தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன்.
இதனை தொடர்ந்து ’பாண்டியநாடு’, ’ஜிகர்தண்டா’, ’மஞ்சப்பை’ வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் தன் தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக இவரின் நடிப்பில் றெக்க படம் வெளியானது.
தற்போது பிரபுதேவாவுடன் ’ஜில் ஜங் ஜக்’, முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் ஒரு படம் இவரின் கை வசம் உள்ளது.
மேலும் விக்ரம் பிரபு உடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது படிப்பை முடித்து விட்டு சினிமாவில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறாராம்.
இதில் ஒரு படி மேலே சென்று கிளாமராக நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
அதன் முதற்கட்டமாக தாமரை பூ டிசைன் கொண்ட டாட்டூவை தன் பின்னங்கழுத்து பகுதியில் போட்டு அந்த படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படம் இப்போது வைரலாகி வருகிறது.