வங்கி கணக்கில் பணம்.?.; தன் ரசிகர்களின் துயரம் நீக்கும் சூர்யா.

soorarai pottru (2)கொரோனா ஊரடங்கால் மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

எனவே ஏழை எளியோருக்கு சில தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன.

சாமானிய மக்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் தங்களால் முடிந்தளவிற்கு கொரோனா நிவாரணத்திற்கு உதவினர்.

மேலும் ஏழைகளுக்கு ரூபாய் 4,000 நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை தமிழக அரசு கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதாக தகவல் வந்துள்ளது.

சுமார் 250 சூர்யா ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா ரசிகர்கள் தரப்பில் இப்படி சொல்லப்பட்டாலும் அவரது பிஆர்ஓ தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தன் அகரம் பவுண்டேசன் மூலம் திறமையான ஏழை மாணவர்களை படிக்க வைத்து வருகிறார் சூர்யா என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Suriya has donated 5000 RS to 250 members of his Fans Club

Overall Rating : Not available

Latest Post