சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் : STEM துறைகளில் பெண்கள் குறித்து சர்வதேச மாநாடு

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் : STEM துறைகளில் பெண்கள் குறித்து சர்வதேச மாநாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனித பரிமாண வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என STEM துறைகளின் பங்கு முக்கியமானது. உலகளவில் STEM துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, STEM துறைகளில் பெண்கள் எனும் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு சென்னை அண்ணா பல்கலைகழக விவேகானந்தா அரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகரம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் அண்ணா பல்கலைகழகம், முல்லை கல்வியியல் நிறுவனம் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றனர். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் மாநாட்டில் தொடக்க உரையாற்றினார். நிகழ்வில் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா சிறப்புரை வழங்கினார்.

மாநாட்டில் சூர்யா பேசியதாவது…

அகரத்திற்கு இன்று ரொம்ப முக்கியமான நாள். முதல் முறையா Academic Focus பண்ணி STEM தொடர்பா ஒரு Conference நடத்துறோம். கடந்த பதினைந்து வருட அகரம் விதைத் திட்ட பணிகளில் இதுவரைக்கும் 52௦௦-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிச்சிருக்காங்க.. படிச்சிட்டு இருக்காங்க… அதில் 70% பேர் தங்கைகள்… பெண்கள் தான் படிக்கிறாங்க… அது முக்கியமான பங்களிப்புன்னு நினைக்கிறேன். தொடர்ச்சியா பெண்கள் கல்விக்கு உறுதியா நிற்க முடிஞ்சது பெரிய achievement-ஆ பார்க்குறேன்.

இவ்வளவு பெண் பிள்ளைகளுக்கு Support பண்றோம்.. பெண்கள் படிச்சிர்றாங்க… அப்படின்னு யோசிச்சாலும் அதுக்குள்ள வேற என்ன பண்ணனும்? வேற என்ன பண்ணனும்னு யோசிக்கும் போது தான் Realise பண்ண விஷயம்.. ஒரு Science சம்மந்தப்பட்ட துறைகளிலையோ, படிப்புகளிலோ.. அதற்கு அப்புறமா அது சம்மந்தப்பட்ட வேலைகளையோ.. Science-னா, Science மட்டுமில்லை Science, Engineering, Technology, Mathematics; அந்த STEM துறைகள்ல படிக்கிறதும்; அது சார்ந்த பணிகள்-ல Continue பண்ணறதும் ரொம்ப குறைவா இருக்கு. ஏன் இப்படி இருக்கு அப்படின்னு பார்க்கும் பொழுது, இது அகரம் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல. உலகம் முழுக்கவே இந்த Challenge இருக்கு 30% பெண்கள் தான் STEM சம்பந்தப்பட்ட துறைகள்ல உலகம் முழுக்க பங்கேற்காங்குறாங்க.. ஏறக்குறைய 12 மில்லியன் பெண்கள் உலகம் முழுக்க STEM சம்மந்தப்பட்ட துறைகள்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறாங்க. ஆனா.. எப்படி பார்த்தாலும் அது ஆண்களை விட மிக மிக மிக குறைவு தான்.

ஏன் பெண்களின் பங்கு குறைவா இருக்குங்கறதுக்கு உலகளவுல நிறைய ரிப்போர்ட் இருக்கு. பெரிய அளவுல பாகுபாடு காட்டப்படுது காரணமா சொல்லப்படுது. வீட்ல ஆரம்பிச்சு குழந்தைகள் பிறந்து வளரும் சூழல்.. ஆண் பெண் விளையாட்டு பொருள் வாங்கி கொடுக்குறதுல இருந்தே பாகுபாடு இருந்துகிட்டே இருக்கு… STEM துறைகள்ல பெண்கள் வர்றதுக்கு இந்த பாகுபாடான அணுகுமுறை தடையா இருக்கு. இந்த பாகுபாடு குறித்து பேசணும், அத புரிஞ்சுக்கணும்.. அத உடச்சி தகர்த்து வெளிய வரணும்னு தோணிச்சி..

