விஜய்யின் மகன் சஞ்சய்யும் படத்தில் நடிக்கிறார்

விஜய்யின் மகன் சஞ்சய்யும் படத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijays son Sanjay in action in Junction short filmஇயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் வாரிசாக சினிமாவுலகில் அறிமுகமானார் விஜய்.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் வாரிசுகளும் சினிமாவில் தலைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் விஜய் மகன் சஞ்சய் நடித்தார். தெறி படத்தில் அவரது மகள் திவ்யா நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜங்ஷன் என்ற ஒரு குறும்படத்தில் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.

இவர் கனடாவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே சில வருடங்களில் விஜய்யின் மகனையும் வெள்ளித்திரையில் நாயகனாக நிச்சயம் பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Actor Vijays son Sanjay in action in Junction short film

Actor Vijays son Sanjay in action in Junction short film

*பரியேறும் பெருமாள்* படத்தில் இடம்பெற்ற *கருப்பி* படைக்கும் சாதனை

*பரியேறும் பெருமாள்* படத்தில் இடம்பெற்ற *கருப்பி* படைக்கும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karuppi En Karuppi song crossed 1 million views in youtubeமாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’.

முக்கிய வேடம் ஒன்றில் கருப்பி என்ற ஒரு நாயும் நடித்துள்ளது.

கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக நடித்துள்ளனர்.

இப்படத்தினை நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் காலா பட இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வரவுள்ளனர்.

மண் மணம் மாறாத வகையிலும் சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை வலியுறுத்தி இப்படம் உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள ‘கருப்பி.. என் கருப்பி..’ என்ற பாடலை யூ-டியூப் பக்கத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Karuppi En Karuppi song crossed 1 million views in youtube

தாமரையின் ரெக்கார்டு ரெய்டு; சீக்ரெட் சிக்கியதால் அதிர்ச்சியில் நடிகை!

தாமரையின் ரெக்கார்டு ரெய்டு; சீக்ரெட் சிக்கியதால் அதிர்ச்சியில் நடிகை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Phone call voice leaked out news updatesசெய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்திபோல என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்…

அதேநேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது என்று யோசித்திருந்தால் சபாஷ்… போட்டுக் கொள்ளுங்கள்…

சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவரித்துறை ரெய்டு… அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளை மட்டுமே குறிவைத்த ரெய்டு சமீப காலமாக அதிகாரிகள் வீடுகளுக்கும் பரவியிருக்கிறது.

ஆட்சியாளர்களுக்கு சாதமாக நடந்து கொள்ளாமல்போனால் இதுபோன்ற ரெய்டு பயமுறுத்தல்கள் எல்லா ஆட்சியிலும் வழக்கமான ஒன்றுதான்.

அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் வருமானவரித்துறை இத்தகைய ரெய்டுகளிலேயே பல மாநிலங்களில் ஆட்சிமாற்றங்கள் நடந்திருக்கிறது என்றாலும் அது மிகையில்லை…

விஷயம் ரெய்டு பற்றியும் இல்லை….

தாமரை மலர் பார்த்திருப்பீர்கள்… குளங்களில் மிக அழகாக பூத்திருக்கும்… தாமரையின் அழகில் மயங்கி அதை பறிக்கவேண்டும் என்று யாரும் குளங்களில் இறங்கினால் அவ்வளவுதான்….

மேலே அழகாக கண்ணுக்கு தென்படும் தாமரை மலரை தாங்கிப்பிடித்திருக்கிற அதன் தண்டுகள் கொடிகளாக அந்த தண்ணீருக்கடியில் வலைப்பின்னலாக பரவியிருக்கும்.

மலர் பறிக்கும் ஆசையில் இறங்குகிறவன் கால்களை கொடிகள் பிடித்து இழுத்து சேற்றில் சிக்க வைத்து விடும் வெளியில் வருவது அத்தனை சுலபமில்லை.

