சென்னையில் சொந்த வீடு வாங்க போராடும் நடிகர் விமல்

சென்னையில் சொந்த வீடு வாங்க போராடும் நடிகர் விமல்

கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் T.R. ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ” கடமையை செய்” படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து விமல் நாயகனாக நடிக்கும் ‘மஞ்சள் குடை’ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார்.

இவர் வால்டர் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களில் நடித்தவர் ஷெரின்.

இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரேணுகா ராதாரவி ,Y.G. மகேந்திரன், விஜய் டிவி ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார்
இசை – ஹரி
வசனம் – கிஸ்ஸார்
எடிட்டிங் – ராஜாமுகமது
ஸ்டன்ட் – ஹரி தினேஷ்
கலை – மாதவன்
இணை இயக்கம் – மாரி செல்வம்.
மக்கள் தொடர்பு- மணவை புவன்
தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகீர் உசேன்.
கதை, திரைக்கதை, இயக்கம் – சிவம் ராஜாமணி. (இவர் சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் சிவம் ராஜாமணி கூறியதாவது….

ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது.

இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார்.

அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள் புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் லைவ் லொகேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம்.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது” என்றார் இயக்குனர் சிவம் ராஜாமணி.

Actor vimal struggling to buy his own house in Chennai

உலக இசை தினத்தில் உலகளவில் லிடியன் நாதஸ்வரத்தின் புதிய முயற்சி

உலக இசை தினத்தில் உலகளவில் லிடியன் நாதஸ்வரத்தின் புதிய முயற்சி

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான ‘குரோமாடிக் கிராமாடிக்’ மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார்.

லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக் கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர்.

இந்த ஆல்பத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன.

ஆல்பத்தை பற்றிப் பேசிய லிடியன்…

“உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன்,” என்றார்.

“உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி-செவ்வாய் கிழமை அன்று வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இந்த ஆல்பம் சர்வதேச தளங்களிலும் கிடைக்கும் என்றும் பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் லிடியன் கூறினார்.

Lydian Nadhaswaram’s new global attempt

பாராளுமன்றத்தில் ‘சர்தார்’.; சங்கி பாண்டேவுக்காக மட்டும் ரூ 4 கோடி செலவு.!

பாராளுமன்றத்தில் ‘சர்தார்’.; சங்கி பாண்டேவுக்காக மட்டும் ரூ 4 கோடி செலவு.!

எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ‘ சர்தார்’. கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டுவரும் படம்.

சமீபத்தில் இதன் படபிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார்.

இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கினார்கள்.

சரசரவென வளரும் கார்த்தி – மித்ரன் கூட்டணியின் ‘சர்தார்’

இது வரை ஷூட்டிங் எடுக்கப்படாத அசர்பைசான் பாராளுமன்றத்திலேயே ஷூட்டிங் நடத்தப்பட்டது.

பாராளுமன்றம் நடைபெறுவது போலவும், அதில் வில்லன் சங்கி பாண்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. மற்றும் பல இடங்களில் படமானது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படமாக்கப்பட்டது.

இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Artist

Karthi
Rashi khanna
Rajesha vijayan
Chunkey panday
Laila
Yugi Sethu
Munishkanth
Master Rithvik
Avinash
Murali sharma
and others.

Sardar Technicians

Director – P.S. Mithran
Producer – Prince Pictures, S. Lakshman Kumar.
Music composer – G.V. Prakash Kumar
DOP – George C Williams
Editor – Ruben
Art director – Kathir
Stunt direction – Dilip subburayan
Poster designer – Sivakumar (siva digital art)
Executive Producer – Kirubakaran Ramasamy
Production Executive – Paal Pandi
PRO – Johnson

Rupees 4 Crores has been spent just for the shoot of Actor Karthi’s ‘SARDAR’ Villain portions at the Parliament of Azerbaijan.

புஷ்கர் காயத்ரி கூட்டணியில் கதிர் ஐஸ்வர்யா ஷ்ரேயா பார்த்திபன் இணைந்த ‘சுழல்’

புஷ்கர் காயத்ரி கூட்டணியில் கதிர் ஐஸ்வர்யா ஷ்ரேயா பார்த்திபன் இணைந்த ‘சுழல்’

பிரைம் வீடியோவின் முதல் முழு நீள தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வோர்டெக்ஸ் தொடரின் உலகளாவிய பிரீமியர் பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்தே பார்வையாளர்களிடம் அது குறித்த உற்சாகம் அதிகமாக உள்ளது.

