பிரச்சினைக்குப் பயந்து 4வது முறையாக பெயரை மாற்றிக்கொண்ட சர்ச்சை நாயகி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் காதல் திருமணம் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை ஒருவர் தற்போது நான்காவது முறையாக தனது பெயரை மாற்றியுள்ளார்.

தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும், நடிகைகளும் தங்களது இயற்பெயரை மாற்றி வைத்துதான் சினிமா உலகில் எண்ட்ரியாகின்றனர். இதற்கு ரஜினிகாந்த் முதல் தற்போது அறிமுகமாகின்ற புதுமுக நடிகர் நடிகைகள் வரை பல உதாரணங்கள் உள்ளன. திரை பிரபலங்கள் ஒரு கட்டத்தில் சினிமா உலகில் உச்ச நிலைமை அடைந்தவுடன் சினிமா பெயரையே தனது இயற்பெயராக மாற்றிக்கொள்கின்றனர். அதற்கு ஜோசியம், நியூமராலஜியும் ஒருவகை காரணம் உண்டு.

ஆனால் இங்கே நாம் பார்க்க போகிற நடிகை ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றுவதற்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இருந்திருக்கிறது. அப்படி தற்போது நான்காவது முறையாக பெயர் மாற்றிக் கொண்டிருப்பவர்தான் நடிகை அதிதி மேனன். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தவர். அவருடைய சொந்த பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில்தான் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதில் சீரியல் வில்லியாக அறிமுகமான அவருக்கு அங்கு பிரச்சனைகள் தொடங்கவே பின்பு தமிழ் திரையுலகம் பக்கம் தாவினார்.

தமிழில் முதன்முறையாக நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படவே அந்த படத்திலிருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார். பின்னர் வேறு ஒரு நடிகையை வைத்து நெடுநல்வாடை படத்தை முடித்தனர் என்பது தனி கதை.

அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் இளம் நடிகர் அபி சரவணனுடன், அதிதி மேனன் என்ற பெயரில் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து ஜோடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய படங்களைக் காட்டிலும் பட்டதாரி படம் இவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தது. பின்பு தினேஷுடன் களவானி மாப்பிள்ளை என்னும் படத்தில் அதிதிமேனன் நடித்தார்.

நடிகர் அபி சரவணன் மதுரையைச் சேர்ந்தவர். அவர் பல்வேறு பொதுநலத் தொண்டுகள் செய்து வருபவர். முகநூல் பக்கம் மூலம் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப்படும் மக்களைத் தேடிச் சென்று பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

அபி சரவணன், அதிதி மேனன் காதல் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் ரகசியமாக நடந்துள்ளது. திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் ஆன தகவல் கசிந்தால், அதிதியின் சினிமா வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் அதிதீ மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அபி சரவணன் புகார் ஒன்றை தெரிவித்தார். ஆனால், நான் அபியை காதலித்னே தவிர… திருமணம் செய்யவில்லை என அதிதிமேனன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதிதி நீண்ட விளக்கம் அளித்தார். அதில் சமூக சேவை என்ற பெயரில் பலரிடம் பணம் வாங்கி அபி ஏமாற்றி வருகிறார் என்று யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போன்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

பதிலுக்கு அபியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோக்களை வெளியிட்டார். தான் செய்து வரும் சமூக சேவையின் மீது களங்கம் கற்பித்த அதிதியைக் கண்டித்ததோடு, இதுவரை அவர் செய்த உதவிகள், யாரிடம் இருந்து எல்லாம் பணம் பெறப்பட்டது? அவை எப்படி உதவிகளாக மக்களுக்கு வழங்கப்பட்டது? என்று நீண்ட விளக்கம் அளித்தார். வங்கி ஸ்டேட்மெண்ட்களையும் பத்திரிகையாளர்களிடம் காண்பித்து கண் கலங்கினார்.

இதற்கிடையில், அபி, அதிதி தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அபி மற்றும் அதிதி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் மாதம் 27ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

காதல் திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதால் மன உளைச்சலோடு போராடிக் கொண்டிருக்கும் அபிசரவணன், தொடர்ந்து சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் கூட அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவினார். இதற்காக மலேசியாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. அதோடு இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். தன்னுடைய இயல்பையும், பெயரையும் மாற்றாமல் சினிமாவில் அபி பயணிக்கும் அதே நேரத்தில், அதிதியோ, தற்போது வேறு ஒருபெயரை மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

ஏற்கனவே 3 முறை பெயரை மாற்றியிருக்கும் அதிதி, இந்த காதல் திருமண பிரச்சினையைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதோடு, வழக்கபோல பிரச்சினைக்குப் பிந்தைய பெயர் மாற்றம் போல இப்போது மிர்னா மேனன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பெயரில்தான் தற்போது மோகன் லாலுடன் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகம் தினம் தினம் பலருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த செய்தியும் ஓர் உதாரணம்தான்!

முஸ்லீம் பெயர்களில் FIR..; விஷ்ணு விஷாலுக்கு மூன்று ஜோடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனு ஆனந்த் என்பவர் இயக்கவுள்ள படத்திற்கு எப்.ஐ.ஆர். எனத் தலைப்பிட்டுள்ளனர்.
அதாவது பைசல், இப்ராஹிம், ரியாஸ் என 3 முஸ்லீம் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து எப்.ஐ.ஆர். என பெயர் வைத்துள்ளனர்.

நாட்டில் தலை விரித்தாடும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாம்.

இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கின்றனர்.

அஷ்வத் என்பவர் இசையமைக்க சூட்டிங் தொடங்கியுள்ளது.

நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து சாதனை படைக்கும் ‘சாஹோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்த கபூர், அருண்விஜய் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியான படம் ‘சாஹோ’.
இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் எங்கும் வெளியானது.

படம் வெளியான நாள்முதல் தமிழகத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனால் தமிழகத்தில் வசூல் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இப்படம் இதுவரை உலகளவில் 300 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஹிந்தியில் மட்டுமே 100 கோடியைக் கடந்துள்ளதாம்.

இப்படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இனியும் வசூல் மழை பொழியுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

DTMK – இதுதான் ரஜினி கட்சியின் பெயரா..? காவலர்கள் குழப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 25 வருடங்களாக தமிழகமே எதிர்பார்த்த விடை… ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா..? என்பதுதான்..

ரஜினிகாந்த் சொன்னாரோ இல்லையோ.? இதனை கிண்டல் செய்தே பலரும் தங்கள் அரசியல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

இதனிடையில் கடந்த 2017 டிசம்பர் 31ல் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார் ரஜினிகாந்த். வருகிற சட்டமன்ற தேர்தலே தன்னுடைய இலக்கு என்றார்.

இதன் பொருள் அறியாத பலர் இன்னும் கட்சி ஆரம்பிக்க இல்லை என்றனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் தேசிய தமிழர் முன்னேற்றக் கழகம்.. (TTMK / DTMK) என்பது தான் ரஜினி கட்சியின் பெயர் என்ற தகவல் இணையத்தில் வருகிறது.

இதனால் ரஜினி ரசிகர்கள் என்ற காவலர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால் இதே பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் 2 வருடங்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கர்ணன்’ ஆக மாறும் தனுஷ்; மலையாள நடிகைகள் மீது டார்கெட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‛பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் மாரிசெல்வராஜ்.

இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.

கர்ணன் என்ற பழைய படத்தலைப்பை இப்படத்திற்கு வைக்கவுள்ளனர்.

இந்த நிலையில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் என்பவர் இதில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.

சைக்கிள் வீராங்கனையாக ரஜிஷா நடித்துள்ள பைனல்ஸ் என்ற படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இவர் தன் முதல் மலையாள படத்திலேயே கேரள மாநில விருதை பெற்றவர்.

தனுஷின் சமீபத்திய படங்களில் கீர்த்தி சுரேஷ், மடோனா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட மலையாள நட்சத்திரங்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajisha Vijayan to star opposite Dhanush in Karnan movie

இனிமே தியேட்டர்ல டிக்கெட் எடுக்க முடியாது; அமைச்சர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வருடங்களாகவே திரைத்துறையில் நிலவும் பல குளறுபடிகளை களைய திரைத்துறை சங்கங்கள் முயன்று வருகின்றன.

இதற்காக பல ஆலோசனை கூட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு தியேட்டரில் டிக்கெட் எடுப்பதில் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனிமேல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க முடியாது நிலையை உருவாக்கியுள்ளது.
அதாவது இனிமேல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் எடுக்க வேண்டுமாம்.

இதனால் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அதிகமான விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடியாது.

மேலும் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மட்டுமின்றி விலையையும் அரசு சார்பில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு சேவை கட்டணம் ரூ. 30 இதுவரை உள்ளது. அந்த கட்டணம் குறைக்கப்படுமா? எனத் தெரியவில்லை.

Only online No more counter tickets says TN minister Kadambur Raju

More Articles
Follows