தன் குழந்தைகளுக்காக காரையும் வீட்டையும் மாற்றிய விஜய்

தன் குழந்தைகளுக்காக காரையும் வீட்டையும் மாற்றிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Changed his home and Carநடிகர் விஜய்க்கு சொந்தமான ஒரு வீடு சாலிக்கிராமத்தில் இருக்கிறது.

அந்த வீட்டில்தான் தன் அலுவலகத்தை நடத்தி வாடகை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

இந்த வீட்டை காலி செய்த நடிகர் விஜய் தற்போது சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள நீலாங்கரை வீட்டில் குடியேறிவிட்டார்.

தற்போது அந்த வீட்டில் வசதி குறைவாக இருப்பதாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவும் வீட்டை கொஞ்சம் மாற்றி வருகிறாராம்.

இதனால் பனையூரில் உள்ள மற்றொரு வீட்டுக்கு மாறியிருக்கிறார் விஜய்.

இதுபோல் தான் பயன்படுத்தும் காரையும் மாற்றிவிட்டாராம்.

பெரும்பாலும் மாருதி ஸ்விப்ட் காரில் ஷூட்டிங்க்கு வரும் விஜய், தற்போது இன்னோவா காரில்தான் வருகிறாராம்.

Actor Vijay Changed his home and Car

அழகென்ற சொல்லுக்கு அமுதா மீண்டும் ரிலீஸ் ஏன்.? ரிஜன்சுரேஷ் விளக்கம்

அழகென்ற சொல்லுக்கு அமுதா மீண்டும் ரிலீஸ் ஏன்.? ரிஜன்சுரேஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Azhahendra Sollukku Amudha movie re release on 30th Marchகடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது.

மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான்.

அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது..

ஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் அல்லவா..?

இந்த சமயத்தில் அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையுடன், சினிமா உலகமும் வாரந்தோறும் படங்களை வழக்கம்போல ரிலீஸ் செய்து வந்தது..

அந்த நம்பிக்கையில் தான், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி டிச-2ஆம் தேதி தனது தயாரிப்பில் உருவான ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தையும் கிறிஸ்டல் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் ரபேல் சல்தானா.

படம் பார்த்த ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் நல்ல படம், பொழுதுபோக்கான நகைச்சுவை படம் என்கிற விமர்சனத்தை பெற்ற இந்தப்படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது.

ஆனால் டிச-4ஆம் தேதியே அம்மா மறைந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர்.

தொடர்ந்து டிச-5ஆஅம் தேதி அம்மா காலமானதையடுத்து அந்தவாரம் முழுதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

அதற்கடுத்த வாரத்தில் வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்லபடம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.

திரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப்படத்தின் நாயகன் ரிஜனை சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்.

“மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த துயர நிகழ்வுடன் எங்களுக்கு இன்னொரு பேரிடியாக அமைந்துவிட்டது இந்தப்படத்தின் ரிலீஸ். அழகான, அருமையான, நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தார்.

எங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்புமுனையாக இருக்கும் என நான், இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையாக இருந்தோம்.

தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து படம் நன்றாக இருக்கிறது.. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது என பாசிடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.

ஆனால் மூன்றாம் நாளே முதல்வர் மறைவின் காரணமாக, இந்தப்படம் ஒரு வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேறவேண்டிய நிலை உருவானது.

படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை.

ஆனாலும் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தேதியை பார்த்துவந்தோம்.

இந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.

அந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது.

வரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும் தான் ரிலீஸ் செய்கிறோம்” என விளக்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.

ரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக்குழுவினர்.

Azhahendra Sollukku Amudha movie re release on 30th March

Azhagendra Sollukku Amudha movie stills (11)

100 படங்களை தயாரித்த நிறுவனத்திற்கு பெருமை தேடித் தந்த விஜய்

100 படங்களை தயாரித்த நிறுவனத்திற்கு பெருமை தேடித் தந்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We are proud for Producing Mersal says Sri Thenandal Filmsபிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 100 படங்களை தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் 100வது படமான மெர்சல் படத்தில் விஜய் நடித்திருந்தார்.

