ரசிகர் வீட்டில் ஒருவராகவே மாறி நிக்காஹ் செய்து வைத்த விஜய் ஆண்டனி

ரசிகர் வீட்டில் ஒருவராகவே மாறி நிக்காஹ் செய்து வைத்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர் பீர் முகமது.

விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு என்று எந்த விழாவாக இருந்தாலும் முதல் ரசிகராக பட போஸ்டர் ஒட்டுவது, திரையரங்கத்தின் முகப்பை அலங்கரிப்பது என்று வரிந்துகட்டிக்கொண்டு களப் பணியாற்றக் கூடியவர்.

இவருடைய மகள் (நிக்காஹ்) திருமணம் சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்த விழாவில் முக்கிய பிரமுகர் போல் இல்லாமல் திருமண வீட்டார் போல் வெகு நேரம் அங்கிருந்து விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் சகஜமாக பேசி விழாவை சிறப்பித்தார்.

Actor Vijay Antony took part in the marriage event of his fan daughter

Vijay Antony
Vijay Antony
‘நான் சிவப்பு மனிதன்’ பாணியில் விஜய் தந்தையின் அடுத்த அதிரடி படம்

‘நான் சிவப்பு மனிதன்’ பாணியில் விஜய் தந்தையின் அடுத்த அதிரடி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் .ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71வது படமாக உருவாகி இருக்கிறது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம்.

இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார்.

சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகினி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மகேஷ் K தேவ்,
இசை சித்தார்த் விபின்,
எடிட்டிங் பிரபாகர். கலை வனராஜ்.

இப்படத்தில் ஒரு தைரியமான போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி நடித்திருக்கிறார்.

அவரது பாத்திரம் வழக்கமானதாக இல்லாமல் புதுமையாக அதிரடியாக இருக்கும். அவரது மனைவியாக இனியாவும் மகளாக டயானா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.

அழுத்தமான வித்தியாசமான வில்லனாகப் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார்.ஒரு காலத்தில் சட்டத்தின் நுணுக்கங்களை கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பான படங்களை இயக்கியவர் .

அந்தக் காலத்தில் ‘நான் சிவப்பு மனிதன்’ என்ற பரபரப்பான படம் இயக்கி பெயர் பெற்றார். அதே பாணியில் இந்த ‘நான் கடவுள் இல்லை’ படத்தையும் இயக்கியிருக்கிறார்.

படத்தின் ஆடியோ விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று 5 மணிக்கு வெளியாகி வைரலாகி வருகிறது.

Director SA Chandra Sekar’s next film like Naan Sigappu Manithan

நர்ஸ்களுடன் ‘சத்ரியன்’ பார்த்த விஜயகாந்த்..; பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் வாழ்த்து

நர்ஸ்களுடன் ‘சத்ரியன்’ பார்த்த விஜயகாந்த்..; பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உடல் நலக்குறைவால் வருடந்தோறும் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வழக்கம்.

இந்த வருடமும் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி துபாய் சென்றார். அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியனும் சென்றுள்ளார்.

இந்நிலையில், சிகிச்சைக்காக துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், தான் நலமுடன் இருப்பதாக புகைப்படத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,.

“நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்ரியன் படத்தில் வரும் வசனம் போல… பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் கேப்டனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் நடித்த படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ‘சத்ரியன்’. இந்த படத்தை தான் விஜய் நடிப்பில் ‘தெறி’யாக இயக்கினார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Am doing well. Watching ‘Satriyan’ movie, with Sisters who taking care of me.

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம். https://t.co/QekthdQNz2

DMDK founder Vijayakanth health update

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த வேலம்மாள் குழுமம்

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த வேலம்மாள் குழுமம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்

பாராலிம்பிக்கில் மாரியப்பன் வெல்லும் 2-வது பதக்கம் இது.

வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் மு. க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

சென்னை திரும்பிய மாரியப்பன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் புதுச்சேரி் துணை நிலை ஆளுநர் தமிழிசையையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில் உயரம் தாண்டுதல் சாம்பியன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீ .எம்.வி.எம் வேல்மோகன் அவர்களால் சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மிகப்பெரிய சாதனைக் களத்தில் வெள்ளி வென்று சென்னை திரும்பிய மாரியப்பன் தங்கவேலு அவர்களை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் எம்.வி.எம் வேல்மோகன் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் சந்தித்து சாம்பியனை வாழ்த்தினர்.

