கைது செய்வது கனவில்தான் நடக்கும்.; சவால் விட்ட மீரா மிதுனை கைது செய்த சைபர் க்ரைம் போலீஸ்

கைது செய்வது கனவில்தான் நடக்கும்.; சவால் விட்ட மீரா மிதுனை கைது செய்த சைபர் க்ரைம் போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.

எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

எனவே இதுதொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இதனையடுத்து ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா.

அதில்..

‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.

என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.

ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என போலீசுக்கு சவால் விடும் வகையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Actress Meera Mithun arrested in Kerala by Chennai cyber crime police.

#MeeraMitun

கொல்கத்தாவில் வளரும் ‘கோப்ரா’..; விரைவில் வரும் விக்ரம்.!

கொல்கத்தாவில் வளரும் ‘கோப்ரா’..; விரைவில் வரும் விக்ரம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’.

இந்த படத்தை ‘டிமாண்டி காலனி’ & ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

விக்ரமிற்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார்.

இதில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதன் படப்பிடிப்பு சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ’கோப்ரா’ பட இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் தொடங்குகின்றனர்.

இதற்காக, அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்று உள்ளனர்.

விரைவில் விக்ரமும் கொல்கத்தா சென்று அங்கு படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

Chiyaan Vikram’s cobra shoot updates

யோகிபாபுக்காக ‘வீரப்பனின் கஜானா’-வை ஆகஸ்ட் 14ல் திறக்கும் ஜிவி பிரகாஷ்

யோகிபாபுக்காக ‘வீரப்பனின் கஜானா’-வை ஆகஸ்ட் 14ல் திறக்கும் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரித்துள்ள படம் , ‘வீரப்பனின் கஜானா’.

பிரபாதீஸ் ஷாம்ஸ், ‘ராட்சசி’ திரைப்பட இயக்குநர் கவுதம் ராஜ் இணைந்து எழுதியுள்ள கதையை புதுமுக இயக்குநர் யாசின் என்பவர் இயக்கியுள்ளார்.

காட்டின் பெருமையை சொல்ல ஃபேன்டஸி, காமெடி த்ரில்லர் கலந்து சொல்ல வரும் திரைப்படம் தானாம் ‘வீரப்பனின் கஜானா’.

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் குரங்கு, புலி, யானை என குழந்தைகளை கவரும் நிறைய சுவாரசியங்கள் நிறைந்திருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடிகர் ஜிவி. பிரகாஷ் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

Yogi babu in Veerappanin Gajana first look will be released by GV Prakash

இயக்குநர் பாலாவுக்கு மீண்டு(ம்) கை கொடுக்கும் ‘நந்தா & நாச்சியார்’

இயக்குநர் பாலாவுக்கு மீண்டு(ம்) கை கொடுக்கும் ‘நந்தா & நாச்சியார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரீமேக் படங்களை இயக்காத பாலாவை தனக்காக தன் மகனுக்காக ‘வர்மா’ படத்தை இயக்க வைத்தவர் விக்ரம்.

முழுப்படமும் ரெடியாகி இறுதியாக படமே சரியில்லை என தயாரிப்பாளர் சொல்ல படமே ரிலீசாகவில்லை. (ஓடிடி ரிலீஸ் வேறு கதை).

அதன்பிறகு பாலா படமே இயக்கவில்லை.

இந்த நிலையில் இயக்குநர் பாலா ஒரு புதிய படத்தை இயக்க அதை ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரிக்கப் போகிறார்கள்.

இந்த தகவல் சில மாதங்களாக பேசப்பட்டாலும் தற்போது உறுதியாகியுள்ளதாம்.

இந்த புதிய படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பாலா இயக்கத்தில் உருவான ‘பரதேசி’ படத்தில் அதர்வா நடித்துள்ளார்.

அதுபோல் பாலா இயக்கிய நந்தா & பிதாமகன் படங்களில் சூர்யாவும் ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriya and Jyothika joins for Bala’s film

நயன்தாராவின் உடல்மொழி பார்வையற்றவரை போலவே இருந்தது..; ‘நெற்றிக்கண்’ இயக்குனர் நெகிழ்ச்சி

நயன்தாராவின் உடல்மொழி பார்வையற்றவரை போலவே இருந்தது..; ‘நெற்றிக்கண்’ இயக்குனர் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம்
Disney Plus Hotstar தளத்தில் 2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது.

இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது…

எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் இதுபோன்ற வரவேற்பைப் பார்ப்பது எங்கள் குழுவிலுள்ள அனைவருக்கும் பெரிய உற்சாகததை தந்துள்ளது.

இதன் அனைத்து பெருமையும் நயன்தாரா அவர்களையே சேரும். இப்படத்தில் அவரது உழைப்பு, நம்பமுடியாத அளவு பிரமிப்பானதாக இருந்தது.