STEM-ங்கறது Science, Engineering, Technology, Mathematics மட்டுமல்ல. அது ஒரு Creativity, Problem Solving, Innovation சம்மந்தப்பட்டது. Resilience, Problem Solving Capability, Creative-ஆ யோசிக்கிறது, innovative இருக்கிறது பெண்களுக்கு இயல்பா இருக்கு. ஆனா, அத தாண்டி அவங்களுக்கான Space ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு. அதுக்கு ரொம்ப முக்கியமான காரணம்-னு Research என்ன சொல்லுதுன்னா.. பெண்களுக்கான Roll Model; அவங்கள மாதிரியே அவங்க பார்க்கவேண்டிய Roll Model ரொம்ப குறைவா இருக்கிறாங்க. Roll Models இல்லாததாலேயே அதுக்குள்ள போகுறதுல தயக்கமும், மனத்தடையும் இருக்குன்னு சொல்றாங்க.

இங்க நம்ம முன்னாடி இருக்கிற உதாரணங்கள் எல்லாம் Actually அவ்வளோ பெண்கள் STEM-ல சாதிச்சிருக்காங்க. ஆனா நமக்கு வெளியில தெரியறது கிடையாது. உதாரணத்திற்கு நிறைய முன்னோடி பெண்கள் வரலாறு முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். இன்னக்கி நாம புழங்குற பல விஷயங்கள் கண்டுபிடிச்சவங்க பெண்கள் தான்.

அடுத்த இரண்டு நாள் நாம பார்க்கப்போற, உரையாடப் போற Resource Persons எல்லாமே STEM துறைகள்ல சிறந்த பங்களிப்புகளை வழங்கிய வழங்க இருக்கின்றவர்கள். பல ஆய்வுகள செஞ்சிட்டு இருக்கிற ஆளுமைகள். இவங்களோட நீங்க பேசணும், உரையாடனும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கணும். உலகம் பரந்து இருக்கிறது அதில் இருக்கும் வாய்ப்புகளை நீங்கள் எல்லோரும் தெரிஞ்சிக்கணும்.. புரிஞ்சுக்கணும் தான் இந்த Empower’-ஒட முக்கியமான purpose. STEM குறித்த விழிப்புணர்வை ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி கூடங்களில் பரவலாக உருவாக்கவேண்டும்.

சமீபத்தில் Interesting ஆய்வு குறித்து பேசிட்டு இருந்தோம். அந்த ஆய்வு Harvard பல்கலைகழகத்தில் Engineering படிக்கிற ஆண்கள், பெண்கள் மத்தியில் நடத்தப்பட்டது அந்த ஆய்வுல என்ன சொல்றாங்கன்னா பெண்களும் இஞ்சினியர்ஸ்-ஆ இருக்காங்க; ஆண்களும் இஞ்சினியர்ஸ்-ஆ இருக்காங்க. ஆனால் அதிகபட்சமா இங்க ஆண்கள் தான் இஞ்சினியரிங் வேலைகளுக்குள்ள இருக்காங்க. பெண்கள் இஞ்சினியரிங் வேலைகளுக்குள்ள வந்தாங்கன்னா, என்ன செய்வாங்க? என்ற அந்த ஆய்வோட முடிவு என்ன சொல்லுதுன்னா… பெண்கள் வந்தாங்கன்னா இவங்க ரொம்ப ரொம்ப சமூகப் பொறுப்போட Socially Conscious இருப்பாங்க. பெண்கள் பிரச்சனைகளை ரொம்ப realistic-ஆ அணுகுவாங்க. பிரச்சனைக்கு இவங்க யோசிக்க கூடிய தீர்வு.. அதை விட ரொம்ப யதார்த்தமாகவும், செயல்படுத்த கூடியதாகவும், மக்களுக்குரியதாகவும் இருக்கும். அது வெறும் பணம் சம்பாதிக்கதுக்குரியதாக இல்லாம மக்களுக்கானதாக இருக்கும்-னு அந்த ஆய்வு சொல்லுது. அதனால் தங்கைகள் ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக Research, கண்டுபிடிப்புகளுக்குள்ளும், STEM சம்மந்தப்பட்ட துறைகளில் உங்களை தொடர்ந்து இயக்குங்கள். இதுல Career, வாய்ப்பும், தேவையும் நிறைய இருக்கு.. முயற்சி செய்திங்கனா நீங்கள் கண்டிப்பா சாதிக்க முடியும். STEM துறைகளில் பெண்களின் பங்கேற்ப்பு குறித்த உரையாடலை, செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்பதற்கே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாடு நடக்கறதுக்கு காரணமாக இருகின்ற முனைவர் விஜய அசோகன், இதனை முதல் நாளில் இருந்து கையில் எடுத்து செயல்வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் அகரம் Volunteers ஒவ்வொருவருக்கும், Academicians, இந்த மாநாட்டை நடத்த இடம் வழங்கி முன் நிற்கும் அண்ணா பல்கலைகழகத்திற்கும் அதன் Registrar, துணைவேந்தர், பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றி..

