தமிழுக்கு 1… தெலுங்குக்கு 1..; ஒரே மேடையில் இரண்டு விருதுகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழுக்கு 1… தெலுங்குக்கு 1..; ஒரே மேடையில் இரண்டு விருதுகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
2019, 2020ஆம் ஆண்டுகளுக்கான சைமா விருது விழா ஹைதாராபாத்தில் நடைபெற்றது.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

தமிழில் வெளியான க/பெ.ரணசிங்கம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த இந்தத் திரைப்படம் கரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடியில் வெளியானது. மிகவும் உருக்கமான, நெகிழ்ச்சியான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இத்திரைப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்துக்காக விமர்சகர்கள் தேர்வாக சிறந்த நடிகை விருதைப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் இயக்குனர் க்ரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராஷி கண்ணா நடித்துள்ள தெலுங்கு திரைப்படம்.

காதல் திரைப்படமான இது விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தத் திரைப்படத்திற்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது.

ஒரே விழா மேடையில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளதால் சைமா விருதுக் குழுவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

Actress Aishwarya rajesh bags 2 awards at SIIMA awards 2021

ரஜினி பாராட்டிய படம்.; தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்ற ரிது வர்மா

ரஜினி பாராட்டிய படம்.; தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்ற ரிது வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான சைமா விருது விழா ஹைதாராபாத்தில் நடைபெற்றது.
இதில், நடிகை ரிது வர்மா தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றுள்ளார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்ததற்காக ரிது வர்மாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ரிது வர்மாவுக்கு தமிழுக்கான முதல் விருது இதுவென்றாலும் கூட தெலுங்கில் ஏற்கெனவே இவர் பிரபலம். அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர்.

பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரியும் கூட.

தெலுங்கு சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்ததோடு தற்போது தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் 2020ல் மக்கள் அபிமானம் பெற்ற திரைப்படங்களில் ஒன்று. துல்கர் சல்மான், ரக்‌ஷன், சிவரஞ்சனி இவர்களுடன் இயக்குநர் கவுதம் மேனன் என நட்சத்திர பட்டாளங்களுடன் பட்டையைக் கிளப்பிய இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்குக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். ரிது வர்மாவின் இயல்பான நடிப்பும் அழுத்தமான அழகும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தது.

Ritu Varma wins best debut actress award at SIIMA

‘தேன்’ படத்திற்காக புதுச்சேரி அரசின் விருதை வென்றது மகிழ்ச்சி… – தருண்குமார்

‘தேன்’ படத்திற்காக புதுச்சேரி அரசின் விருதை வென்றது மகிழ்ச்சி… – தருண்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருதான ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது ‘தேன்’ படத்திற்காக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

திரைப்படத்தை உருவாக்கும் போது நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.

வேலு என்ற கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடிப்பது நான் நடித்த சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாகும்.

குருஞ்சிக்குடி மற்றும் தேனி அரசு மருத்துவமனையின் படப்பிடிப்பு மனதை மிகவும் பாதித்தது. படப்பிடிப்புக்குப் பிறகு, கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர எனக்கு சிறிது நேரம் பிடித்தது.

இப்போது எங்கள் எல்லா முயற்சிகளுக்கும் வெகுமதி அளிக்கப்படும்போது அது மதிப்புக்குரியதாக உணர்கிறது, மேலும் இதுபோன்ற படங்களில் நடிக்க எனக்கு அதிக தைரியம் தருகிறது.

மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, எம் எம் வினயராஜ் மற்றும் சி.உதயகுமார் இயக்குனர் மற்றும் தகவல் மற்றும் விளம்பர செயலாளர், சதிஷ் நலம் அலைன்ஸ் பிரான்சைஸ், எம். பழனி செயலாளர் நவதர்ஷன் பிலிம் சொசைட்டி, கே.லக்ஷ்மி நாராயணன் பொதுப்பணித்துறை அமைச்சர், எம்.தனசேகரன் தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகம், ஐஎஃப்எஃப்ஐ கோவா மற்றும் எனது தயாரிப்பாளர் அம்பலவாணன் பி மற்றும் பிரேமா.பி, இயக்குனர் கணேஷ் விநாயக்கன், டிஓபி சுகுமார்.எம் மற்றும் எனது குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

இப்படிக்கு…
நடிகர் தருண் குமார்

Thaen movie wins best film award at Pondy state awards

என்ன வாழ்க்கடா… ரக்‌ஷன் அஸ்வின் ரியோ கவின் ஜிபி முத்து இணைந்த பிரபலங்கள்

என்ன வாழ்க்கடா… ரக்‌ஷன் அஸ்வின் ரியோ கவின் ஜிபி முத்து இணைந்த பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது.

இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார். நேற்று 23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர்.

தென்னிந்தியாவில் SAREGAMA Originals உடைய முதல் ஆல்பம் பாடலாக இப்பாடல் வெளியாகிறது. இப்பாடலின் அறிமுக விழா நேற்று பத்திரைக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

அனைவர் முன்னிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்பாடலை வெளியிட்டார்.

*இந்நிகழ்வில் SAREGAMA நிறுவனம் சார்பாக B R விஜயலக்‌ஷ்மி பேசியதாவது*

SAREGAMA இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். புதிதாக SAREGAMA Originals எனும் அமைப்பு மூலம், தற்போது புதிய இசை திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். முன்பு ஒரு நிகழச்சிக்காக ஏ ஆர் ரஹ்மான் பள்ளியில் இருந்து இந்த குழுவை மும்பைக்கு அழைத்து போயிருந்தோம், அப்போது இவர்கள் செய்த கலாட்டா மறக்க முடியாதது. இப்போது கணேசன் முதலான அதே குழு, SAREGAMA Originals உடைய முதல் பாடலை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி. இப்பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

*நடிகை ஐஸ்வர்யா பேசியதாவது…*

SAREGAMA விஜயலக்‌ஷ்மி இந்தியாவில் முதல் பெண் கேமராமேனாக இருந்தவர். அவரது இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன் மிகுந்த திறமை வாய்ந்தவர். சுனிதா, ஸ்வஷ்திஸ்டா நன்றாக டான்ஸ் ஆடுவார்கள் என்று தெரியும், ஆனால் பாட்டை பார்த்த பிறகு தான் ரக்‌ஷனுக்கு இந்த அளவு ஆடத்தெரியும் என்பது தெரிந்தது. எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். பாடல் அற்புதமாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

*பாடலாசிரியர் A.PA. ராஜா பேசியதாவது…*

குட்டிப்பட்டாசு பாடலுக்கு பிறகு, நான் செய்யும் துள்ளலான இரண்டாவது பாடல் இது. இப்பாடலில் பெண் பித்தனாக நாயகனை சித்தரிக்கவில்லை, ஒரு ஜாலியான பாடலாகத்தான் இதை உருவாக்கியுள்ளோம் ஏதும் தவறாக எண்ண வேண்டாம். பாடலை பாருங்கள் பிடிக்கும். இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

*பாடகர் பென்னி தயாள் பேசியதாவது…*

இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதுமே இண்டிபெண்டட் ஆல்பங்கள் பாடல்கள் பாட அதிக முக்கியத்துவம் அளிப்பேன். கணேசன் முதலான குழுவினர் என்னை இப்பாடலுக்கு அணுகியதற்கு நன்றி. GPமுத்து அண்ணா உங்கள் காமெடி வீடியோ நிறைய பார்ப்பேன். என்னை பார்த்தால், நான் அப்படிபட்ட வீடியோக்கள் பார்ப்பது போல் தெரியாது ஆனால் காமெடி வீடியோக்கள் எல்லாமே பார்ப்பேன். SAREGAMA நிறுவனத்துடன் இந்தியில் நிறைய பாடல்கள் இணைந்து பணியாற்றியுள்ளேன். தமிழில் இணைந்து வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சி.