நடிகை ஷ்ரேயா ரெட்டி, தீவிர படப்பிடிப்பின் போது, திரையில் போலீஸ் உடை அணிந்து, திரைக்குப் பின்னால் அவர் செய்த வேடிக்கையான விஷயங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், ஸ்ரேயா, ரெஜினா என்ற போலீஸ்காரராக நடிக்கிறார், ஊட்டி நகரத்தில் ‘தி சுழல் கர்ஜனை’ தீம் டிராக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அவர் செய்த உடல் பயிற்சியை வீடியோவில் காணலாம். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது “This is what Regina does when she’s off duty #suzhalonprime #Suzhal”. என்பதாகும்

https://instagram.com/stories/sriya_reddy/2859643251661875192?utm_source=ig_story_item_share&igshid=YmMyMTA2M2Y=

நடிகையாகவும்,உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கும் ஷ்ரேயா ரெட்டி, இந்த தீவிரமான க்ரைம்-த்ரில்லரின் படப்பிடிப்பின் போது திரைக்கு பின்னர் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்கிறார்.

“ஒரு தீவிரமான காட்சியை படமாக்கும் போது எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. காபி இல்லை, டீ இல்லை, இசை கூட எனக்கு உதவவில்லை. அதனால் குளிர் தாக்கும் ஊட்டியில் மீண்டும் என் கதாபாத்திரத்திற்குள்ளேயே செல்ல நான் முடிவு செய்தேன்.

IIFA Rocks : கதிர் ஐஸ்வர்யா நடித்த ‘சுழல்’ படத்திற்கு கைகொடுத்த அபிஷேக் பச்சன்

இதுதான் ஒரே வழி என்று எனக்கு தோன்றியது. “இந்த வேடிக்கையான வீடியோவில், இன்ஸ்பெக்டர் சக்கரையாக நடிக்கும் சக நடிகர் கதிருடன் ஸ்ரேயாவின் தோழமையை நாம் காண்கிறோம், மேலும் அவர்கள் இருவரையும் வலைதொடரில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் !

சுழல் – தி வோர்டெக்ஸ்: புலனாய்வு தொடர். பிரம்மா மற்றும் அனுசரண்.M இயக்கத்தில் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரின் எழுத்து மற்றும் தயாரிப்பில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவினர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போன ஒரு பெண்ணை தேடும் போது, கண்டுபிடிக்கப்படும் ஆச்சர்யம் நிறைந்த நிகழ்வுகளை தொகுத்து 8 எபிசோடாக உருவாக்கியுள்ளனர் படகுழுவினர்.

பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தொடரான, சுழல் – தி வோர்டெக்ஸ் என்ற தமிழ் தொடர், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கியம், சீனம், செக், டேனிஷ், டச்சு, பிலிப்பைன்ஸ், ஃபின்னிஷ், கிரேக்கம், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்ம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய்,உக்ரேனியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளிலும் இந்தத் தொடர் சப்டைட்டில்களுடன் கிடைக்கும்.

இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஜூன் 17 முதல் சுழல் – தி வோர்டெக்ஸைப் பார்க்கலாம்.

Kathir and Aishwarya Rajesh for Suzhal

மிரட்டும் கமல்ஹாசன்.; வழி விட்டு ஒதுங்கியது ‘யானை’

