மலையாளிகளின் பாதம் தொட்டு வணங்குகிறேன்..; சூர்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கடந்த 6-ந்தேதி நீட் தேர்வு எழுதச்சென்றனர்.

மலையாள மொழி புரியாமல் தமிழக மாணவர்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக கேரள அரசு நீட் தேர்வு நடைபெறும் ஊர்களில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

குறிப்பாக எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற திருவாரூர் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி இறந்ததும், அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல கிருஷ்ணசாமியின் உறவினர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கேரள போலீசாரும், அதிகாரிகளும் செய்து கொடுத்தனர்.

இவை அனைத்தும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின்பேரில் நடைபெற்றது.

பினராயி விஜயனின் நடவடிக்கைக்கு தமிழக மக்கள் பாராட்டு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தன் பாராட்டுக்களை பதிவு செய்தார்.

ஏற்கெனவே பினராயி விஜயனின் செயல் பாடுகள் பற்றி வெகுவாக பாராட்டி வருபவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகர் சூர்யாவும் பினராயி விஜயனை பாராட்டி பேசினார்.

நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு கேரள மக்கள் தாயுள்ளத்துடன் உதவி செய்தனர்.

இதைக்கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. மாணவர்கள் மன உளைச்சலின்றி தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் பினராயி விஜயன், மற்றும் அதிகாரிகளுக்கும், கேரள மக்களுக்கும் அவர்களின் பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

திட்டுனா கண்டுக்காதீங்க; செயல்ல காட்டுவோம்… ரஜினி கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.

விரைவில் கட்சி தொடங்கவுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அதன் உறுப்பினர்களை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளார்.

ரஜினியின் அரசியலுக்கு இப்போதே சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “விமர்சனங்களுக்கு ரசிகர்கள் யாரும் பதிலடி கொடுக்க வேண்டாம்.

நம் நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக செயலில் காட்டுவோம்” என ரஜினி தெரிவித்துள்ளார்.

இன்றுமுதல் தன் விஸ்வாசத்தை தொடங்கும் தல அஜித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கியது.

‘விஸ்வாசம்’ படத்திற்காக ராமோஜி ராவ் ஃபிலிம்ஸ் சிட்டியில் வில்லேஜ் செட் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, நேற்று சென்னையிலிருந்து ஹைதராபாத் பயணமானார் அஜித்.

சென்னை விமான நிலையத்தில் அஜித்தை சந்தித்த இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், அஜித்துடன் ஒரு செல்ஃபி எடுத்து, அதனை இணையதளங்களில் வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

விஸ்வாசம் பாத்தில் அஜித்துடன் நாயகியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.

இணையத்தில் வெளியான டூ பீஸ் படங்கள்; என்ன சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. “ஒரு நாள் கூத்து” படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.

சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார்.

” கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளி இட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.

என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை.

என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இதன் தொடர்பாக நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.

ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன்.

ஆயினும் இந்த பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு.

எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது.

இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக கொள்வதை தவிர வேறு வழி இல்லை”என்று கூறினார்.

ரஜினி-விஜயசாந்தி பாணியில் மோதும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வாசு இயக்கத்தில் பிரபு தயாரிப்பில் ரஜினி, விஜயசாந்தி நடித்த படம் மன்னன்.

இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தில் ரஜினியும் விஜயசாந்தியும் மோதும் காட்சிகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது இதுபோன்ற கதைக்களம் சிவகார்த்திகேயன் படத்திலும் இருக்கிறதாம்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில்தான் இதுபோன்ற கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் மன்னன் படத்தில் விஜயசாந்தி நடித்தது போன்று அவர் நடிக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த படம் மன்னன் கதை போல் சீரியசாக இல்லாமல் காமெடியுடன் உருவாகிறதாம்.

Sivakarthikeyan and Nayanthara movie one line story like Mannan movie

மீண்டும் விஜய்சேதுபதியை இயக்கும் எஸ்.பி.ஜனநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இதில்புறம்போக்கு படத்தில் ஆர்யா, ஷாம், விஜய்சேதுபதி ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அந்த படத்திற்கு பின் மூன்று வருடங்களாக ஜனநாதன் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் விஜயசேதுபதியிடம் ஒரு கதை சொல்லி கால்சீட் வாங்கியிருக்கிறாராம்.

இதில் பொதுவுடைமை பேசும் தோழர் வேடத்தில் விஜயசேதுபதி நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi and SP Jananathan teams up again for new project

More Articles
Follows