‘ரேசர்’ பட விழாவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் முல்லை லாவண்யா பேச்சு

‘ரேசர்’ பட விழாவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் முல்லை லாவண்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சதிஷ் இயக்கத்தில் அகில் – லாவண்யா நடித்துள்ள படம் ‘ரேசர்’.

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியலில் முல்லை என்ற கேரக்டர் நடித்து புகழ்பெற்றவர் லாவண்யா என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 7ஆம் தேதி ‘ரேசர்’ படம் வெளியாக உள்ள நிலையில் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

ரேசர்

அப்போது ஹீரோயின் லாவண்யா பேசியது…

நான் டிவிக்கு வருவதற்கு முன்பே எனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் சதீஷ். இந்த படம் ரொம்ப நன்றாக இருக்க காரணம் இயக்குனர் தான். ஹீரோ அகில் சந்தோஷ் என்னுடன் நட்பாக பழகினார்.” என்றார்.

ஹீரோ அகில் சந்தோஷ் பேசியது:*

இப்படத்தின் இயக்குனர் கனவு ரொம்பபெரியது, அதை தயாரிப்பாளர்கள் நிறைவேற்றியிருக் றார்கள்.எல்லோரும் கடுமையான உழைத்திருக்கிறோம். ரேஸர் பற்றிய கதை என்றாலும் அப்பா மகன் உறவை எதார்த்தமாக இக்கதை கூறும், எல்லோரும் அந்த்தந்த வேடத்தில் ஒன்றி நடித்திருக்கிறார்கள்.” என்றார்.

ரேசர்

*தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் பேசியது:*

நான் சிறுவயதாக இருக்குபோதே என் தந்தை இறந்துவிட்டார், அதன்பிறகு க‌ஷ்டப்பட்டு படித்தேன். ஓட்டல் வேலை முதல் எல்லா வேலையும் செய்து, பிறகு வியாபாரம் செய்து தற்போது ஒரு தயாரிப்பாளராக இங்கு நிற்கிறேன். ரேஸர் படம் எல்லோரையும் கவரும் படமாக இருக்கும்.” என்றார்.

மேலும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷ்ன் ஜெனிஸ், பைக்ரேஸ் சாமியன் ரஜினி கிருஷ்ணன், பி ஆர் ஒ சங்க தலைவர் டைமண்ட் பாபு, கேபிள் சங்கர், நடிகர் ராஜா, சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்
ஆர்.கே.அன்புச்செல்வன், காத்து கருப்பு கலை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

லாவண்யா

actress Lavanya speech at racer movie press meet

தமிழில் தலைப்பு வைங்க என்று கூறி ‘டாடா’ & ‘லவ் டுடே’ பட வெற்றியை பாராட்டிய பயில்வான்

தமிழில் தலைப்பு வைங்க என்று கூறி ‘டாடா’ & ‘லவ் டுடே’ பட வெற்றியை பாராட்டிய பயில்வான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ரேசர்”.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்கிறார் சதீஷ். பிரபாகர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசை அமைக்கிறார். கனியமுதன் அரங்கம் நிர்மாணிக்கிறார். சண்டை காட்சிகளை சீனு அமைக்கிறார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பு செய்கிறார்.

இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா நாயகியாக நடிக்கிறார்.

மேலும் ஆறுபாலா, ‘”திரவுபதி” சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படக்குழுவினர் பத்திரிக்கை, மீடியா நிருபர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள நடந்தது.

ரேசர்

நிகழ்ச்சியில் இயக்குனர் சதீஷ் பேசியது…

ரேஸர் படத்தை இந்தியன் ஐகான் பைக் ரேஸ் சாம்பியன் ரஜினி கிருஷ்ணன் தான் வழங்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன், அவர் இங்கு வந்திருப்பது சிறப்பு.

இவர் வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் சந்தித்திருக்கிறார். அவரைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன்.
சிலருக்கு வாழ்க்கையைல் லட்சியம் இருக்கும் பைக் ரேஸர் ஆக வேண்டும் என்று எண்ணுவார்கள் ஆனால் பைக் விலை அதிகமாக இருக்கும் இந்த படத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ட்ரீட்ரேஸும் ஒரு விளையாட்டுத்தான். அதை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்று இதில் கூறப்பட்டிருக்கும். இங்கு நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள்.