*இசையமைப்பாளர் S.கணேசன் பேசியதாவது…*

எனக்கு வாய்ப்பு தந்த NOISE and GRAINS குழுவிற்கு நன்றி. டோங்கிலி என்னை தேர்ந்தெடுத்து, வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்த ஆல்பம் பாடலை டால்பி டிஜிட்டலிலும் பண்ணியுள்ளோம் கேட்டுப்பாருங்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

*இயக்குநர் டாங்க்லி ஜம்போ பேசியதாவது…*

இளைஞர்கள் தினசரி வாழ்வில் சந்திப்பதை தான் பாடலாக செய்தோம், புதிதாக எதுவும் செய்யவில்லை. இந்த பாடலை குழுவாக இணைந்து செய்துள்ளோம். இதில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. S.கணேசன் இசை அட்டகாசமாக இருந்தது. பென்னி தயால், விருஷா இப்பாடலை பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் எல்லோருக்கும் என் நன்றிகள்.

*GP முத்து பேசியதாவது…*

இந்த பாடலில் டான்ஸ் ஆடியது சந்தோஷமாக இருக்கிறது. காட்டில் கிடந்து லெட்டர் படித்தவனை டான்ஸ் ஆட வைத்த SAREGAMA வுக்கு நன்றி. டிக்டாக் போனபோது நிறைய வருத்தப்பட்டேன். ஆனால் மக்கள் எனக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார்கள். இந்த பாடலுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இப்பாடலை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்

*நடிகை ஸ்வஷ்திஸ்டா பேசியதாவது..*

இந்த பாடல் முதலில் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. பாடலின் தாளம் இசை எல்லாமே பிடித்திருந்தது. ரக்‌ஷனை இந்த செட்டில் தான் முதன் முதலில் பார்த்தேன். செட்டையே கலகலப்பாக வைத்திருந்தார். சுனிதா ரக்‌ஷன் “குக் வித் கோமாளியில்” அனைவருக்கும் தெரிந்த ஜோடி, இப்பாடலிலும் கலக்கியுள்ளனர். இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி.

*நடிகை சுனிதா பேசியதாவது…*

SAREGAMA இந்தியில் பிரபலமான நிறுவனம், தமிழில் அவர்கள் அறிமுகமாகும் பாடலில் நான் பங்கேற்றது மகிழ்ச்சி. முக்கியமாக டாங்கிலிக்கு நன்றி. ரக்‌ஷனுக்கு நன்றி அவனால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் பாருங்கள் நன்றி.

*நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது….*

SAREGAMA குழுவிற்கு முதலில் என் நன்றி. டோங்க்லி அண்ணாவுக்கு நன்றி. அவர் தான் என்னை அழைத்து இந்த வாய்ப்பை தந்தார். இந்தப்பாடலில் வேலை செய்ததது, மிக சந்தோஷமான அனுபவமக இருந்தது. சுனிதா உடன் ஆட, நிறைய பயந்தேன் ஆறு நாள் நான் பயிற்சி எடுத்து ஆடியதை, ஒரே நாளில் அவர் ஆடிவிட்டார். கணேசன் மிக சிறப்பான இசையை தந்தார். அபு மற்றும் சால்ஸ் தான் இந்த நடனத்தை மிக அழகாக அமைத்தனர். GP முத்து அண்ணாவுடன் வேலை செயத்தது சந்தோஷம். உங்கள் அனைவருக்கும் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி

*செஃப் தாமு பேசியதாவது….*

ரக்‌ஷன் என் பிள்ளை மாதிரி, எனக்கு மிகவும் தெரிந்த குழுவினர் இணைந்து இப்பாடலில் பணியாற்றியுள்ளார்கள். இந்த பாடல் 100 மில்லியன் பார்வைகளை பெற வாழ்த்துக்கள் முக்கியமாக டாங்க்லிக்கு எனது வாழ்த்துக்கள்.

*பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது…*

மியூசிக்கில் SAREGAMA எப்போதும் முதன்மையாக இருக்கும் நிறுவனம், அப்படி ஒரு ப்ராண்டில் இந்த பாடல் வந்துள்ளது மகிழ்ச்சி. ரக்‌ஷன் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு பிறகு இரண்டு கதாநாயகிகளுடன் தனி ஹீரோவாக நடித்திருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள். சுனிதா டான்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். பென்னி தயாள் குரல் அனைவருக்கும் பிடிக்கும். இப்பாடலில் பங்காற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

*நடிகர் அஷ்வின் பேசியதாவது…*

ரக்‌ஷன் இப்பாடல் செய்தது எனக்கு சந்தோஷம் ரக்‌ஷனிடம் நிறைய முறை ஆல்பம் பாடல் செய்ய சொல்லியிருக்கிறேன். இப்போது இந்த பாடல் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி. NOISE and GRAINS உடன் நான் ஏற்கனவே பணிபுரிந்திருக்கிறேன். கணேசன் அவர்களின் இசை நன்றாக இருக்கிறது. இண்டிபெண்ட்ண்ட் ஆல்பங்கள் நிறைய வர வேண்டும் அதன் மூலம் நிறைய புதிய திறமையாளர்கள் வருவார்கள். இனி நாங்களும் நிறைய பாடல்கள் செய்வோம் நன்றி.

*நடிகர் கவின் பேசியதாவது….*

டாங்க்லி, கார்த்தி இருவரும் மிகத்திறமையாளர்கள். தனி ஆல்பமுக்கு இருக்கும் மார்க்கெட்டை புரிந்து சிறப்பாக வேலை செய்துள்ளார்கள். ஒரு பாடலுக்கு வெளியீட்டு விழா எனும்போதே பிரமாண்டமாக இருந்தது. ரக்‌ஷன் நாயகன் என்றபோது இந்த விழா கண்டிப்பாக தேவைதான் எனத்தோன்றியது. ரக்‌ஷனுக்கு வாழ்த்துக்கள் . GP முத்து அண்ணனை வைத்து ஒரு முழு ஆல்பம் வர வேண்டும் டாங்க்லி இதை கண்டிப்பாக செய்யுங்கள். நாங்கள் அனைவரும் அதில் கேமியோ செய்கிறோம், என்னை இங்கு அழைத்த அனைவருக்கும் நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

*நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது…*

ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது இதில் வேலை செய்த அனைவரையுமே எனக்கு நன்கு தெரியும். NOISE and GRAINS எந்த வேலையையும் மிகச்சிறப்பாக செய்வார்கள் இந்த பாடலையும் கண்டிப்பாக வெற்றி அடையச் செய்வார்கள். SAREGAMA தென்னிந்தியாவுக்கு வருவது மகிழ்ச்சி. இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் நிறைய வர வேண்டும். நிறைய திறமையாளர்கள் வரவேண்டும். GP முத்து அண்ணண் இப்பாடலில் நடித்துள்ளது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்

*தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியதாவது*

SAREGAMA நிறுவனம் இந்தியாவில் முன்னணியில் உள்ள இசை நிறுவனம். அவர்கள் இப்போது தென்னிந்தியாவில் கால் பதித்து, புதிய படைப்புகளை தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது தனியான பாடல் ஆல்பங்கள் தான் நிறைய ஹிட்டாகி வருகிறது. நிறைய இளம் திறமையாளர்கள் அதன் மூலம் அறிமுகமாகி வருகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் இப்பாடல்கள் பெருமளவில் வரவேற்பை குவிக்கின்றன. இந்த பாடலை மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள் மாடர்னான பாடலில், அனைத்து ரசிகர்களையும் கவர, GP முத்துவை ஆட வைத்ததை பார்க்க, நன்றாக இருந்தது. இது ஒரு நல்ல முயற்சி இன்னும் பல ஆல்பங்கள் இது போல் வர வேண்டும். இப்பாடல் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

