கடமை மீறல்.. திட்டமிடப்பட்ட குற்றம்.. அதிகார அத்துமீறல்‌; சூர்யா ஆவேசம்

கடமை மீறல்.. திட்டமிடப்பட்ட குற்றம்.. அதிகார அத்துமீறல்‌; சூர்யா ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriya slams TN Police in Sathankulam murder caseசாத்தான்குளம் பகுதியில் போலீசாரின் கொடூரமான தாக்குதலில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் (தந்தை மகன்) என இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை கண்டித்து ‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌ என சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதோ…

‘மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன.

சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌.

‘இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌’ என்று கடந்து செல்ல முடியாது. போலீஸாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, ‘நலமாக இருப்பதாக’ சான்று அளித்திருக்கிறார்‌.

நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, ‘இயந்திர கதியில்‌’ சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌.

சிறையில்‌ நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்கவில்லை. இத்தகைய ‘கடமை மீறல்‌’ செயல்கள்‌, ஒரு குடிமகனின்‌ உரிமையில்‌ நம்‌ ‘அதிகார அமைப்புகள்‌’ காட்டும்‌ அலட்‌சியத்தை வெளிச்சம்‌ போட்டு காட்டுகின்றன.

அதனால்‌ இதுபோன்ற ‘துயர மரணங்கள்‌’ ஒரு வகையான ‘திட்டமிடப்பட்ட குற்றமாக’ (Organised Crime) நடக்கிறது.

ஒருவேளை இருவரின்‌ மரணம்‌ நிகழாமல்‌ போயிருந்தால்‌, போலீஸாரின்‌ இந்தக்‌ கொடூர தாக்குதல்‌ நம்‌ கவனம்‌ பெறாமலேயே போயிருக்கும்‌. பாதிக்கப்பட்டவர்கள்‌ சிறையிலிருந்து வெளியே வந்தாலும்‌, ‘போலீஸாரை எதிர்த்தால்‌ என்ன நடக்கும்‌’ என்பதற்கான வாழும்‌ சாட்சியாகி இருப்பார்கள்‌.

தங்கள்‌ மரணத்தின்‌ மூலம்‌ தந்தை மகன்‌ இருவரும்‌ இந்தச்‌ சமூகத்தின்‌ மனச்சாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்‌. இந்த கொடூர மரணத்தில்‌, தங்களுடைய கடமையை செய்யத்‌ தவறிய அனைவரும்‌ நீதியின்‌ முன்‌ நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்‌.

உயர்‌ நீதிமன்றம்‌ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும்‌ என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

இதேபோல, ‘தவறு செய்கிறவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ தண்டனையில்‌ இருந்து தப்பிக்க முடியாது’ என்கிற நம்பிக்கையை அரசாங்கமும்‌, நீதி அமைப்புகளும்‌ மக்களிடம்‌ உருவாக்க வேண்டும்‌.

மாறாக, நமது ‘அதிகார அமைப்புகள்‌’ அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன. இரண்டு அப்பாவிகளின்‌ மரணத்திற்குப்‌ பிறகும்‌, உடனடியாக எடுக்கப்படுகிற நடவடிக்கை, சம்பந்தப்பட்ட போலீஸாரை ‘ஆயுதபடைக்கு’ மாற்றம்‌ செய்வது மட்டுமே.

ஆயுதப்படையில்‌ பணியாற்றுவது என்பது, ‘தண்டனை கால பணியாக’ பொதுமக்கள்‌ மத்தியில்‌ ஒரு பிம்பத்தை இது உருவாக்குகிறது.

‘இரண்டு உயிர்‌ போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான்‌ தண்டனையா?’ என்று எழுந்த விமர்சனத்துற்குப்‌ பிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார்‌ ‘பணியிடை நீக்கம்‌’ செய்யப்பட்டனர்‌.

காவல்துறையில்‌ அர்ப்பணிப்புடன்‌ தன்‌ கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில்‌ நன்கு அறிவேன்‌. ஓட்டு மொத்த நாடும்‌ இயங்க முடியாமல்‌ ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும்‌ ஓய்வில்லாமல்‌ மக்களின்‌ நலனுக்காக காவல்துறையினர்‌ உழைக்கின்றனர்‌.

‘கரோனா யுத்தத்தில்‌’ களத்தில்‌ முன்‌ வரிசையில்‌ நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன்‌.

அதேநேரம்‌, அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும்‌ காவல்துறையினருக்கு எனது கடும்‌ கண்டனங்கள்‌.

அதிகார அத்துமீறல்‌ வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது. அன்பும்‌, அக்கறையும்‌ கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின்‌ மனதில்‌ நிலைத்து நிற்கிறார்கள்‌.

ஒரே நேரத்தில்‌ இரண்டு உயிர்கள்‌ பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின்‌ துயரத்தில்‌ நானும்‌ பங்கெடுத்துக்‌ கொள்கிறேன்‌.

இனிமேலும்‌ இதுபோன்ற ‘அதிகார வன்முறைகள்‌’ காவல்துறையில்‌ நிகழாமல்‌ தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும்‌, நீதிமன்றமும்‌, பொறுப்பு மிக்க காவல்‌ அதிகாரிகளும்‌ ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்‌.

குற்றம்‌ இழைத்தவர்களும்‌, அதற்கு துணை போனவர்களும்‌ விரைவாக தண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநிறுத்தப்படும்‌’ என்று பொதுமக்களில்‌ ஒருவனாக நானும்‌ காத்திருக்கிறேன்..

