தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மணிரத்னம் எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லை. ஆனால் ரசிகர்களுடன் உரையாட அவர் தன் மனைவி சுஹாசினியின் அக்கௌண்ட்டில் நேரலைக்கு வந்தார்.
அப்போது ரசிகர்கள் பலர் கலந்துரையாடினர்.
அப்போது ஒருவர் தங்களுக்கு இதுவரை நடிக்க ஆசை வரவில்லையா? யாரும் உங்களை நடிக்க அழைக்கவில்லையா? என்று கேட்டுள்ளார்.
அப்போது நடிகை குஷ்பூ நேரலையில் கலந்துக் கொண்டுள்ளார்.
“வேண்டாம், நடிக்காதீர்கள். நடிக்காதீர்கள்” என்று கூறவே… மணிரத்னம், “பார்த்தீர்களா, நீங்கள் இப்படி அதிர்ச்சி ஆக வேண்டாம் என்றுதான் நான் நடிக்கவில்லை” என பதிலளித்தார்.
அதற்கு குஷ்பு, “அப்படியில்லை, ஏற்கெனவே உங்கள் படங்களைப் பார்த்தால் நாங்கள் தூங்குவதில்லை. நீங்க நடிக்க ஆரம்பிச்சா அவ்வளவுதான்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார் குஷ்பூ.
உடனே இதனால்தான் நான் நடிக்கவில்லை என மணிரத்னம் கிண்டலாக கூறினார்.
குஷ்பூவின் மகள் அனந்திகா மணிரத்னத்தின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவரின் படங்கள் மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.
