‘என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி..’ பாடல் புகழ் நடிகர் T.K.S.நடராஜன் காலமானார்.; நடிகர் சங்கம் இரங்கல்

TKS Natarajanபழம்பெரும் நடிகரும், நாட்டு புற பாடகரும், “என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி” பாடலின் மூலம் புகழ் பெற்ற பாடகருமான T.K.S.நடராஜன் (வயது 87) இன்று காலை இயற்கை எய்தினார்.

இரத்த பாசம், கவலை இல்லாத மனிதன், தேன்கிண்ணம், நேற்று இன்று நாளை, நான் ஏன் பிறந்தேன், குரு, தீ, வருஷம்16, வாத்தியார் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் டப்பிங் யூனியன் ஆரம்பிப்பதற்கு முன்பாக, நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமாவுக்கு டப்பிங் கொடுக்கும் வேலை செய்து வந்தார்.

யூனியன் இல்லாததால், மற்ற ஆர்ட்டிஸ்ட்டுக்கு டப்பிங் பேச தனக்கு தெரிந்த நாடக நடிகர் நடிகைகளை தேடி பிடித்து.. அவர்களை டைரக்டர்களுக்கு அறிமுக படுத்தி டப்பிங் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அப்படியே நாடக நடிகைகள் பலருக்கும் நிறைய வாய்ப்பு வாங்கி கொடுத்து தானும் நடிகராக வலம் வந்துள்ளார். “கற்பகம்” படத்தில் கே.ஆர்.விஜயாவை அறிமுகப் படுத்திய பிரபல டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ஆஸ்தான நடிகராக இருந்துள்ளார்.

நிறைய எம்.ஜி.ஆர் படங்களிலும் நாகேஷ் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அன்னாரது மறைவுக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும்.. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டது..

#RIP – தென்னிந்திய நடிகர் சங்கம்
05.05.2021

Actor TKS Natarajan passed away

Overall Rating : Not available

Latest Post