அப்போ ’ஜாகுவார்’ பட குழந்தை நட்சத்திரம்.; இப்போ ஐஸ்வர்யா கவுடாவுக்கு ‘எங்கேஜ்மெண்ட்’

அப்போ ’ஜாகுவார்’ பட குழந்தை நட்சத்திரம்.; இப்போ ஐஸ்வர்யா கவுடாவுக்கு ‘எங்கேஜ்மெண்ட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா கவுடா, பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

’ஜாகுவார்’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யா கவுடா, வளர்ந்து நடிகையாக வலம் வருவதோடு, தனது திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் ‘பிரவீணா’-வில் தனது நடிப்பு மூலம் பாராட்டுகளைப் பெற்ற ஐஸ்வர்யா கவுடா, விரைவில் வெளியாக இருக்கும் ‘ரேவ் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், ‘ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா கவுடாவின் திறமையை கவனித்த இயக்குநர் ராஜு போனகானி, பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தில் அவரை நாயகியாக தேர்வு செய்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் அரசியலின் இருண்ட பாதையில் செல்லும் இளைஞர்களின் கதையை சொல்லும் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘ரேவ் பார்ட்டி’ கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், ராஜு பொங்கானி இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

’ரேவ் பார்ட்டி’ திரைப்படம் வெளியான பிறகு நடிகை ஐஸ்வர்யா கவுடா, தென் இந்திய சினிமாவின் முக்கியமான நடிகையாக உருவெடுப்பார் என்று படக்குழு கூறி வந்த நிலையில், அவர் மற்றொரு பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமான ‘எங்கேஜ்மெண்ட்’-ன் நாயகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வாய்ப்பு பற்றி நடிகை ஐஸ்வர்யா கவுடா கூறுகையில்…

“சிறு வயதில் இருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். 2016 ஆம் ஆண்டு ‘ஜாகுவார்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன் பிறகு ‘பிரவீணா’ படமும் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

தற்போது ‘ரேவ் பார்ட்டி’ படத்தில் எனது திறமையை பார்த்து இயக்குநர் ராஜு போனாகானி ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதோடு, பெரும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. ‘எங்கேஜ்மெண்ட்’ படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்.

ஐஸ்வர்யா கவுடாவு

Actress Aishwarya Gauda and Raju in Engagement

‘யாத்திசை’ சாம்சனுக்கு எல்லா திசையிலும் குவியும் வாய்ப்புகள்

‘யாத்திசை’ சாம்சனுக்கு எல்லா திசையிலும் குவியும் வாய்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது சரித்திர கால படங்களின் சீசன். நிறைய சரித்திர கால படங்களை நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் இதுவரை சொல்லப்படாத ஒரு புதுமையான கதையாக ஒரு திரைப்படமாக சமீபத்தில் வெளியான படம் ‘யாத்திசை’.

சுமார் 1300 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பாண்டிய கால வரலாறை மிகவும் தத்துரூபமாக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தனர் படக்குழுவினர்.

முக்கியமாக புது முகங்களை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்டத்தை தங்களால் கொடுக்க முடியும் என தமிழ் சினிமாவுக்கு இந்த படம் சவால் விட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

இதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரியாக நடித்திருந்தார் சாம்சன். இவரின் யதார்த்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இவரின் சொந்த ஊர் பாலக்காடு. கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து லயோலாவில் டிப்ளமோ கோர்ஸ் முடித்து விட்டு, சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.

கிடைத்ததோ சிறு சிறு வேடங்கள்தான். அதில் முக்கியமானது, நாகாவின் அனந்தபுரம் வீடு. இருந்தாலும் சளைக்காமல் பல இயக்குனர்களை சந்தித்து இருக்கிறார்.

இவரது நண்பர் சுரேஷ்குமார், காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். அவர் மூலம் தான் ‘யாத்திசை’ இயக்குனர் தரணி ராசேந்திரனை சந்தித்து இருக்கிறார்.

அதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரிக்கான காஸ்ட்யூம்களை போடச் சொல்லி இருக்கிறார். மிகப் பொருத்தமாக இருக்கவே படப்பிடிப்புக்கு செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போயிருக்கிறார்.

யாத்திசை படம் பார்த்த நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பாராட்டுக் கால்கள் வந்து கொண்டே இருக்கிறதாம். அடுத்து ஆறு படங்கள் கமிட் ஆகி இருக்கிறது. மலையாளம் தெரியும் என்பதால் சில மலையாளப் பட வாய்ப்புகளும் வந்திருக்கிறதாம்.

மார்ஷியல் ஆர்ட்ஸ், களறி பயின்றவர். கிரிக்கெட், அத்லடிக், த்ரோ பால் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்றவர் சாம்சன்.

கலக்குங்க யாத்திசை சாம்சன்… யாத்திசை என்றால் தென் திசை என்று அர்த்தம். இனி எல்லா திசையிலும் கலக்குங்க சாம்சன்.

Lot of opportunities for yaathisai samson after its release

கீர்த்தியுடன் செகன்ட் டைம்.. இளையராஜாவுடன் ப்ளாக்பஸ்டர் மொமண்ட் – நாக சைதன்யா

கீர்த்தியுடன் செகன்ட் டைம்.. இளையராஜாவுடன் ப்ளாக்பஸ்டர் மொமண்ட் – நாக சைதன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இது அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது படமாகும்.

இதில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்

இந்த படம் மே 12ல் உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் நேற்று மே 5ம் தேதி மாலை செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்தனர்.

அப்போது நடிகர் நாக சைதன்யா பேசியதாவது…

“‘கஸ்டடி’ படம் பேசுவதற்கு முன்பு மனோபாலா சாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். சென்னை சிட்டி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

இங்கு ‘கஸ்டடி’ பட டிரெய்லர் வெளியிடுவதில் மகிழ்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெங்கட்பிரபு சார் என்னிடம் இந்தப் படத்தின் கதை சொன்னபோது எக்சைட்மெண்ட்டாக இருந்தது.

அதே நம்பிக்கை இப்போது பட வெளியீடு வரை இருக்கிறது. அரவிந்த்சாமி சாரை சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அவருடன் இணைந்து நடித்தது எனக்கு பெருமை.

கீர்த்தியுடன் இரண்டாவது படம் எனக்கு. ப்ளாக்பஸ்டர் மொமண்ட் என்றால் அது இளையராஜா சார் இசைதான். வெங்கட்பிரபு சார் என்றால் யுவன் இசைதான். இப்பொழுது இளையராஜா சாரும் கூட இருக்கிறார் என்பது பெருமை.

தொழில்நுட்பக்குழு அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது போல டிரெய்லரும் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். வெங்கட்பிரபு சாரின் வழக்கமான ஸ்டைல் இதில் மிஸ் ஆகாது. படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

இதன் பிறகு பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர்.

2nd time with krithi shetty . Block buster moment with Ilayaraja says Naga Chaitanya

கீர்த்தி ஷெட்டியின் கனவை நிறைவேற்றிய இளையராஜா – யுவன் குடும்பம்

கீர்த்தி ஷெட்டியின் கனவை நிறைவேற்றிய இளையராஜா – யுவன் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இது அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது படமாகும்.

இதில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்

இந்த படம் மே 12ல் உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் நேற்று மே 5ம் தேதி மாலை செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்தனர்.

அப்போது நடிகை கீர்த்தி ஷெட்டி பேசியதாவது…

“வெங்கட்பிரபு சாருடைய வழக்கமான படம் இது இல்லை என்று மீம்ஸ் பார்த்தேன். படம் வேறு விதமான எண்டர்டெயின்மெண்ட்டாக இருக்கும். அவர் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

இளையராஜா – யுவன் என அவர்களுடன் படம் செய்ய வேண்டும் என்பது எல்லாருக்கும் கனவு. அது நிறைவேறி இருக்கிறது. நாக சைதன்யாவுடன் இது எனக்கு இரண்டாவது படம்.