அவர் இப்படத்தில் ஒரு பார்வையற்ற நபராக நடிப்பதால், பார்வையற்றோரிடமிருந்து அவர்களின் அனுமதியுடன் நாங்கள் நிறைய குறிப்புகளைப் பெற்று, அதை படத்தில் பயன்படுத்தினோம். தயாரிப்பாளராக இருந்தபோதிலும், நயன்தாரா மேடம் இந்த வேடத்துடன் பொருந்துகிறாரா என்று சோதனை படப்பிடிப்பை நடத்த விரும்பினார் அதன் படி அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்தோம்.

அவர் உடல்மொழி பார்வையற்ற ஒருவரை போலவே இருந்தது. மேலும் அவர் இப்பாத்திரத்தில் மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளார். இத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் இந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் தந்த உழைப்பு அபாரமானது.

மிக கச்சிதமாக, நுணுக்கத்துடன் இந்த பாத்திரத்தை அவர் செய்துள்ளார். பார்வையற்ற பாத்திரம் என்றவுடனேயே இந்த பாத்திரம் எல்லாப்படத்தையும் போல, கருப்பு கண்ணாடி மாட்டி நடமாடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

கண்கள் தான் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி. அதனை முழுதாக வெளிப்படுத்த வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தோம்.

இப்படப்பிடிப்பில் எளிதாக கவனம் சிதறும் ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்து, நயன்தாரா அவர்கள் கண் தெரியாத ஒருவரை திரையில் அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார். படத்தில் இந்த பாத்திரம் இரண்டு முக்கியமான நிலைகளை கடந்து செல்லும்.

முதலில் அவருடைய கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வையில்லாத அதிர்ச்சியைக் கடந்து செல்லும். அப்போது மிக பலவீனமான நிலையில் இருக்கும்.

அந்த நிலையை கடந்து அமைதியான நிலையை அந்த பாத்திரம் அடையும்.

நீண்ட பொதுமுடக்கம் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தபோது, ‘இதுவும் கடந்து போகும்’ பாடலுக்காக, அவர் அதிக எடையைக் குறைத்ததைக் கண்டு, ஒட்டுமொத்த குழுவும் வியந்தது.

மக்கள் அவரை லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடுவது அவருக்கு பொருத்தமே. இப்படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

இந்த படத்தில் அனைவரது பங்களிப்பும், “நெற்றிக்கண்” படத்தை அருமையான படைப்பாக மாற்றியுள்ளது. ரசிகர்கள் கண்டிப்பாக இப்படத்தை கொண்டாடுவார்கள் என்றார்.

Rowdy Pictures சார்பில் விக்னேஷ் சிவன் இப்படத்தை Kross Pictures உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார் . R..D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Netrikkan director praises Nayanthara’s performance

ஜிவி பிரகாஷ் ஜோடியாக சுரபி நடித்த ‘அடங்காதே’ முதல் பாடல் வெளியானது

ஜிவி பிரகாஷ் ஜோடியாக சுரபி நடித்த ‘அடங்காதே’ முதல் பாடல் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“சைக்கோ” படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, Double Meaning Productions நிறுவனம் சினிமாவின் மற்ற துறைகளிலும் கால் பதிக்க துவங்கியுள்ளது.

அந்த வகையில் தனது புதிய இசை லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளது.

Double Meaning Productions நிறுவனத்தின் புதிய இசை லேபிள் மூலம் முதல் வெளியீடாக, G.V. பிரகாஷ் நடிப்பில், “அடங்காதே” படத்தின் பாடலை வெளியிடுகிறது.

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் இயக்குநர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…

சில திரைப்படங்களை தயாரித்தவன் என்கிற முறையில் ஒரு படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த நெருக்கத்தையும், படத்திற்கு மிகச்சிறந்த விளம்பரத்தையும் பெற்றுத்தரும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

அந்த வகையில் தான் Double Meaning Productions சார்பில், புதியதொரு மியூசிக் லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளோம்.

இந்நிறுவனத்தின் முதல் வெளீயீடாக, எங்கள் பெருமைமிகு படைப்பான “அடங்காதே” படத்திலிருந்து பாடலை வெளியிடுவது மிக மகிழ்ச்சி. இத்திரைப்படத்தை Sri Green Production நிறுவனம் தயாரிக்கிறது.

எங்கள் நிறுவனத்தில் சார்பில் முதல் பாடலான “நீ இன்றி நானா” பாடலை வெளியிடும் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ், ஹரீஷ் கல்யாண், அருண்ராஜா காமராஜ், இயக்குநர் சேரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக சுரபி நடித்துள்ள திரைப்படம் ‘அடங்காதே’.

இந்த திரைப்படத்தில் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Nee Indri Naana Video Song from Adangathey is out

More Articles
Follows