அதை இந்த படம் பார்க்கும்போதும் புரியும்.
ரஜினி கிருஷ்ணன் போன்றவர்களைப்பற்றி ரேஸர் படத்தில் சொல்லியிருக்கிறோம். இதை சமுத்தயத்துக்கு ஒரு பொறுப்புணர்வுடன்தான் சொல்லியிருக்கிறோம்.

ரேஸ் போகிறவர்கள் எந்த விபத்திலும் சிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படத்துக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு புது இயக்குனர் பைக் ரேஸ் ஸ்கிரிப்ட்டுடன் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லமுயன்றால் அதெல்லாம் வேண்டாம் நிறைய செல்வாகும் என்று கூறுவார்கள்.

ஆனால் எங்கள் டீமை நம்பி இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார் சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு படம் பிடித்திருந்தது. படத்தை பெரிதாக செய்யாலாம் என்று எண்ணியபோது கார்த்திக் ஜெயாஸ் வந்தார். படத்துக்காக எல்லாமே அவர் செய்தார்.

மூன்றாவத்தாக நன்றி சொல்ல வேண்டுமென்றால் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஸ் சார். சினிமா ஆரோக்கியமாக இருப்பதற்கு ஜெனிஸ் சார் காரணம் என்று கூறுவேன். அவரால்தான் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அளவுக்கு வந்திருக்கிறது.

இந்த படம் உருவாவதற்கு காரணம் இப்படத்தின் ஹீரோ அகில் சந்தோஷ். அவர் தான் தாயாரிப்பாளரை எனக்கு கொடுத்தார். இன்று வரை அவர் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
ஹீரோயின் லாவண்யா நான் யோசித்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். அவரிடம் கதை சொன்னவுடன் நடிக்கிறேன் என்றார்.

ரேசர்

முழுநாளும் படப்பிடிப்பு நடக்கும் தொடர்ச்சியாக இருந்து நடித்துக்கொடுத்தார், படப்பிடிப்புக்கு துணிச்சலாக தனியாகவே அவர் வந்த நடித்தது எங்கள் குழு மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையாகும்.

அவருக்கு நன்றி. அடுத்து என்னுடைய டீம் நான், பிரபா, பரத். பள்ளியில் படிக்கும்போதிருந்தே எங்களுக்கு சினிமாவுக்குவரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, நான் இயக்குவேன், பிரபா கேமிரா எடுப்பார். பரத் இசை அமைப்பார். தயாரிப்பாளரிடம் என் டீமை வைத்துதான் இந்த படம் செய்வேன் என்றபோது அவர் ஒப்புக்கொண்டார்.

அதேபோல் என்னுடைய உதவியாளர்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து உழைத்ததுதான் ரேஸர் படம். இந்த படத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சுமூகமாக முடித்துகொடுத்துவிடுவார் எக்ஸிக்யூட்டிவ் புரட்யூசர் ஹேமா.

மேலும் இப்படத்தில் ப்ளு சட்டை அணிந்து ஒருவர் நடித்திருப்பார் அவர்தான் என் தந்தை. இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அவர் இறப்பதற்குமுன் என்னிடம் சொன்ன வார்த்தை, நீ எப்படியும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசைப்படி நான் சாதித்துக் காட்டுவேன்.

*நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது:*

சினிமாவுக்கு வரும்போது படம் எப்படி எடுப்பது என்பதை தெரிந்துக்கொண்டு வாருங்கள். படம் நன்றாக இருந்தால் ஒடும் டாடா, லவ் டுடே படங்கள் சிறிய படங்களாக இருந்தாலும் நன்றாக ஓடி வசூல் ஈட்டியது.

படங்களுக்கு டைட்டில் தமிழில் வைக்க வேண்டும். தமிழில் வையுங்கள். ரேஸர் படம் டிரைலர் நன்றாக இருந்தது. சினிமாவுக்கு என்ன தேவை என்பதை அரசிடம் ஒன்றாக சேர்ந்து சென்று கேளுங்கள்.” என்றார்.

ரேசர்

Bayilvan Ranganathan praised the success of ‘dada’ and ‘Love Today’

மாணவர்களின் கல்வி அழுத்தத்தை தீர்க்க வரும் இளையராஜாவின் ‘மியூசிக் ஸ்கூல்’

மாணவர்களின் கல்வி அழுத்தத்தை தீர்க்க வரும் இளையராஜாவின் ‘மியூசிக் ஸ்கூல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது.

மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

‘மம்மி சொல்லும் வார்த்தை’ என ஆரம்பிக்கும் இப்பாடல் படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையிலும், இன்றைய நவீனகால இளைஞர்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

வாழ்வில் ஜெயிக்க மிக உயர்ந்த கல்வித் தகுதியை அடைய வேண்டுமென வற்புறுத்தும், பெற்றோரின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை நுட்பமாகக் கேலி செய்யும் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடல், குழந்தைகள், பெற்றோரைப் அல்லாமல் சுதந்திரமாக வாழ்வதைப் பற்றியும், நவ நாகரீக இளைஞர்களின் உலகைப் படத்தின் கதாப்பாத்திரங்கள் வழியாக அழகாகச் சித்தரிக்கிறது.

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார். பிரியா மாலி, சரத் சந்தோஷ், ஹிருத்திக் ஜெயகிஷ், நேஹா கிரிஷ், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் RS ரக்தக்‌ஷ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர்.

நடன இயக்குநர் ஆடம் முர்ரே இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தைக் கூறுவதுடன்…

“மியூசிக் ஸ்கூல்” திரைப்படம், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. கல்விச் சாதனைகள் மற்றும் கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளின் சமநிலையை வலியுறுத்தும் இத்திரைப்படம், மிக முக்கியமான மற்றும் தீவிரமான ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்கு முறையில் 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது.

அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

பிவிஆர் இந்தி, தமிழ்ப் பதிப்புகளையும், தில் ராஜு தெலுங்கு பதிப்பையும் 12 மே 2023 அன்று வெளியிடுகிறார்கள்.

Ilaiyaraaja music compose for ‘Music School’ movie

‘சிட்டாடல்’ இணையத் தொடரை பாராட்டிய பாலிவுட் படைப்பாளிகள்

‘சிட்டாடல்’ இணையத் தொடரை பாராட்டிய பாலிவுட் படைப்பாளிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் துப்பறியும் திரில்லர் ஜானரிலான இணையத் தொடர் ‘சிட்டாடல்’.

இந்த இணையத் தொடரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரத்யேக காட்சி மும்பையில் திரையிடப்பட்டது.

இதன் போது இந்த இணைய தொடரில் நடித்த நடிகர் ரிச்சர்ட் மேடன், நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோருடன் இந்திய திரைப்படத்துறை, தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு துறையின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மும்பையை தொடர்ந்து ரோம் மற்றும் லண்டன் போன்ற மாநகரங்களில் இதன் பிரத்யேக சிறப்பு திரையிடல் நடைபெறவிருக்கிறது.

இதன் போது நடைபெறும் சிவப்பு கம்பள வரவேற்பில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

‘சிட்டாடல்” தொடரின் பெயரிடப்படாத இந்திய பதிப்பில் நடித்து வரும் நடிகர் வருண் தவான், அதன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கே, கதாசிரியரும், எழுத்தாளருமான சீதா ஆர். மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இவர்களுடன் நடிகைகள் ரேகா, அதிதி ராவ் ஹயாத்ரி, ரசிகா துஹல், சானியா மல்ஹோத்ரா, ஸ்வேதா திருபாதி ஆகியோரும் இந்த பிரத்யேக திரையிடலை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

பாலிவுட் படைப்பாளிகள் மதூர் பண்டார், கபீர் கான், சித்தார்த் ராய் கபூர், விக்ரமாதித்யா மோத்வானி, புஷ்கர்- காயத்ரி உள்ளிட்ட பல படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் இந்த பிரத்தியேக திரையிடல் விழாவில் கலந்து கொண்டனர்.

‘வசீகரமான கதைக்களம்.. எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள்.. வியப்பூட்டும் ரகசிய நடவடிக்கைகள்.. துப்பறிவதில் வித்தியாசம். விசுவாசம்.. என ஏராளமான பார்வையாளர்கள் விரும்பக்கூடிய விசயங்கள் நிரம்பியதாக சிட்டாடல் இணைய தொடர் இருக்கிறது’ என இந்தத் தொடரைப் பாராட்டினர்.

