரு படம்… கார்த்தி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்குடன் சாயிஷா, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை ஜீன் மாதம் கோடை விடுமுறைக்கு வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை 2018 கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இனிமே குழந்தைகள் என்னை பார்த்தா பயப்படுவாங்க… சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை கொடுத்து வருபவர்களில் முக்கியமான இயக்குனர் சுசீந்திரன்.

இவர் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்க `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து சுசீந்திரன் கூறியதாவது…

குழந்தைகளுடன் நடித்த அனுபவம் அருமையாக இருந்தது. குழந்தை அக்‌ஷித்தா நன்றாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே குழந்தைகள் பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் செய்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பெண் கிடைத்த சந்தோஷத்தில் சல்மான்கான்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் தன் 50 வயதை கடந்தார்.

ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இதனிடையில் நடிகைகள் ஐஸ்வர்யாராய் முதல் கேத்ரினா கைப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி வரை என பல நடிகைகளுடன் காதல் என வலம் வந்தவர் இவர்.

ஆனால் யாரையும் இவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தன் ட்விட்டரில் எனக்கு பெண் கிடைத்துவிட்டது என இந்தியில் டுவிட் செய்திருந்தார்.

இந்த செய்தியால் இவரது ரசிகர்களில் சிலர் அதிர்ச்சியையும் சிலர் இன்பஅதிர்ச்சி பெற்றனர்.

சிறிது நேரம் கழித்து அந்த பெண் தன் அடுத்த படத்தின் நாயகி என பதிவிட்டு அவரின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அந்த படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்க, ஆயுஷ் சர்மா நடிக்கவுள்ளார்.

அடுத்த வருடம் 2019 இல் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Salman Khan‏Verified account @BeingSalmanKhan
Mujhe ladki mil gayi

Salman Khan‏Verified account @BeingSalmanKhan
Nothing to worry na @aaysharma ki film #Loveratri ke liye ladki mil gayi Warina, Toh dont worry na be happy na

Bollywood Actor Salman Khan got new girl Aaysharma

மார்ச் 1ஆம் தேதி முதல் படங்கள் ரிலீஸாகாது; விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற மார்ச் 1ஆம் முதல் எந்த படங்களும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் அறிவித்துள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு….

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வணக்கம்.

தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச்-1ம் தேதி முதல், எங்களின் இந்த நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழக்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தமிழ்த் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த Digital Service Providers – க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.

எனவே தொடர்ந்து அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நமது தமிழ்த் திரையுலகமானது மிக மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை ஒரு கேள்விகுறியாகிவிட்டதை நாம் அனைவரும் அறிந்ததே !!

இந்த நிலை மாற, நமது நியாமான பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச்-1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படதினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி
– தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

More Articles
Follows