சில்வர் ஸ்கிரீன் ஸ்ரீனிவாசா சார் தயாரிப்பிலும் இது இரண்டாவது படம் என்பது மகிழ்ச்சி. டிரெய்லர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

அரவிந்தசாமி சார், சரத்குமார் சாருடன் வேலை பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி. படம் சீரியஸாக இருந்தாலும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்”. என்றார்.

Ilaiyaraja and yuvan family fulfils krithi shetty wish

கெஸ்ட் ரோலுக்கு கூட ஃபைட் பண்ணி அண்ணன்கிட்ட சான்ஸ் கேட்டேன்… – பிரேம்ஜீ

கெஸ்ட் ரோலுக்கு கூட ஃபைட் பண்ணி அண்ணன்கிட்ட சான்ஸ் கேட்டேன்… – பிரேம்ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இது அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது படமாகும்.

இதில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்

இந்த படம் மே 12ல் உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் நேற்று மே 5ம் தேதி மாலை செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்தனர்.

அப்போது நடிகர் பிரேம்ஜி பேசியதாவது…

“இந்தப் படத்தில் நான் சண்டை போட்டு சான்ஸ் வாங்கினேன். கெஸ்ட் ரோல் என்றால் கூட ஓகே என்று அண்ணனிடம் சண்டை போட்டு வாய்ப்பு வாங்கினேன். ஷூட்டிங் ஜாலியாக சென்றது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. என்றார்.

Premgi speech at custody event

என்னோட படம்னாலே ஜாலி என நினைப்பவர்களுக்கு ‘கஸ்டடி’ வேற அனுபவம் – வெங்கட் பிரபு

என்னோட படம்னாலே ஜாலி என நினைப்பவர்களுக்கு ‘கஸ்டடி’ வேற அனுபவம் – வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘கஸ்டடி’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு, ஹீரோ நாக சைதன்யா, ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் வெங்கட்பிரபு பேசியதாவது…

‘கஸ்டடி’ என்னுடைய முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவின் முதல் தமிழ் படம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அதிக செலவில் எடுக்கப்பட்ட என்னுடைய முதல் படம் இது. அந்த அளவு இந்த கதை மேல் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

நாகசைதன்யாவிடம் முதலில் கதை சொன்னதும் அவருக்கு பிடித்துப் போனது. என்னுடைய முதல் தேர்வும் அவராகதான் இருந்தார். பிறகுதான் தயாரிப்பாளரிடம் கதை சொன்னேன். படம் முழுவதும் ஆக்‌ஷன் மோடிலேயே இருக்கும்.

வெங்கட்பிரபு படம் என்றாலே ஜாலியாகதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் புது அனுபவமாக இருக்கும்.

தீவிரமான கதைக்களம் கொண்டதாக இருக்கும். நாக சைதன்யாவுடன் சேர்ந்து முக்கியமான கதாபாத்திரம் செய்திருப்பவர் அரவிந்த்சாமி சார். அவரிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது கஷ்டம். கதை பிடித்து போய் ஒத்துக் கொண்டார்.

சரத்குமார், பிரியாமணி எல்லாருக்கும் நன்றி. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். எனக்கு தெலுங்கு புரியும். சைதன்யாவுக்கு தமிழ் தெரியும். மற்றவர்களும் தமிழ் நடிகர்கள் என்பதால் வேலை செய்தது எளிது.

ராஜா சாரின் பெயர் என் படத்தில் வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இதில் நிறைவேறியுள்ளது. யுவனும் அருமையாக இசையமைத்துள்ளார்.

தமிழில் பிரேம் கதாபாத்திரத்தை தெலுங்கில் வெண்ணெல்லா நடித்துள்ளார். இது ஆக்‌ஷன் படம் என்பதால் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இதற்கு பிறகு மே 9ம் தேதி ஒரு ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டும் வைத்துள்ளோம். படம் மே 12 அன்று வெளியாகிறது, பார்த்துவிட்டு சொல்லுங்கள் “. என்றார்.

Custody gives you different experience says venkat prabhu

More Articles
Follows