‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்..? வைரலாகும் போட்டோ

keerthy suresh in ponniyin selvanமணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை லைகா தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக ஒரு புகைப்படம் இணையங்களில் வெளியானது.

மகாராணி போன்ற உடை அணிந்த கீர்த்தியின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார். இதனால் ஜெயம் ரவியின் தங்கை வேடத்தில் (குந்தவை) தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் எனவும் தகவல் பரவியது.

இதுகுறித்து படத்தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“கீர்த்தி சுரேஷின் ரசிகர் ஒருவர் உருவாக்கிய போட்டோ டிசைன் அது. இதற்கும் படத்தின் கேரக்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress Keerthy Suresh is part of Ponniyin Selvan ?

Overall Rating : Not available

Latest Post