அதேபோல, அந்த குளத்து தண்ணீரில்தான் தாமரை மலர்ந்தாலும் அந்த தண்ணீரையோ, மழையாக பொழியும் நல்ல நீரைகூட தன் இலை மீது ஒட்டிக் கொள்ள அனுமதிக்காமல் நாசுக்காக தவிர்த்து விடும் பழக்கம் தாமரைக்கு உண்டு…

சரி தாமரையை பற்றி தெரிந்து கொண்டீர்கள்… அந்த நடிகை தமிழ் சினிமாவில் சமீபத்திய பிரபலம்… தொழிலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் பலரின் அறிமுகம் அவசியம் என்பதால் ஒரு கிரிக்கெட் விழா நிகழ்வில் ஒரு பிரபலத்தை சந்தித்திருக்கிறார்… அதன்பிறகு அவர்களுக்குள் அதிக நெருக்கம்…

சரி அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம்…

படிக்கிற நீங்களும் நானும் அப்படிதான் நினைச்சி அடுத்த செய்திக்கு போயிடுவோம்… ஆனா, தாமரைக்கு அந்த பிரபலம் மேல ஒரு பார்வை… வழக்கமான நாமதான் தாமரை மீது கண் வைப்போம்… இங்கே உல்டாவாக தாமரை கண் வைத்தது.

தங்கள் வழக்கமான ரெய்டு வலை வீசியும் பலன் இருக்காது என்று தெரிந்து கொண்டது… காரணம், அந்த பிரபலம் ஒழுங்கா வரிகட்டி பல காலமாக சமூகத்தில் பல தலைமுறையாக ஒரு அந்தஸ்தில் இருப்பவர்…

இப்படி ஏதாவது இருந்தால் அடுத்து அவர்கள் தனித்தகவல்கள், தகவல் தொடர்புகள் ஆராயப்படும்… செல்போன்… வீட்டுப்போன்… ஆபீஸ் போன் எல்லாம் யாரோ ஒருவரால் பதிவு செய்யப்படும்…

அப்படி செய்யும்போது சில நேரங்களில் பல பிரபலங்களின் அந்தரங்கங்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரித்திருக்கிறது…

முன்பெல்லாம் ஒரு தகவலை சொல்ல வேண்டுமானால் கடுதாசி எழுதி, தந்தி அடித்து, ஆள் அனுப்பி செய்தி சொல்வது வழக்கம்… இப்போது பல சமூக வலைதளங்கள் வந்து விட்டதால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அது அடுத்த மூலையில் இருப்பவரை போய் சேர்ந்து விடுகிறது…

தாமரையின் கண்ணில் சிக்கிய அந்த பிரபலத்தின் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டது… செல்போன் பேச்சுக்களில் நடிகையின் தொடர்புகள் சிக்கியதும்… ஏக குஷியடைந்த தாமரையின் கொடிகள் இப்போது அந்த நடிகையையும், அந்த பிரபலத்தையும் தனித்தனியாக தங்கள் வசப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது…

அந்தரங்கம் அம்பலத்திற்கு வந்து விடுமோ என நடிகையை விட அதிக அதிர்ச்சியில் இருப்பவர் அந்த பிரபலம்.

அதே நேரம் நடிகை ஷாக் ஆனதோடு ரொம்ப கவலையாகியிருக்கிறாராம்… காரணம், பதிவு சிக்கியதல்ல… பல ரூட்டில் ஓடும் வண்டி என்பது தெரிந்துவிடக்கூடாதே என்பது அவரின் கவலை…

எதையோ நினைத்து பதிவை தொடங்கிய தாமரைக்கு பலரின் பர்ஸ்னல்கள் சிக்கியதால்… அடுத்தடுத்து அவர்களை வளைக்கும் பணியை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

அதேநேரம், ரெக்கார்டு ரெய்டை சத்தமில்லாமல் ஒரு பக்கம் செய்து வருகிறது தாமரையின் தனிப்படை.