Actor Suriya speaks about STEM at Students meet

போதை கடத்தலுடன் தொடர்பா.? அவதூறுக்கு ஆபத்து.; 5 கோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

போதை கடத்தலுடன் தொடர்பா.? அவதூறுக்கு ஆபத்து.; 5 கோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போதை கடத்தலுடன் தொடர்பா.? அவதூறுக்கு ஆபத்து.; 5 கோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்கள், ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர்.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்.

இவருடைய சமூக சேவையை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வ தேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் முனைவோர்‘ என்ற விருதும் பெற்றுள்ளார்.

கடின உழைப்பு மூலம் இளம் வயதிலே பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ள அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டது.

அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் திரு.ஜாபர் சாதிக் என்பவருக்கும் திரு.அப்துல் மாலிக் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்ற அவதூறு செய்தி வெளியானது.

உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்தி வெளியீட்ட ஆதன் தமிழ் மீடியா பிரைவேட் லிமிடெட், திரு,மாதேஷ், திரு.வராகி, திரு.சவுக்கு சங்கர் உட்பட சில யு.டியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் 18.03.2024 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து .அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது…

திரு.அப்துல் மாலிக் மலேஷியாவில் புகழ் பெற்ற தொழிலதிபர். அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சினிமா தொடர்புடைய பல வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ் படங்களைவை மலேஷியாவில் விநியோகம் செய்து வருகிறார். இணை தயாரிப்பாளராக பல தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல உதவிகளையும் தன்னலம் பார்க்காமல் செய்து வருகிறார். அவருடைய இந்த சேவைகளை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதை கொடுத்து கெளரவித்துள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொள்ளும் பல நட்சத்திர கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மலேஷியா வரும்போது சினிமா சார்ந்து பல ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் திரு.அப்துல் மாலிக்கிடம் கேட்பதுண்டு.
இதன் காரணமாக திரு.அப்துல் மாலிக்கின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீய நோக்கத்துடன் சில வீடியோக்களை வெளியீட்டுள்ளனர்.

குறிப்பாக ஆதன் மீடியாவைச் சேர்ந்த திரு.மாதேஷ், திரு.வராகி பாலாஜி மற்றும் திரு.சவுக்கு சங்கர் ஆகியோர் எந்தவித ஆதரமும், ஆவணங்களும் இல்லாமல் அப்துல் மாலிக் அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்துவதோடு அதன் மூலம் மறைமுக ஆதயாம் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

அதை அடிப்படையாக கொண்டு மேலும் பல யு-டியூப் சேனல்கள் செவி வழி செய்தியை உண்மை என்று நம்பி எந்தவித விசாரணை, முன் அனுமதியும் இல்லமால் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

மேற்கண்ட வீடியோ பதிவுகள் அப்துல் மாலிக் அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்தியிருப்பதோடு, மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

அதை சட்டபூர்வமாக அணுகும் விதமாக பொய் வீடியோ வெளியிட்ட நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளோம்.

அந்த புகாரில், அவதூறு வீடியோக்களை நீக்குவதோடு, பொதுவெளியில் திரு.அப்துல் மாலிக் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது, இந்திய மதிப்பில் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்’’ என்றனர்.

Producer Abdul Maalick filed case against Youtubers

கோயிலை விட கடவுளை விட காடுகளே சிறந்தது..; ஆண்ட்ரியா அதிரடி

கோயிலை விட கடவுளை விட காடுகளே சிறந்தது..; ஆண்ட்ரியா அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோயிலை விட கடவுளை விட காடுகளே சிறந்தது..; ஆண்ட்ரியா அதிரடி

கா பட இசை வெளியீட்டு விழா,

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், “கா”.

இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துக் கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசியதாவது…

கா ல்லோரும் ஈஸியா ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி சிம்பிளான டைட்டிலாக வைத்து விட்டார் இயக்குநர். படம் எடுத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது சில கரக்சன்கள் இருந்தது அதனால் தான் இந்த தாமதம். எல்லோரும் என்ன பிரச்சனை எனக் கேட்டார்கள்.

சினிமாவைப் பொறுத்தவரை அது நம் கையில் இல்லை. எல்லாம் மேலே உள்ளவன் மனசு வைக்க வேண்டும், இறுதியாக உங்கள் முன் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். நாஞ்சில் மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். நானே ஆரம்பத்தில் நம்பவில்லை திரைக்கதையை அத்தனை ஸ்பீடாக கொண்டு போயுள்ளார். மும்பையில் படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டினார்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி

டான்ஸ் மாஸ்டர் லோகு பேசியதாவது…

இயக்குநர் நாஞ்சில் சாருக்கு என் நன்றி. இது என் முதல் மேடை. எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. பாடல்கள் அனைத்தையும் அருமையாக எடுத்துள்ளோம் படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் இளங்கோ பேசியதாவது..

இந்தப்படம் காட்டுக்குள் தான் நிறையக் காட்சிகள் எடுத்தோம். இயக்குநர் ஷாட் வைக்கும் இடத்திற்கு நார்மலாக மனிதர்கள் போக முடியாது அத்தனை கஷ்டம். எல்லோரும் அர்ப்பணிப்போடு உழைத்து படத்தை உருவாக்கியுள்ளோம். வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி.

நடிகர் கமலேஷ் பேசியதாவது…

30 வருடங்களாக இந்த துறையில்
இருக்கிறேன். என் மீது சின்னத்திரை என்ற முத்திரை வைக்காமல் எனக்கு வாய்ப்புத்தந்த ஜான் மேக்ஸ் சார், இயக்குநர் நாஞ்சில் ஆகியோருக்கு நன்றி. கண்டிப்பாக இது வெற்றிப்படமாக இருக்கும். இப்படத்தில் ஆண்ட் ரியா மேடத்தை சூப்பர் ஹீரோவாகப் பார்க்கலாம். அட்டகாசமாக நடித்துள்ளார். எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது. இயக்குநர் நாஞ்சில் மிகப்பெரிய இயக்குநராக வலம் வருவார். இப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் நன்றி

“கா” பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு
பேசியதாவது…

கா என்பது அட்சரம் ஒரு வார்த்தை என்றும் மாறாதது. பாடல்கள் அத்தனையும் அட்டகாசமாக எழுதியுள்ளார்.கா என்பது இறைவன், இந்த படத்தில் ஆண்ட்ரியா மேடமே வன துர்க்கை போன்று தான் இருப்பார். மரங்கள் வெட்டாதீர்கள் என்பதை ஒரு அழகான கமர்ஷியல் திரில்லராக எடுத்துள்ளார். ஜான் மேக்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். என் முழு உழைப்பைத் தந்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசியதாவது…

கா படத் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்
அவருகிஉ சினிமாவைத் தவிர எதுவும் தெரியாது. எவ்வளவு பணம் தந்தாலும் அவர் சினிமா தான் எடுப்பார்.

அவருக்கு சினிமா மீது அவ்வளவு காதல். தான் எடுத்த படம் வெளிவர வேண்டும் என்று இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் நாஞ்சில். மிக உயிரோட்டமுள்ள படமாக இப்படத்தை எடுத்துள்ளார். நல்ல படம் எடுப்பது காஷ்டம் அதை வெளியிடுவது இன்னும் கஷ்டம். ஆனால் இப்படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

கா, காட்டைக் குறிக்கும் தலைப்பு. காட்டை வைத்து படம் எடுப்பது கடினமானது. நான் அந்த மாதிரி கஷ்டப்பட்டிருக்கிறேன்.

