புதிய காதல்.. அடுத்த திருமணம்..; கணவருக்கு ட்விஸ்ட் கொடுத்த ஆர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் காமெடிக்கு பல நடிகர்கள் இருந்தாலும் நடிகைகள் ஒரு சிலரே உள்ளனர். அதில் முக்கியமானவர் நடிகை ஆர்த்தி.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு மற்றொரு காமெடி நடிகர் கணேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் நடிகை ஆர்த்தி.

இந்த நிலையில் ஒரு ஆணின் படத்தை பதிவு செய்து இவர் தான் தனது புதிய காதலர், டார்லிங் எனவும் இவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அது ஃபேஸ் ஆப்’ என்ற மொபைல் ஆப் மூலம் தனது முகத்தை ஆண் முகம் போல் மாற்றிய தகவல் பின்னர் தான் தெரிய வந்துள்ளது.

கொரோனா தாக்கி மரணமா.? பொய்யர்களுக்கு நயன்-விக்கி பதிலடி (CUTE VIDEO)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பிரபலங்கள் குறித்து வதந்தியும் பரவி வருகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் அப்படியொரு செய்தியில்லை)

அது முற்றிலும் வதந்தி என தெரிவித்து கோபமடைந்துள்ளார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்.

அவரின் ட்விட்டர் பதிவில்… நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளாக நடனமாடுவது போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எங்களைப் பற்றிய செய்திகளை இப்படித் தான் பார்க்கிறோம். கொரோனா வைரஸ் மற்றும் நாங்கள் இறந்தது போல் புகைப்படங்கள் டிசைன் செய்த உங்களையும் அப்படித் தான் பார்க்கிறோம். என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/VigneshShivN/status/1274766726761033728

Nayanthara and Vignesh Shivan dismiss Reports of Corona Positive With Jokes Video

விஜய் பிறந்தநாளுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் இன்று ஜீன் 22ஆம் தேதி தன் 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே கடந்த ஒரு வாரமாக இணையத்தில் விஜய் தொடர்பான வீடியோக்கள், படங்கள் உலா வருகின்றன.

பெரும்பாலானவர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் விஜய் பாடல்கள் நிரம்பி வழிகின்றன.

விஜய்க்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் மறு பக்கம் அஜித்துக்கு டிரெண்டிங் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

#ThalafansDay மற்றும் #NonPareilThalaAjith உள்ளிட்ட ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இன்று அஜித் படம் தொடர்பாக எதுவும் வெளியாகவில்லை. அப்படியிருக்கையில் அஜித் ரசிகர்கள் எதையும் டிரெண்ட் செய்ய வேண்டியதில்லை.

ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாகவே இவ்வாறு செயல்படுகின்றனர். இந்த போட்டி பொறாமை குணம் என்று மாறுமோ? என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

விஜய் அஜித் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்களின் போட்டிக்கு.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..?

Ajith fans trending clash with Vijay fans on Thalapathy Birthday

டைரக்டர் ஷங்கர் எழுதும் MAKING OF 2.0.; புத்தகத்தை வெளியிடும் ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ரூ. 450 கோடியில் தயாரித்திருந்தது லைகா புரொடக்சன்ஸ்.
பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகளவில் வெளியானது.

நமது தேவைக்காக செல்போன் சிம் நெட்வொர்க்கில் 3ஜி, 4ஜி டெக்னாஜிகளை அதிகரித்துக் கொண்டே வருகிறோம்.

இதனால் ஆங்காங்கே நெட்வொர்க் டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுகள் சிட்டுக் குருவிகளின் அழிவுக்காக காரணமா உள்ளது.

மேலும் பல பறவை இனங்களும் இதனால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த படம் உலகுக்கு ஒரு பாடமாக சொன்னது. இதனால் மக்களிடையே படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் கிட்டதட்ட பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த படத்தை குறித்து தற்போது MAKING OF 2.0 என்ற புத்தகத்தை எழுதி வருகிறாராம் டைரக்டர் ஷங்கர்.

விரைவில் இந்த புத்தகம் வெளியாகவுள்ளது. இந்த புத்தகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

A Book on Making of 2.0 by director Shankar Will Rajini launch

அண்ணா எம்ஜிஆர் சிலைகளுக்கு மாஸ்க் போட்ட மக்கள்.; இந்த ஊர்லயா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கட்டாயம் அனைவரும் மாஸ்க் (முகக்கவசம்) அணிவது கட்டாயம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

மாஸ்க் இல்லாமல் மக்கள் வெளியே சென்றால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே அனைவரும் முகக் கவசம் அணிந்தபடியே பொது இடங்களுக்கு சென்ற வருவதை பார்க்கிறோம். நாமும் அப்படியே செய்து வருகிறோம்.

இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு சில அடையாளம் தெரியாத நபர்கள் முகக் கவசம் அணிவித்து சென்றுள்ளனர்.

இதனை பார்த்தப்படியே பலரும் சென்றனர்.

ஒருவர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட மாஸ்க்கை கழட்டும் காட்சியைத்தான் நாம் படத்தில் பார்க்கிறோம்.

Corona Mask for Anna and MGR statues at Coimbatore

விஜய்யை ஓவரா வாழ்த்தி ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய மாநாடு பட புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைய தளபதி விஜய் இன்று ஜீன் 22ஆம் தேதி தன் 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அண்மையில் வெளியான மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கியிருந்தார் சுரேஷ் காமாட்சி. தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதில்… என்னதான் கொரானா முடக்கிப்போட்டாலும், #மாஸ்டரால் திரையரங்குகளை திருவிழாவாக்கவும்.. சினிமாவை மீட்டெடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் வசூல் சூப்பர்ஸ்டார், கலையுலக தளபதி @actorvijay க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. #Master #HappyBirthdayThalapathy

இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு கமெண்டுக்களை போட்டு வருகின்றனர்.

விஜய் கால்ஷீட் வாங்க இப்படி பேசுகிறாரோ?

சூப்பர் ஸ்டார்ன்னா அது என்னைக்குமே ரஜினி ஒருவர்தான். அவர்தான் இந்த வயதிலும் பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார். அவரால் எவரும் நஷ்டமடையவில்லை என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவேளி வேண்டும். அப்படியிருக்கையில் மாஸ்டர் வெளியானால் எப்படி சமூக இடைவெளி தியேட்டரில் கடைபிடிக்க முடியும். ரசிகர்கள் முண்டியடித்து வரமாட்டார்களா?

தியேட்டரில் கூட்டம் குறைவாக வந்தால் மட்டுமே சமூக இடைவெளி சாத்தியம். அப்படியானால் விஜய் படத்துக்கு கூட்டம் வராதா..?

தியேட்டருக்கு கூட்டம் வந்தால் தயாரிப்பாளருக்கு லாபம் வரலாம். ஆனால் மக்கள் கொரோனாவினால் உயிரிழந்தால் யார் பொறுப்பு..,?

ஒருவரை வாழ்த்த வேண்டும் என்பதற்கு ஏன் இப்படி பதிவிட்டுள்ளார்.? என்பது தான் புரியவில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர்… கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் இப்போது வெளியாக கூடாது என இயக்குனர் கேயார் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajini fans trolls Suresh Kamatchi for his Birthday Wish to Vijay

https://twitter.com/sureshkamatchi/status/1274892103797993472

More Articles
Follows