அன்புடன்
சூர்யா

Actor Suriya slams TN Police in Sathankulam murder case

டாக்டர் திவ்யா சத்யராஜின் புதிய இயக்கம்..; இது ஆரோக்கிய கட்சி.!

டாக்டர் திவ்யா சத்யராஜின் புதிய இயக்கம்..; இது ஆரோக்கிய கட்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG-20200628-WA0089நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌ என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவர் உலகின்‌ மிக பெரிய மதிய உணவுத்‌ திட்டமான அக்ஷய பாத்ராவின்‌ விளம்பரத்‌ தூதுவர் ஆவார்‌.

சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைக்கேடுகளை பற்றியும்‌ நீட் தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைத்தளங்களில்‌ வைரலானது.

அரசு மருத்துவமனைக்கு வரும்‌ கர்பிணிப்‌ பெண்களுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும்‌ என்று சுகாதார அமைச்சரிடம்‌ கோரிக்கையும் விடுத்திருந்தார்‌.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்‌ இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று திவ்யா சமீபத்தில்‌ விவசாய அமைச்சரிடம்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

திவ்யா சத்யராஜ்‌ ஊட்டச்சத்து துறையில்‌ செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகம்‌ அவருக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. டாக்டா்‌ பட்டம்‌ பெற்றவர்களை கெளரவிக்க அமெரிக்காவில்‌ நடைபெறவிருந்த விழா கோவிட்‌ 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமார்‌ அவர்களுக்கு என்‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால்‌ கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான்‌ சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார்‌.

ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்கு தான்‌ என்பது நியாயம்‌ கிடையாது. தமிழ்‌ நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌” என்று திவ்யா சொல்கிறார்‌.

2021ல் பாத்துக்கலாம்… ரஜினியை அடுத்து அஜித்-சூர்யா முடிவு

2021ல் பாத்துக்கலாம்… ரஜினியை அடுத்து அஜித்-சூர்யா முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ajith suriyaகொடிய வைரஸ் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் கிட்டதட்ட 3 மாதங்களாக அமலில் உள்ளது.

சினிமா சூட்டிங்குகளும் நிறுத்தப்பட்டு விட்டன.

கமலின் இந்தியன்2, ரஜினிகாந்த்தின் அண்ணாத்த’, அஜீத்தின் ’வலிமை’ உள்ளிட்ட பல படங்கள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட பின்’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவில் இருக்கிறாராம் ரஜினி.

அண்ணாத்த படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருந்தது.

அதுபோல தான் அஜித்தும் முடிவில் இருக்கிறாராம்.

இவர்களை அடுத்து சூர்யாவும் ’அருவா’ பட சூட்டிங்கை ஜனவரியில் தொடங்க நினைக்கிறாராம்.

படக்குழுவினர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என இந்த ஹீரோக்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

அடுத்த லாக்டவுன் வேண்டாம்ன்னா வீட்டிலேயே இருங்க.. முதல்வர் அதிரடி

அடுத்த லாக்டவுன் வேண்டாம்ன்னா வீட்டிலேயே இருங்க.. முதல்வர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karnataka cmகொடிய வைரசான கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.

இந்த வைரஸ் பாதிப்பால் உலகமெங்கும் பல்வேறு மரண செய்திகளை கேட்டு வருகிறோம்.

இந்தியாவில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளது.

அதுபோல் கர்நாடகாவிலும் தற்போது அதிகரித்து வருகிறது.

முக்கியமாக பெங்களுருவில் இந்த வைரஸ் பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

எனவே ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அண்மையில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீடிக்க வேண்டாம் என்றால் மக்களை வீட்டிலேயே பாதுக்காப்பாக இருக்க வலியுறுத்துங்கள் என தெரிவித்திருந்தாராம்.

ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் என அறிவித்த மாநிலங்கள்

ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் என அறிவித்த மாநிலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lockdown 5.0கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளதால் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவே மேற்கு வங்க முதல்வர் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துவிட்டார்.

இந்த மாநிலங்களை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பொது முடக்கத்தை நீடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சுஷாந்த் சிங் நினைவு இல்லம் & ட்ரஸ்ட் தொடங்க குடும்பத்தினர் முடிவு

சுஷாந்த் சிங் நினைவு இல்லம் & ட்ரஸ்ட் தொடங்க குடும்பத்தினர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sushant singh rajputகிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டியவர் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

34 வயதான இவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

இது இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுஷாந்த் மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் ‘குட்பை சுஷாந்த்’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சினிமா, அறிவியல், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இளம் திறமைசாலிகளுக்கு ஆதரவாக சுஷாந்த் சிங் ராஜ்புட் அறக்கட்டளை ஒன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சிறு வயதில் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் என்ற இடத்தில் அவர் வளர்ந்த வீட்டை நினைவில்லமாகவும் மாற்ற உள்ளார்களாம். அதில் சுஷாந்த் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்கள், ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அவருடைய டெலஸ்கோப், பிளைட் சிமுலேட்டர் உள்ளிட்டவற்றை அவருடைய ரசிகர்களுக்காகவும், ஆர்வலர்களுக்காகவும் வைக்க உள்ளனர்.

மேலும் சுஷாந்த உயிரோடு இருக்கும்போது பயன்படுத்திய இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய கணக்குகளை அவருடைய நினைவாக தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் அவரின் ஆன்மாவுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows