சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்; கலைஞருக்கு நயன்தாரா இரங்கல்

Actress Nayanthara condolence to Kalaignar Karunanidhiதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தனது 95 வயதில் காலமனார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாராவும் தன் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். அதில்,

தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.

நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்.

நாம் ஒரு காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிக சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகின்றோம்.

நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்து இருக்கிறது! அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை.

அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த மீளா துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.”

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

Actress Nayanthara condolence to Kalaignar Karunanidhi

Overall Rating : Not available

Latest Post