சிட்டாடல் இணைய தொடரில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28ஆம் தேதியன்று பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.

இதனைத் தொடர்ந்து வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என.. மே 26 ஆம் தேதி வரை வெளியாகவிருக்கிறது. இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே, ஆஷ்லே கம்மிங்ஸ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

சிட்டாடல் பற்றி…
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாடல் எனும் உலகளாவிய சுதந்திரமான உளவு நிறுவனம் வீழ்த்தப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இந்த உளவு நிறுவனம், நிழல் உலகிலிருந்து உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மாண்டி கோர் எனும் குழுவினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

சிட்டாடலில் பணியாற்றிய உயர் அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் ( பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) ஆகிய இருவரின் நினைவுகள் அழிக்கப்பட்டதால், அவர்கள் உயிருடன் தப்பினர். அன்றிலிருந்து தலைமறைவு வாழ்க்கையை புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினர்.

ஒரு நாள் இரவில் அவரது முன்னாள் நண்பரான பெர்னாட் வொர்லிக் ( ஸ்டான்லி டுசி), மாண்டிக்கோர் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக அவரது உதவியை கோருகிறார். மேசன் தனது முன்னாள் கூட்டாளியான நதியாவை தேடுகிறார். இரு உளவாளிகளும் இணைந்து உளவு பணியை மீண்டும் தொடங்குகின்றனர்.

Indias most admired celebrities attended Citadel screening

அனுமன் ஜெயந்தி நாளில் பக்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய ‘ஆதி புருஷ்’

அனுமன் ஜெயந்தி நாளில் பக்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய ‘ஆதி புருஷ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6 தேதியான இன்று அனுமன் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமபிரான் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருக்கும் ஸ்ரீ அனுமானின் வீரத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ‘ஆதி புருஷ்’ படத்தில் நடிகர் தேவதத்தா நாகே தோன்றும் அனுமன் வேடத்திற்கான தெய்வீகம் ததும்பும் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

வலிமை, விடா முயற்சி, விசுவாசம் ஆகியவற்றை கொண்டிருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் தயாரிப்பாளர்கள், இந்த திரைப்படத்தில் அனுமனாக நடித்திருக்கும் தேவதத்தா நாகே இடம்பெறும் போஸ்டரை வெளியிட்டனர்.

ராமபிரானுக்கு துணையாகவும், பாதுகாவலராகவும், அனுமனின் பக்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த புனிதமான அனுமன் ஜெயந்தியின் நன்னாளில் அவர்களது பக்தர்களுக்காக பட குழுவினர் இந்த பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற ‘அனுமன் சாலிசா’ எனும் பக்தி பாடலில் இடம்பெற்றிருக்கும் ” வித்யாவான் குனி- மிகவும் புத்திசாலி. ராமபிரானுடன் நெருங்கி பழக ஆவலுடன் இருக்கிறான்” என்ற வரிகளை இந்த தெய்வீகம் ததும்பும் போஸ்டர் நினைவூட்டுகிறது.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங் ,சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை டி-சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Adipurush unveil the poster of Shri Bajrang Bali on Hanuman Janmotsav

சூப்பர் படத்தை பாக்கலேன்னு வருத்தமா.? ‘அயோத்தி’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்.; முடிஞ்சா அழாம பாருங்க

சூப்பர் படத்தை பாக்கலேன்னு வருத்தமா.? ‘அயோத்தி’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்.; முடிஞ்சா அழாம பாருங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’.

இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘அயோத்தி’ திரைப்படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

‘அயோத்தி’ மார்ச் 31 ஆம் தேதி பிரபலமான ZEE5 OTT தளத்தில் வெளியிடப்பட இருந்தது, ஆனால் அது திரையரங்குகளில் நன்றாக ஓடியதால் படத்தின் OTT வெளியீட்டை தயாரிப்பாளர்கள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இப்படம் தற்போது 7 ஏப்ரல் 2023 முதல் பிரபலமான ZEE5 OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அது மாலையில் தொலைக்காட்சியில் திரையிடப்படும்.

எனவே, ‘அயோத்தி’ படம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களை ஆட்சி செய்ய உள்ளது, மேலும் படம் சமூக ஊடகங்களில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘Ayothi’ ott release from April 7

More Articles
Follows