தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்ரம் நடித்து வரும் படம், ‘தங்கலான்’.
ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இதில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
KGF பாணியில் கோலார் தங்க வயல் பின்னணியில் இந்த படம் உருவாகிறது.
அதாவது ‘பீரியட்’ படமாக வளர்ந்து வருகிறது.
இந்தப் படத்துக்காக நடிகை மாளவிகா சிலம்பம் பயிற்சி செய்து வருகிறார். அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு சிலம்பம் என்ற அற்புதமான உலகத்துக்குள் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.