ரூ. 130 கோடி செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை இயக்கியிருந்தார் அட்லி.

இப்படம் மாபெரும் வசூல் படமாக அறிவிக்கப்பட்டது.

அண்மையில் இப்படத்தின் பட்ஜெட்டை அட்லி 40 கோடி வரை உயர்த்திவிட்டார். எனவே அப்படம் லாபம் இல்லை என மற்றொரு தயாரிப்பாளர் சிவா கூறியிருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் எங்களுக்கு ‘மெர்சல்’ படம் மெகா ஹிட் என்றும் தளபதி விஜய்யுடன் பணியாற்றியது எங்களுக்கு பெரிய மரியாதை என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

We are proud for Producing Mersal says Sri Thenandal Films

ரஜினியுடன் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.: திண்டுக்கல் ஐ.லியோனி

ரஜினியுடன் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.: திண்டுக்கல் ஐ.லியோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I refuse to act with Rajini says Dindigul i Leoniமேடை பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்திற்கு திமுக செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் பா.விஜய், யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

லியானியின் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் புத்தகத்தை வெளியிட இயக்குனர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார்.

அதன்பின் லியோனி பேசினார். அவர் பேசியதாவது…

‘நான் நடித்த ஒரே திரைப்படம் ‘கங்கா கௌரி’தான். இதில் அருண் விஜய் மற்றும் வடிவேலுக்கு அப்பாவாக நடித்தேன்.

அதன்பின்னர், ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடிக்க கேட்டார்கள். நான்தான் மறுத்து விட்டேன். அதன்பின்னர் ராஜா நடித்தார்.” என்று பேசினார்.

I refuse to act with Rajini says Dindigul i Leoni

சிவகார்த்திகேயன்-ராஜேஷ் கூட்டணியில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின்

சிவகார்த்திகேயன்-ராஜேஷ் கூட்டணியில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and rajeshசீமராஜா படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் இந்தாண்டு 2018 விநாயக சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ரவிகுமார் இயக்கத்தில் ரகுல் பிரத்தி சிங்குடன் டூயட் பாடவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

மேலும் ஷங்கரின் 2.0 படத்தில் பணியாற்றிய நிறைய டெக்னீசியன்கள் இதில் பணியாற்றவுள்ளனர்.

இதனையடுத்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் முக்கிய ரோலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சமீபத்திய நாயகி சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சினிமா ஸ்டிரைக் ஒரு பக்கம்; மறுபக்கம் கமலுடன் இணையும் நயன்தாரா

சினிமா ஸ்டிரைக் ஒரு பக்கம்; மறுபக்கம் கமலுடன் இணையும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Nayantharaதமிழ் திரையுலகம் இதுவரை எத்தனையோ போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை சந்தித்துள்ளது.

ஆனால் தற்போது உள்ளது போல் ஒரு மாதத்திற்கு புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்தது இல்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

ஒரு மாத்த்தை நெருங்கும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மற்ற மொழி படங்களை தியேட்டரில் திரையிட்டு வருகின்றனர்.

மேலும் பழைய ஹிட்டான படங்களையும் திரையிடுகின்றனர்.

35 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான கமலின் காக்கி சட்டை படத்தை வருகிற மார்ச் 30ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

இந்நிலையில் மம்மூட்டி-நயன்தாரா நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான “புதிய நியமம்” என்ற படத்தையும் அதே நாளில் வெளியிடயிருக்கிறார்களாம்.

இப்படத்திற்கு தமிழில் வாசுகி என பெயரிட்டுள்ளனர்.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை நயன்தாரா எப்படி பழிக்கு பழி தீர்க்கிறார் என்பதே படத்தின் சிறப்பம்சமாகும்.

சாஜன் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

More Articles
Follows