காடு என்பது தனி சொர்க்கம் அதை வைத்து படம் இயக்கியுள்ள நாஞ்சில் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் அற்புதமான தயாரிப்பாளர். அவரது தயாரிப்பான மைனா படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். ஆண்ட்ரியா மற்ற நடிகைகள் போல் இல்லாமல் பட விழாவிற்கு வந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். வித்தியாசமான களத்தில் வித்தியாசமான படத்தை எடுத்துள்ள படக்குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…

ஜான் மேக்ஸ் ஒரு வரமாகத் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார். ஒரு அருமையான படத்தினை எடுத்துள்ளனர். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். எந்த ஒரு படமும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைத் தர வேண்டும் அப்போது தான் தமிழ் சினிமா பிழைத்திருக்கும். ஆண்ட்ரியா தமிழ்ப்பெண் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. இப்போது கேட்ட போது தான் தெரிகிறது அவர் இன்னும் பெரிய வெற்றி பெற வேண்டும். ஜான் மேக்ஸ் ஆண்டனி இருவருக்காகவும் கா படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது…

மெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம் அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நடிகை ஆண்ட்ரியாவிற்கு நன்றி. படம் ஆரம்பித்தலிருந்து இன்று வரை உடன் நிற்கிறார். சலீம் கௌஸ் சார் அவரை நிறையப் போராடித்தான் வர வைத்தேன். கதையைக் கடைசி வரை கேட்கவேயில்லை. என்னைப்பற்றிக் கேட்டார் எனக்குப் பிடித்த இயக்குநர் பற்றி கேட்டார் பின் எனக்காக வந்தார். இனிமேலும் கதை கேட்க மாட்டேன் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடு வருகிறேன் என்றார். இப்போது அவர் இல்லாததது வருத்தம். என் படக்குழுவினர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோருக்கும் நன்றி. இப்படத்தினை தயாரித்த என் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும் ஒரு படமாக இருக்கும். நன்றி.

நடிகை ஆண்ட்ரியா பேசியதாவது…

நாஞ்சில் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தை முடித்துள்ளார். கொரோனாவிற்கு முன்னதாக கேட்ட கதை இப்போது திரைக்கு வந்துள்ளது. ஒரு படம் குழந்தை என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அம்மா அப்பா மாதிரி. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே படம் நன்றாக வரும். இப்படத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும். நிஜமான சிக்னலே இல்லாத பல இடங்களில் காட்டின் உள்ளே போய் படம் எடுத்துள்ளோம். நாங்கள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும். இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் எனக்குத் தெரிந்தவர்கள். அதனால் அவர்கள் அழைத்தால் வந்தால் உடனே வந்துவிடுவேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார் அவருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

அந்த காலத்தில், வெளிவரும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப்பிடிக்கும். விஜய சாந்தி இது போல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார் பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மஞ்சும்மள் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது நம்மூர் எழுத்தாளர் அதைக் காட்டமாக விமர்சித்துள்ளார் அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். பெரிய எழுத்தாளர் இப்படிப் பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக்காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்க வில்லையே எனக் கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது. தமிழர்கள் அப்படியில்லை. காரணம்

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது…
கா படம் பிரம்மாதமாக வந்துள்ளது. ஆண்டனி ராஜ் எங்கள் படத்தை வாங்கி நல்ல வகையில் மக்களிடம் சேர்த்து வருகிறார் அவருக்கு என் நன்றி. இங்கு வாழ்த்த வந்த ஆளுமைகள் பாக்யராஜ், கே ராஜன் சார், உதயகுமார் சார் அனைவருக்கும் நன்றி. ஆண்ட்ரியா கடின உழைப்பைத் தந்துள்ளார். நாஞ்சில் அருமையான படத்தைத் தந்துள்ளார் உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் – நாஞ்சில்
தயாரிப்பாளர் – ஜான் மேக்ஸ்
வெளியீடு – பி. ஆண்டனி தாஸ் MD( Sasikala Production)
இசை – சுந்தர் சி பாபு
ஒளிப்பதிவு – அறிவழகன்
கலை – பழனிவேல்
எடிட்டிங் – எலிசா
ஸ்டண்ட் – எடி மின்னல் இளங்கோ
பாடலாசிரியர் – பாலா சீதாராமன்
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திரு முருகன்

Forest is better than God says Andrea

திகில் க்ரைம் டிராமா ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இசைத் தொகுப்பில் ஏழு பாடல்கள்

திகில் க்ரைம் டிராமா ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இசைத் தொகுப்பில் ஏழு பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திகில் க்ரைம் டிராமா ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’
இசைத் தொகுப்பில் ஏழு பாடல்கள்

பிரைம் வீடியோவின் அடுத்து வரவிருக்கும் திகில் க்ரைம் டிராமா ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’

நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட திகில் க்ரைம் டிராமா ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’.

இந்த இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் நடிகர் நவீன் சந்திரா (Naveen Chandra) கதாநாயகன் வேடத்தில் தோன்ற அவருடன் இணைந்து சுனைனா(Sunainaa), கண்ணா (Kanna) ரவி (Ravi), மாலினி (Malini) ஜீவரத்தினம், (Jeevarathnam) ஸ்ரீகிருஷ்ண தயாள்(Srikrishna Dayal,) மற்றும் குமரவேல் (Kumaravel) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இந்த இசைத் தொகுப்பில் இடம்பெறும் ஏழு பாடல்கள்களையும் இப்போது அனைத்து இசை ஸ்ட்டீமிங் தளங்களிலும் கேட்டு ரசிக்கலாம்.

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 அன்று வெளியிடப்படவிருக்கிறது.

இணைப்பு :https://open.spotify.com/album/5V54iqpQ0JjHbuT2P9AvTq?si=wDzJdztbSnWarlyoL70Jqw

அஷ்வத் நாகநாதன் ( Ashwath Naganathan), இசையமைப்பில் உருவான இந்த தொகுப்பில் அதன் டைட்டில் டிராக் உட்பட இந்த திகில் க்ரைம் டிராமா தொடரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சிலிர்ப்பூட்டும் கூறுகளை உள்ளடக்கி.

அச்சமூட்டும் தொனியுடனான மனதைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒட்டுமொத்த இசைத் தொகுப்பு அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் சேவைத் தளங்களிலும் கிடைக்கும்.

பகவதி பி.கே.,(Bagavathy PK,) மஷூக் ரஹ்மான் (Mashook Rahman,) மற்றும் புகழேந்தி கோபால் ஆகியோர் இயற்றிய இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களுக்கு கபில் கபிலன், (Kapil Kapilan,) பாப் ஷாலினி (Pop Shalini), இஷான் நிகாம், (Ishan Nigam i கிறிஸ்டோபர் ஸ்டான்லி (Christopher Stanley), ஆர். அரவிந்த்ராஜ், (R. Aravindraj) பாலாஜி ஸ்ரீ (Balaji Sri,) சௌந்தர்யா.ஆர். தேவூ தெரசா மாத்யூ, ‘உதிரி’ விஜயகுமார், ஸ்ரீராம் க்ருஷ், அஷ்வத் (Ashwath,) ஷைலி பித்வைக்கர், (Shailey Bidwaikar), ஸ்வஸ்திகா ஸ்வாமினாதன், சுனிதா சாரதி (Sunitha Sarathy) மற்றும் அஞ்சனா பாலகிருஷ்ணன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள மர்மங்களால் சூழப்பட்ட ஒரு அழகான கிராமத்தின் பின்புலத்தில் அமைந்த இந்த தொடரின் சாரத்துடன் இந்த இசைத் தொகுப்பு கச்சிதமாக இணைந்து பொருந்துகிறது.

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இந்தத் இன்ஸ்பெக்டர் ரிஷி இசைத் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளது :

1. இதயத்தின் மாயம் (தலைப்பு பாடல்) – பாடலாசிரியர்: மஷூக் ரஹ்மான்; பாடகர்: கிறிஸ்டோபர் ஸ்டான்லி
2. கண்ணாடி காதல் – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடகர்: கபில் கபிலன், பாப் ஷாலினி
3. உறை பனி நான் – பாடலாசிரியர்: மஷூக் ரஹ்மான்; பாடியவர்: இஷான் நிகாம்
4. காடு – பாடலாசிரியர்: புகழேந்தி கோபால்; பாடகர்: ஆர் அரவிந்த் ராஜ், பாலாஜி ஸ்ரீ, சௌந்தர்யா ஆர், தேவு டிரஸ்ஸா மேத்யூ, ‘உதிரி’ விஜய்குமார், ஸ்ரீராம் கிரிஷ், மற்றும் அஸ்வத் 5. ஹே சகி ஹே – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடகர்: ஷைலி பித்வைகர் மற்றும் ஸ்வஸ்திகா சுவாமிநாதன்
6. தொண்டகப்பாறை – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடியவர்: சுனிதா சாரதி
7.பரிசுத்த தேவனே – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடியவர்: அஞ்சனா பாலகிருஷ்ணன்

7 Songs in Inspector Rishi Crime drama

டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த யாளி.; மீண்டும் உருவெடுத்து வரும் ‘கஜானா’

டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த யாளி.; மீண்டும் உருவெடுத்து வரும் ‘கஜானா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த யாளி.; மீண்டும் உருவெடுத்து வரும் ‘கஜானா’

இந்திய சினிமாவில் முதல் முறையாக யாளி விலங்கு..: வியக்க வைக்கும் ‘கஜானா’

பான் இந்தியா திரைப்படங்களின் வருகை அதிகரித்திருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒரு திரைப்படம் வெளியானாலே அப்படத்தை பான் இந்தியா திரைப்படம் என்று சொல்கிறார்கள்.

உலக அளவில் ரசிகர்களை ஈர்க்க கூடிய கதைக்களத்துடன், வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’.

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக இதுவரை அச்சு வடிவிலும், சிற்ப வடிவிலும் நாம் பார்த்து வந்த யாளி விலங்கை முதல் முறையாக திரையில் தோன்ற செய்து ரசிகர்களை வியக்க வைக்கும் பணியை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளி தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. யானை மற்றும் சிங்கத்தின் உருவம் கொண்ட இந்த யாளி விலங்கு தென்னிந்தியாவையும் தாண்டி இலங்கை போன்ற பிற நாட்டு கோவில்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

சிற்பக்கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் யாளி விலங்கு யானையையே விழுங்கும் ஆற்றல் படைத்தது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி, டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்று கருதப்படும் இத்தகைய விலங்கை இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் காட்சிப்படுத்தவில்லை.

சிற்பம் மற்றும் அச்சு வடிவில் நாம் பார்த்த யாளி விலங்கை முதல் முறையாக உயிரோடு கொண்டு வந்திருக்கிறது ‘கஜானா’ படக்குழு. இதற்காக அவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தரத்திலான VFX பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா மற்றும் லண்டனில் நடைபெற்ற இபப்டத்தின் VFX பணிகள் யாளி விலங்கை வடிவமைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, அந்த விலங்கை வியக்க வைக்கும் விதத்திலும், சிறுவர்கள் கொண்டாடும் விதத்திலும் உருவாக்கியிருக்கிறார்களாம்.

இதுவரை டைனோசரை விரும்பி வந்த சிறுவர்கள் ‘கஜானா’ படத்திற்கு பிறகு யாளி விலங்கை நிச்சயம் கொண்டாட செய்வார்கள், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த க்ரீன்ஸ்கார் VFX (Greenscar VFX) நிறுவனம் தலைமையில், வெளிநாடுகளில், வெளிநாட்டு VFX கலைஞர்கள் கைவண்னத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் VFX காட்சிகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள், விலங்குகளுடன் உரையாடும் காட்சிகளும் மிக தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் யோகி பாபு, அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் பேசி நடித்தது இதுவே முதல் முறையாகும். VFX பணிகளினால் இப்படம் வெளியாவது சற்று காலதாமதம் ஆனாலும், படத்தில் இடம்பெறும் VFX காட்சிகள் உலகத்தரத்தோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் இடம்பெறாத காட்சிகளாகவும் இருக்கும்.