மிரட்டும் கமல்ஹாசன்.; வழி விட்டு ஒதுங்கியது ‘யானை’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத்பாசில் நரேன் சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘விக்ரம்’.
இந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியானது. இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.
உலகளவில் ரூபாய். 300 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா ஆந்திராவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளிவருவதால் 7 ஆண்டுகளுக்குப் பின் கமல் ஒரு பெரிய வெற்றியை கொடுத்துள்ளதாலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தின் மிரட்டும் வெற்றியால் இயக்குனர் லோகேஷ்க்கு கமல் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
மேலும் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக் பரிசாக வழங்கினார்.
மேலும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு அவரது கேரக்டர் பெயரான ரோலக்ஸ் என்ற பிராண்டட் வாட்சை பரிசாக வழங்கினார்.
திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’.
எனவே புதிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது
இந்த நிலையில் இந்த வாரம் ஜூன் 17ஆம் தேதி ஹரி இயக்கத்தில் அருண்விஜய்  நடித்துள்ள ‘யானை’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ‘விக்ரம்’ படத்தின் மிரட்டும் வெற்றியால் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் ஹரி அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் கமல்ஹானை சந்தித்து ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘யானை’.
ரஜினி வாழ்வை மாற்றியவர் பஞ்சு.; அவர் இல்லையென்றால் இளையராஜா கிடைத்திருக்க மாட்டார்.; பஞ்சு அருணாச்சலம் விழா சுவாரஸ்யங்கள்

