குஷ்பூவின் சாதாரண நாளை ஸ்பெஷல் நாளாக மாற்றிய விஜய்சேதுபதி

குஷ்பூவின் சாதாரண நாளை ஸ்பெஷல் நாளாக மாற்றிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushboo Vijay Sethupathiகை விரல்களை விட அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி.

மேலும் மலையாளம் தெலுங்கு & ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

மும்பைக்கார் என்ற ஹிந்தி படத்தில் நடிக்க மும்பை சென்றிருக்கிறார் விஜய்சேதுபதி.

அங்கு நடிகையும் பா.ஜனதா செய்தி தொடர்பாளருமான குஷ்புவை சந்தித்துள்ளார்.

விஜய்சேதுபதியை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்… ‘மதிய உணவு சாப்பிட வந்தார் விஜய்சேதுபதி. நிறைய பேசினோம். சாதாரண நாளை ஸ்பெஷலாக மாற்றிய விஜய்சேதுபதிக்கு நன்றி’ என புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

Actress Khushboo treat to Vijay Sethupathi

எங்க வேணாலும் போங்க… ஆனா மறந்துடாதீங்க… ரஜினி ரசிகர்களுக்கு மக்கள் மன்றம் திடீர் அறிக்கை

எங்க வேணாலும் போங்க… ஆனா மறந்துடாதீங்க… ரஜினி ரசிகர்களுக்கு மக்கள் மன்றம் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini makkal mandram25 ஆண்டுகளாக பல யூகங்கள் வந்தாலும் 2017 டிசம்பர் 31ல் தான் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

2020 ஆண்டு மாதங்களில் அரசியல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார் ரஜினி.

இத்துடன் கட்சிப் பணிகளையும் மும்முரமாக தொடங்கினார்.

ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தன் உடல்நிலை காரணத்தால் அரசியலில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.

இதனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஆனால் ரஜினி தனது முடிவை மாற்ற போவதில்லை என அறிக்கை வெளியிட்டார்.

இது போன்று போராட்டங்களை நடத்தி, தன்னை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார் ரஜினி.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அவருடன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா செய்துவிட்டு, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று பச்சை கொடி காட்டியுள்ளது.

அதே சமயம் ரஜினி ரசிகர்கள் என்பதை எப்போதும் மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Join any party as you like – RMM

ஆரியின் வெற்றி முகம்… பாலாஜியின் உண்மை முகம்..; ‘பிக்பாஸ்’ ரிசல்ட் குறித்து சேரன் கருத்து

ஆரியின் வெற்றி முகம்… பாலாஜியின் உண்மை முகம்..; ‘பிக்பாஸ்’ ரிசல்ட் குறித்து சேரன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 106 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நேற்றோடு முடிவடைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் ஆரி. பாலாஜி ரன்னராக அறிவிக்கப்பட்டார்

ஆரியின் வெற்றியை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்

இந்த வெற்றிகள் குறித்து முன்னாள் போட்டியாளர் நடிகர் இயக்குனர் சேரன் தன் ட்விட்டரில் கூறியதாவது…

“ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி. ஒவ்வொரு சமூகப் பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. உங்களின் வெற்றியால் ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான்.. வாழ்த்துக்கள் ஆரி அர்ஜுனன்.
#AariBB4TitleWinner
#AariArjunan https://t.co/r6gP477Rzo

BBல் runner ஆக வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மைமுகமும் எதையும் சுலபமாக கடந்துசென்று தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது.. கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்.. வாழ்த்துக்கள் பாலாஜி.
#BalajiMurugaDoss
#BBTamilSeason4 https://t.co/4xVqUAOstr

Director Cheran about Bigg Boss 4 winner and runner
cheran

மீண்டும் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ இயக்குனர்..; நாயகன் யார் தெரியுமா?

மீண்டும் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ இயக்குனர்..; நாயகன் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasi Kumarஉண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான்.

தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி.

இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் சசிகுமார்.

ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை இன்று நடைபெற்றது.

இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரம், எடிட்டராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள். உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும்.

அதற்குத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தால் சாத்தியப்படுத்தி விடலாம். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலைப் பார்த்தாலே, இதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது.

ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளிக்கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

KaPaeRanaSingam direcror Virumandi’s next film announced

கிரிக்கெட் விளையாட ‘திடல்’ தேடி அலையும் 5 ஹீரோக்கள்

கிரிக்கெட் விளையாட ‘திடல்’ தேடி அலையும் 5 ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thidal first lookகிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் ‘திடல் ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘ராட்சசன்’ ராம்குமார் வெளியிட்டார்.

இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.
இவர் இயக்குநர் முகி மூர்த்தி, முத்து செல்வன், செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

மேலும் பல படங்களில் பணியாற்றியவர். ஏராளமான குறும்படங்கள் எடுத்தவர். ஒரு ஷார்ட் பிலிம் மேக்கராக பரவலாக அறியப்பட்ட இவர், தனது குறும்படங்களுக்காக 7 விருதுகளை பெற்றிருப்பவர்.

இந்தத் ‘திடல்’ , ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை.

முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவங்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கப்படுத்துகிறார்கள்.

அவர்கள பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட. அங்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள். தங்களுக்கான ஒரு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் எண்ணம் கிரவுண்ட் கிடைத்ததா இல்லையா என்பது தான் முடிவு.

இப்படத்தில் பிரபு, அன்பு, சாகுல், யோகேஷ் , கர்ணா என 5 நாயகர்கள் அறிமுகமாகிறார்கள்.

மற்றும் முக்கியமான திருப்புமுனைக் கதாபாத்திரத்தில் வினோதினி நடித்திருக்கிறார்.

முக்கிய பாத்திரத்திரங்களில் ராட்சசன் கிரிஸ்டோபர், சரண்யா ரவிசந்திரன் ஆகியோர் நடித்துள்ளார்கள் .

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சேகர்ராம், ஜெரால்டு , இசை ஸ்ரீசாய் தேவ். வி. இவர் தெலுங்கில் மூன்று படங்கள் கன்னடம் 2 தமிழ் 4 படங்களுக்கு இசையமைத்து உள்ளவர்.

எடிட்டிங் ரோஜர் .கலை – சிவா. நடனம்-ஜாய் மதி, ஸ்டண்ட்- ஓம் பிரகாஷ்.

இப்படத்தின் கதையை எழுதி முக்கிய பாத்திரத்தில் நடித்தது தனது கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் P. பிரபாகரன்.

‘திடல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராட்சசன் ராம்குமார் படத்தை பற்றி விசாரித்துப் பாராட்டியிருக்கிறார் .

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Ratchasan christopher next film is titled Thidal

சிறந்த விமர்சனம் விருது பெற்றும் என் படம் ஓடல..; ‘வெட்டி பசங்க’ விழா மேடையில் போஸ் வெங்கட் ஆதங்கம்

சிறந்த விமர்சனம் விருது பெற்றும் என் படம் ஓடல..; ‘வெட்டி பசங்க’ விழா மேடையில் போஸ் வெங்கட் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bose Venkat‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது

முரளி ராமசாமி பேசும்போது,

தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம்.

ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

‘போஸ்‘ வெங்கட் பேசும்போது…

‘வெட்டி பசங்க‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப் பெற்று மக்களிடையே என் படம் சென்றடையவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

சிறிய படங்களுக்கு ஆதரவு தருவோம் என்று சொல்வதைவிட செயல்வடிவில் செய்தால் தான் அப்படம் வெற்றியடையும்.

மஸ்தான் என்னுடைய குடும்ப நண்பர்.

பி.ஆர்.ஓ. பிரியா இன்று முதல் என்னுடைய தங்கையாக ஏற்றுக் கொள்கிறேன். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்” என்றார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது…

கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர் திரையரங்குகளில் நுழைந்ததும் கொரோனா வெளியே சென்று விட்டது.

ஒரு படம் இரண்டு படம் இசையமைத்து விட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம்.

ஆனால் மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து விட்டு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன்” என்றார்.

தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்…

இப்படத்திற்காக பலரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் மஹேந்திரன்,…

மேடையில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கொரோனாவிற்கு பிறகு இது என்னுடைய முதல் மேடை.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அனைவரும் கூறியதுபோல, நடிகர் விஜய்சேதுபதி யார் மனதையும் புண்படும்படி பேச மாட்டார்.