மேலும் ஸ்ரீ எம் .வி. எம் வேல்மோகன் அவர்கள் மாரிமுத்து அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை மற்றும் மாலை அணிவித்தும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அர்ஜுனா விருது பெற்ற மாரியப்பன் அவர்களை வேலம்மாள் மாணவர்கள் உற்சாகமாகக் கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தி வரவேற்றனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கில் தேசத்தைப் பெருமைப்படுத்தியமைக்காக மாரியப்பன் தங்கவேலுவை அவர்களுக்கு வேலம்மாள் பள்ளி இத்தகைய சிறப்பான வரவேற்பினை அளித்துப் பாராட்டியது.

Velammal Institution’s warm welcome to Mariyappan

குசேலனை தேடி வந்த கிருஷ்ணன்.; முக ஸ்டாலினுக்கு கவிதையில் நன்றி சொன்ன கஜேந்திரன்

குசேலனை தேடி வந்த கிருஷ்ணன்.; முக ஸ்டாலினுக்கு கவிதையில் நன்றி சொன்ன கஜேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இயக்குநர் டி.பி.கஜேந்திரன் அவர்களை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பிற்காக முதல்வருக்கு இயக்குநர் டி.பி.கஜேந்திரன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கவிதை வடிவில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது…

முத்துவேலர் பேரனே,
முத்தமிழ் அறிஞரின் மைந்தனே,
கழகத்தின் தளபதியே
தமிழகத்தின் முதல்வரே

உன் நல்லாட்சியில் வாழும்
நான் ஒரு சிறு குடிமகன்
தூரத்திலிருந்து உன் முகம் பார்த்து
துன்பத்தை துரத்தும் சிறியவன்

கல்லூரி காலத்தில்
புத்தகம் பார்த்து படித்ததை விட
உன் முகம் பார்த்து படித்தது ஏராளம்
படங்களை நான் இயக்கினாலும்
என்னை இயக்கியது நீங்களல்லவா?

குசேலனை தேடி வந்த
கிருஷ்ணன் போல
என் வீடு தேடி வந்தாய்
நான் வீடுபேறு அடைந்தேன்

நலம் விசாரித்து, நற்பரிசு தந்து
நானிலம் போற்ற நின்றாய்
நீங்கள் என் நண்பன் என்பதே
நான் பெற்ற செல்வம்

நட்புக்கு இலக்கணம் வகுத்தவனே
வாழும் நாளெல்லாம்
உனை நினைப்பேன்
உனை மறக்க நேரிடின் மரிப்பேன்

அன்புடன்
டி.பி.கஜேந்திரன்.

முதல்வருடன் வந்து
முழு அன்பைத் தந்த
பொய்யாமொழியின் புதல்வருக்கும்,
கழகத்தின் செயல்வீரர் பூச்சி முருகனுக்கும்
நன்றிகள் கோடி.

இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்

Director Gajendran thanked Tamil Nadu CM Mk Stalin

ஹீரோயினியாகும் ஷங்கர் மகளை வாழ்த்த வந்த கோலிவுட் பிரபலங்கள் யார் யார்.?

ஹீரோயினியாகும் ஷங்கர் மகளை வாழ்த்த வந்த கோலிவுட் பிரபலங்கள் யார் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,
கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். சூரியா அறிமுகப்படுத்த, கார்த்தியின் ஜோடியாகும் இந்த செய்தி திரையுலகிலும், மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“விருமன்” என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 6) நடைபெற்றது.

இந்த பூஜையில் நடிகர் சிவகுமார், திருமதி லட்சுமி சிவகுமார், சூர்யா, கார்த்தி, புதுமுகம் அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர், திருமதி. ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, K.E.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் பாலா, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்குனர் சுதா கோங்க்ரா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குநர் முத்தையா, இயக்குனர் ஜெகன், இயக்குனர் த.செ.ஞானவேல், இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், DOP எஸ்.கே.செல்வகுமார், மாஸ்டர் அனல் அரசு, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, போஸ்டர் நந்தகுமார், சக்தி பிலிம்ஸ் சக்திவேல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும்.

அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர்.

முன்னணி இயக்குநரின் மகள் என்பதை தாண்டி தன்னை இப்படத்திற்காக முழு அளவில் தயார் செய்து கொண்டுள்ளார். நடிப்புக்காக சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். கலை: ஜாக்கி , எடிட்டிங்: வெங்கட்

தேனியில் செப்டம்பர் 18 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

#விருமன் #Viruman

Pooja of Suriya-Jyotika’s 2D Entertainment to producer Karthi-Muthaiah project titled VIRUMAN held.

More Articles
Follows