இத்தகைய முயற்சி குறித்து தயாரிப்பு தரப்பு கூறுகையில், ”உலகளவிலான ஒரு கதைக்களத்தை படமாக்கும் போது அப்படத்தின் தரமும் உலகத்திரத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் தான் படத்தின் VFX காட்சிகளுக்கு அதிக செலவு செய்திருப்பதோடு, கடும் உழைப்பையும் கொடுத்திருக்கிறோம். எங்கள் புதிய முயற்சி நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று நம்புகிறோம். அதேபோல், எங்களைப் போன்ற வளரும் தயாரிப்பாளர்களின் இத்தகைய முயற்சிக்கு திரையுலகின் ஆதரவாக நின்றால் எங்களுக்கு உற்சாகம் கொடுப்பதோடு, இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்வதற்கான உந்துதலாகவும் இருக்கும். எங்களுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து, பலர் இதுபோன்ற வித்தியாசமான முயற்சியை மேற்கொள்வதற்கான நம்பிக்கையையும் கொடுக்கும், எனவே எங்களது இந்த ‘கஜானா’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைப் போல், திரையுலகினரும் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வேதிகாவுடன் சாந்தினியும் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிலும், கவர்ச்சியிலும் கிரங்கடிக்கவும் செய்திருக்கிறார்.

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய சாகசங்கள் நிறைந்த ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ கோடை விடுமுறையின் கொண்டாட்டமாக மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

மேலும், ‘கஜானா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரீபுரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு அறிவிக்க உள்ளது.

Gajaana VFX sequences setting a new standard in Indian cinema

#Gajaana Movie VFX sequences are anticipated to be unparalleled, setting a new standard in Indian cinema,

they dedicated over 2 years to world-class VFX work in order to achieve this by @greenscarvfx from Salem

This is a Sample see you in main film…!!!

@LIONSatishSamz @Vedhika4u @ActorInigo @IamChandini_12 @NarenthenVihas @Sureshsugu @ProDharmadurai

இயற்கை அன்னை ஆசியுடன் உருவான காதல் காவியம் ‘ஆலன்’

இயற்கை அன்னை ஆசியுடன் உருவான காதல் காவியம் ‘ஆலன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயற்கை அன்னை ஆசியுடன் உருவான காதல் காவியம் ‘ஆலன்’

நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ படப்பிடிப்பிற்கு ஆசியளித்த இயற்கை, திகட்டாத காதல் காவியம் ஆலன்

நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ‘அருவி’ மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார்.

ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்… மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம்… இந்தக் களம் படமாக்கப்பட்டபோது கொடைக்கானலில் கடும் மழையும், குளிரும் உடன் பயணித்தது.

சென்னையில் படமாக்கப்பட்ட போது புயலும், காற்றும் இந்த காதலை ஆரத் தழுவியது. வாரணாசியிலும், ரிஷிகேசிலும் படமாக்கப்பட்ட போது பனிக்காற்றும், கடும் குளிரும் கூடவே இருந்து தாலாட்டியது. இப்படி இயற்கை அன்னை ஆசீர்வதித்த இந்த காதலை தமிழ் ரசிகர்களின் பார்வைகளுக்கு பரிமாற.. இறுதி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.

‘இசைப்புதல்வன்’ மனோஜ் கிருஷ்ணாவின் இசை மெட்டிற்கு கவிஞர் கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுத, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் வசீகர குரலில் ‘வாரணாசியில் மனித பிறப்பின் ரகசியங்களை சிவனைப் பார்த்து கேட்பது போல்..’ ஒரு பாடலும்.., இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் காந்தக் குரலால் காதலில் பரிதவிக்க ஒரு பாடலும்… . பாடகிகள் சின்மயியும், மும்பை நிகிதா காந்தியும் தங்களின் தேனினும் இனிய குரலால் காதலை ஆரத் தழுவ தலா ஒரு பாடலும்..என இந்த நான்கு கானங்களும் உங்கள் செவிகளுக்கு செந்தமிழில் உள்புக.. இசையின் தாளலயங்களில் தாலாட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. விரைவில் உங்கள் செவி வழியாக இதயத்தில் தஞ்சமடையவும் காத்திருக்கிறது.

இந்த காதல் காவியத்தில் ‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஹரிஷ் பெராடி, மதன்குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை காண காத்திருங்கள்.‌ உங்களை ‘ஆலன்’ வெகு விரைவில் வெண் திரையில் சந்திப்பான்.. காதலின் வாசத்துடன்…” என்றார்.

Vettri starring Aalan movie got blessing of Nature

More Articles
Follows