கேக் வெட்டிய சர்ச்சையில் அவர் இங்கு இருந்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருப்பார். அவருக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
கொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும் தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்டதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும். இப்படம் அறுசுவையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

பொருளாதார ரீதியிலும் வெற்றி ரீதியிலும் இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

பி.ஆர்.ஓ. விஜயமுரளி, தயாரிப்பாளருக்கேற்ற இயக்குநராக இருக்கிறார் மஸ்தான். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது…

கடந்த 10 மாதங்களாக மக்கள் அனைவரும் அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள். ஆனால், இந்த 16ஆம் தேதி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இதற்காக தமிழக அரசுக்கு மாபெரும் நன்றி.
இப்படத்தின் இசை நன்றாக இருக்கிறது. கதையை சுருக்கமாக கூறியிருக்கிறார்கள். இயக்குநர் மஸ்தான் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மாஸ்தான் என்று போற்றப்படும் அளவிற்கு மாஸான இயக்குநராக வருவார்.
கதாநாயகி மற்றும் கதாநாயகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள்.

புதுமுகத்திற்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. எந்த படமாக இருந்தாலும், பட்ஜெட் போட்டு எடுத்தால் 25 நாட்களுக்குள் முடித்துவிடலாம்.

அதற்கு உதாரணம் இயக்குநர் ராம நாராயணன். அவர் 25 நாட்களில் படத்தை முடித்துவிடுவார். 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடும். ஆகவே, சிறுபட தயாரிப்பாளர்கள் மற்றும் புதுமுக இயக்குநர்கள் ராம நாராயணனை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு செலவுகளைக் குறைக்க வேண்டும். நாயகர்களுக்கு அளவான சம்பளம் கொடுக்க வேண்டும். தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு அளவிற்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது.

கவிஞர் சினேகன் பேசும்போது…

மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றிருக்கிறது.

ஒரு சினிமா வெற்றியடைந்தால் ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் ஒரு குடும்பம் கஷ்டப்படுகிறது.

ஒரு படத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. வெளியே தெரியாமல் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள்.

அவரவர் சமூக தளங்களில் இப்படத்தைப் பற்றி பதிவு செய்து வையுங்கள் என்றார்.

‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது…

இயக்குநர் மஸ்தானை எனக்கு நீண்ட காலமாக தெரியும்.
நான் ஒரு பக்கம் சண்டைப்பயிற்சி செய்துக் கொண்டிருப்பேன்.

மஸ்தான் ஒரு பக்கம் நடன பயிற்சி செய்துக் கொண்டிருப்பார்.

மது அருந்தும் காட்சியை திரைப்படத்தில் வைக்காதீர்கள். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாள். அவர் போன்ற ஒரு மனிதர் யாருமில்லை.

கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அவர் வெற்றி நாயகனாக வலம் வர வாழ்த்துக்கள். கதாநாயகி நன்றாக இருக்கிறார். அவரது உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் வாராஹி பேசும்போது…

ஒரு தயாரிப்பாளரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதை மஸ்தானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை கூற வேண்டிய கட்டாயத்தில் சினிமா இருக்கிறது.

திரையரங்குகள் அதிக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. மக்களின் நலனைக் கருதி 50% மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,

இப்படத்தில் எனது கதாபாத்திரத்தை கூறியதும் மிகவும் பிடித்து விட்டது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

சிறிய படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள்.

ஆனால், அதைவிட திரையரங்குகளின் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் சிறிய படங்கள் வெற்றியடையும் என்றார்.

கதாநாயகன் வித்யூத் விஜய் பேசும்போது…

எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் மஸ்தானிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அப்புக்குட்டியுடன் பணியாற்றும் போது பல விஷயங்களை கற்று கொடுத்தார் என்றார்.

கதாநாயகி கௌஷிகா, வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் சக்ரவர்த்தி, இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்திய சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் வேலு பேசும்போது…

இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. அவர் ஒரு நாள் கூட படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. அதேபோல், ஒரு நாள் கூட சம்பளம் தவறியதில்லை என்றார்.

‘வெட்டி பசங்க‘ இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் இப்படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.

Actor Bose Venkat speech at Vetti Pasanga audio launch

More Articles
Follows