ரஜினி வாழ்வை மாற்றியவர் பஞ்சு.; அவர் இல்லையென்றால் இளையராஜா கிடைத்திருக்க மாட்டார்.; பஞ்சு அருணாச்சலம் விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற  பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை PA Art Productions மற்றும் Black Sheep  இணைந்து ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர்.
இவ்விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்கும் சந்திப்பில்…
திரைப்பிரபலங்கள் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர் கே செல்வமணி,  அன்பு செழியன், காட்ரகடா பிரசாத், உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவிற்கான லோகோவை அறிமுகப்படுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களை பாராட்டும் நோக்கில்
மூத்த பத்திரிக்கையாளர்கள் தேவி மணி, தேவராஜ், கலைப்பூங்கா TN ராவணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இச்சந்திப்பில்  கலந்து கொண்ட  தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியது..,
“எதைச் செய்தாலும் அதில் வித்தியாசம் காட்டக்கூடியவர்கள் ஆர் ஜே விக்னேஷ், சுட்டி அரவிந்த். பிளாக்‌ஷிப்பின் கடுமையான உழைப்பு தான் அவர்களது வளர்ச்சிக்கு காரணம். சோ உடைய நாடகங்கள் போல், இவர்கள் நாடகம் இருக்கும். திரையுலகில் பெரியளவில் பாராட்டுகளை பெறாத திறமைசாலி பஞ்சு அருணாச்சலம். அவருடன் நான் வெகுநாட்கள் பயணம் செய்து இருக்கிறேன். அவருக்கு இவ்வளவு நாட்கள் பாராட்டுகள் வழங்கப்படாதது வருத்தம். இப்போது இது நிகழவிருப்பது பெரிய சந்தோசம்.
கலைப்புலி தாணு அவர்கள் பேசியது..
“50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்தவர் சரித்திரம் படைத்தவர். எழுத்தால் தமிழ் சினிமாவில் எண்ணிலடங்கா வெற்றிகளை தந்தவர் பஞ்சு அருணாச்சலம் அவருக்கு நடைபெறும் இந்த பாராட்டு விழாவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன். எல்லோருக்கும் நன்றி.
தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் காட்ரகடா பிரசாத் பேசியது…
திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களை முதலில் எங்கள் சங்கத்தில் சந்தித்தேன், அதிலிருந்து 2016 வரை அவருடன் இருந்தேன். அவர் அவருடைய படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு கதை தந்தவர். எண்ணற்ற பாடல்கள் தந்தவர், படங்களை தந்தவர். அவர் சாதனைகளை இப்போதுள்ளவர்கள் எவரும் நினைத்து கூட பார்க்க முடியாது. இம்மாதிரி சாதனையாளர்களை இப்போதுள்ள தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதனை PA Art Productions மற்றும் Black Sheep  செய்வது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் அன்பு செழியன் பேசியது…
அன்பு அண்ணன் பஞ்சு அவர்கள் என்னிடம் ஒரு குடும்ப நண்பரை போல் தான் பழகினார். அவர் நினைவை போற்றும் வகையில் விழா நடத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த விழாவில் நானும் கலந்து கொள்வது எனக்கு பெருமை.
இயக்குநர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி  பேசியது…
இங்கு வந்த பிறகு இரண்டு நிகழ்ச்சி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு கௌரவிக்கப்படும் பத்திரிக்கையாளர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். தேவராஜை நான் அறிமுகப்படுத்தியதை சொன்னார். இந்த மண்டபமே நன்றியால் நிறைந்த மண்டபமாக இருக்கிறது.
ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் என ரஜினி சார் வாழ்வை மாற்றிய படங்களை தந்தவர் பஞ்சு சார், அதே போல் கமல் சாரை சகலவல்லவன் போன்ற படங்கள் மூலம் மாஸாக மாற்றியவர். அந்த காலத்தில் பஞ்சு சார் கதையென்றால் முன்னணி நட்சத்திரங்கள் கேள்வி கேட்காமல் நடிப்பார்கள். அவருக்கு விழா எடுப்பது எழுத்தாளர்களுக்கு எடுக்கும் விழா. அந்த விழாவில் அவரால் பயனடைந்தவர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி
திரையரங்குகள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் பேசியது…
“தமிழ் திரையுலகம் தள்ளாடி கொண்டிருந்த காலத்தில் அன்னகிளி படத்தை தந்து சினிமாவை திரையரங்கை காப்பற்றியவர் பஞ்சு சார் அவர் புகழ் திரையரங்குகள் இருக்கும் வரை, சினிமா இருக்கும் வரை இருக்கும். நன்றி.
தயாரிப்பாளர் TG தியாகராஜன் பேசியது..
“பஞ்சு சார் எவ்வளவோ சாதனை படைத்திருக்கிறார் அவர் படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடன் சில காலம் பயணித்து இருக்கிறேன். அவர் பல ஜானர்களிலும் படம் தந்து சாதனை செய்துள்ளார். அவருக்கு இந்த விழா நடப்பதும் அதில் நானும் கலந்துகொள்ளவிருப்பதும் மகிழ்ச்சி. நன்றி
இசையமைப்பாளர் இயக்குநர் கங்கை அமரன் பேசியது…
அண்ணன் பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை. அவர் போட்ட பிள்ளையார் சுழி தான் எங்கள் வாழ்வை ஆரம்பித்து வைத்தது. அண்ணன் இருக்கும்போதே அவருக்கு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம்.
இப்போது நடப்பது மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தில் நடக்கும் விழாவில் பேசுவது போல் உள்ளது. இளையராஜா அண்ணனை தூக்கி விட்டது பஞ்சு அண்ணன் தான். அதே போல் என்னை வளர்த்து விட்டவர் பாரதிராஜா அவருக்கு நன்றி. இந்த விழா நடக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதி கூறுகிறேன் நன்றி.
நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பேசியது..
பஞ்சு அருணாச்சலம் பத்திரிக்கையாளராக வாழ்கையை துவங்கியவர். அவர் எடுத்த எல்லாப்படங்களும் வெற்றிப்படங்கள். பாதியில் நின்ற படங்களை வெற்றிகரமாக முடித்துகொடுக்க உதவியவர். அவர் பல பாடல்களை எழுதியுள்ளார், பல வீட்டில் அது இன்னும் ஒலித்துகொண்டிருக்கிறது. பல தோல்விகளை கடந்தே அவர் வாழ்கையை அமைத்துள்ளார். ஒருகாலத்தில், அவருடைய பங்கில்லாமல் வெளிவரும் படங்கள் குறைவாகவே இருந்தது. அவருக்கு விழா எடுப்பது மகிழ்ச்சி.
இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது..
பஞ்சு ஒரு மென்மையான மனிதர். நான், இளையராஜா, கங்கை அமரன் அவரால் வளர்ந்தவர்கள். என்னுடைய  அனைத்து படங்களையும் அவருக்கு போட்டுக்காட்டுவேன், அவர் பரிந்துரைகளை கேட்டு அதில் திருத்தங்கள் சொல்வார். அது படத்திற்கு பெரும் உதவியாய் இருக்கும். அவர் இல்லையென்றால் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்க மாட்டார். பஞ்சு அருணாச்சலம் உடைய பங்கு தமிழ் சினிமாவில் அதிகம். அவர் திறமையான எழுத்தாளர். அவருக்கு விழா எடுப்பது நமது கடமை. அவருடைய விழாவிற்கு தமிழ் திரையுலகம் முழுமையாக வர வேண்டும்.
More Articles
Follows