S.கணேசன் இசையமைத்துள்ள இப்பாடலை, A.PA. ராஜா எழுதியுள்ளார். பென்னி தயாள், விருஷா இப்பாடலை பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.*

VJ Rakshan and Sunitha joins for #EnnaVazhkaDa saregama originals

தயாரிப்பாளர் இயக்குநர் கேயாரின் மனைவி இந்திரா காலமானார்

தயாரிப்பாளர் இயக்குநர் கேயாரின் மனைவி இந்திரா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான திரு கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார்
சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 24, 2021) மாலை 4.45 மணிக்கு அவர் காலமானார். அவரது வயது 67.

இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்

அவரது இறுதி சடங்கு நாளை (செப்டம்பர் 25, 2021) மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

முகவரி: பழைய எண் 11, புதிய எண் 14, முதல் பிரதான சாலை, சீதம்மாள் காலனி எக்ஸ்டென்ஷன், எஸ் இ ஈ டி கல்லூரி அருகில், தேனாம்பேட்டை, சென்னை.

Producer Keyar’s wife Indra paased away

யோகிபாபு & ஓவியா இணையும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ சூட்டிங் அப்டேட்

யோகிபாபு & ஓவியா இணையும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்கா புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாகும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது.

அந்த சமயத்திலேயே, கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் தமிழில் படமெடுக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

இப்போது அதற்கு அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ். வடிவம் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்க, அன்கா மீடியா சார்பில் ‘வால்டர்’ படத்தின் இயக்குநர் யு.அன்பு, ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்தி கே தில்லை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

அன்கா மீடியாவின் முதல் படைப்பாக தயாராகிறது. இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ்., ‘வால்டர்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இப்படத்திற்கு. ‘வால்டர்’ பட இயக்குநர் யு.அன்பு கதை எழுதியிருக்கிறார்.

தர்மபிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, சுபாஷ் தண்டபாணி, ஒளிப்பதிவு செய்கிறார். ‘மிருதன்’ பட புகழ் வெங்கட் ரமணன் படத்தை தொகுக்க, ஏ.ஆர்.மோஹன் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

சண்டைக் காட்சிகளை ‘ராட்சசன்’ படப் புகழ் விக்கி அமைத்திருக்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ படப் புகழ் மெட்ராஸ் மீரான் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் எக்ஸிக்யூடிவ் தயாரிப்பாளராக எஸ்.சரவணக்குமார் செயல்படுகிறார். புரொடக்‌ஷன் கன்ட்ரோல் பணிகளை பாலா தில்லை, எஸ்.ஏ.தாஸ் மேற்கொள்கின்றனர். ஆடைவடிவமைப்பு செய்துள்ளார் ரெபேக்கா மரியா.

ஸ்டில்ஸ் எஸ்.சக்தி ப்ரியன், டிசைன் தினேஷ் அசோக் செய்துள்ளனர். இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக யுவராஜ் பணியாற்றுகிறார்.

படம் குறித்து கதாசிரியரும், தயாரிப்பாளர்களுள் ஒருவருமான யு.அன்பு கூறுகையில்,…

“இத்திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான சயின்ஸ் ஃபிக்‌ஷ்ன் ஜானரைச் சேர்ந்தது. இந்தப் படத்தில் யோகிபாபு முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

யோகிபாபு நடிப்பில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்லலாம். இந்தப் படம் சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படமாகவுள்ளது. படத்திற்காக கொடைக்கானலில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

படத்தின் தொடக்கவிழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, சக்திவேல், சி.வி குமார், சதீஷ் ,ஸ்ரீதர், ‘அடிதடி’ முருகன், முன்னணி திரைப்பட இயக்குனர்கள் விருமாண்டி, தாஸ் ராமசாமி, நவீன், தங்கம் சரவணன், முத்துக்குமரன், மனோஜ் இவர்களுடன் நடிகர் சிபி சத்யராஜ், நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Oviya and Yogi Babu starrer contractor Nesamani movie shoot kick starts

More Articles
Follows