இன்னும் சில மாதங்களில் சத்தமில்லாமல் தொடங்கிய ரெக்கார்டு ரெய்டு… பல அதிர்ச்சிகளை நடிகர், நடிகைகளுக்கு தெரியாமலேயே தாமரைக்கு வாரி வழங்கியிருக்கிறது… இதை வைத்து எப்படியும் தாமரையை மலர வைத்து விடலாம் என கணக்கு போடுகிறார்கள்…

ஐய்யோ பாவம்… சேற்றில் முளைத்தாலும்… பூஜைக்கு கோயிலுக்கு போனாலும்… ஓட்டு போடும் மக்கள் மனசில் வைத்துக் கொள்ளவோ, தலையில் சூடிக்கொள்ளவோ தாமரை லாயக்குபடாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை…!

Actress Phone call voice leaked out news updates

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கருணாஸ் MLA கைது

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கருணாஸ் MLA கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunas MLA arrested for his Controversial speechநடிகர் கருணாஸ் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ-வாகவ உள்ளார்.

இவர் ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

அப்போது தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியிருந்தார்.

அவர் பேசும் போது…

சாமி, சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க அதே மாதிரி நடந்துக்குறாங்க.

அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அட்வைஸ் பண்ணனும்

உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினா தான் கொலை செய்ய துணிச்சல் வரும்.

ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம். பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்துவிடுவோம் என பேசியுள்ளார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர்.

இதில் 2 காவல் ஆணையர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட போலீசார் கருணாஸ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போலீசார் கருணாஸை கைது செய்தனர்.

அப்போது பேசிய அவர், `அரசு திட்டமிட்டே பழிவாங்குகிறது. சிறைச்சாலைகள் எங்களுக்காகத் தான் கட்டப்பட்டுள்ளன. வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன்’ என்று தெரிவித்தார்.

கருணாசுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Karunas MLA arrested for his Controversial speech

உலகளவில் சிறந்த நடிகராக *மெர்சல்* விஜய் தேர்வு: ஐரா அறிவிப்பு

உலகளவில் சிறந்த நடிகராக *மெர்சல்* விஜய் தேர்வு: ஐரா அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay selected as Best International Actor in IARA Awards 20182018ம் ஆண்டுக்கான IARA (International Achievement recogniton awards) லண்டன் மார்ஷ் வால் பகுதியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் செப்டம்பர் 22ல் நடைபெற்றது.

சர்வதேச கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் IARA விருதுகள் வழங்கப்படுகின்றன.

லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு இதனை நடத்தி வருகிறது.

இதில் உலக அளவில் தமிழ் நடிகர் விஜய் உள்பட 8 நடிகர்களின் பெயர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன.

இந்தப் பட்டியலில் ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ் ஜான் போயிகா, ‘கெட் அவுட்’ திரைப்பட நடிகர் டேனியல் கலூயா, ஜாமி லோமஸ் (ஹொலியோக்ஸ்) கிரிஸ் அட்டோ (ஸ்விங்ஸ்) மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்களும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் பெஸ்ட் இன்டர்நேஷனல் ஆக்டர் விஜய்(#BestInternationalActorVijay) என்ற ஹேஸ்ட்டேக்கை பகிர்ந்து வருகின்றனர். இது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

மெர்சல் படத்தை அட்லி இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது.

Vijay selected as Best International Actor in IARA Awards 2018

IARA-Awards

அதியமான் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக 2 ஏஞ்சல்-கள்

அதியமான் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக 2 ஏஞ்சல்-கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi to romance with Kayal Anandhi and Payal Rajput in Angel“ஏபிசிடி”, “நேபாளி” ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ஏஞ்சல்”.

“தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் : ரமேஷ் (விஸ்வரூபம் 2) கலை இயக்குநர்: சிவா, நடன இயக்குநர்: தினேஷ்.

“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” ஜானரில் இப்படம் உருவாகிறது.

மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.

Udhayanidhi to romance with Kayal Anandhi and Payal Rajput in Angel

More Articles
Follows