நெஞ்சை தட்டி நியாயம் கேட்கிற படம்..; விஜய்சேதுபதி & ஐஸ்வர்யா நடிப்பிற்கு சூர்யா பாராட்டு

நெஞ்சை தட்டி நியாயம் கேட்கிற படம்..; விஜய்சேதுபதி & ஐஸ்வர்யா நடிப்பிற்கு சூர்யா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ka Pae Ranasingamநடிகர் விஜய்சேதுபதி & நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கியுள்ளார்.

இதில், ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இத்திரைப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

மனசை ரணமாக்கிய தமிழச்சி.. க/பெ ரணசிங்கம் விமர்சனம் 3.75/5

அந்த வகையில் நடிகர் சூர்யாவும், க/பெ.ரணசிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…

“அடிதட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சை தட்டி நியாயம் கேட்கிற படம் இத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.” என பதிவிட்டுள்ளார்.

Actor Suriya appreciates Ka Pae Ranasingam movie team for its content and performances

தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ நயன்தாரா தரிசனம்..; ஓடிடி க்கு தாவிய ஆர்ஜே பாலாஜி!

தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ நயன்தாரா தரிசனம்..; ஓடிடி க்கு தாவிய ஆர்ஜே பாலாஜி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன்.

இந்தப் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

சமகாலத்தில் அம்மன் உலகிற்கு வந்தால் என்னவாகும்? என வித்தியாசமான கோணத்தில் காமெடியாக படத்தை உருவாகியுள்ளனர்.

இதன் சூட்டிங் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்தது.

ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் மும்பையில் இருந்து ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, 20 நாட்கள் வர்ணனை செய்ய மாட்டேன் என தெரிவித்து இருந்தார்.

அப்போது ‘மூக்குத்தி அம்மன்’ புரமோஷனுக்காகச் சென்னை செல்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி தினத்தில் நவம்பர் 14ல் ஹாட்ஸ்டார் தளத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

mookuthi amman diwali release

Nayanthara’s Mookuthi Amman to directly release on OTT for diwali

‘பூமி’ பட நடிகையை சிம்புக்கு ஜோடியாக்கும் சுசீந்திரன்.?

‘பூமி’ பட நடிகையை சிம்புக்கு ஜோடியாக்கும் சுசீந்திரன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

niddhi agerwalமாடல் டான்சர் என பன்முக திறமை கொண்டவர் நடிகை நித்தி அகர்வால்.

ஹைதராபாத்தில் பிறந்த இவர் பெங்களூருவில் படித்து அங்கேயே வளர்ந்தவர்.

பாலே, கதக், பெல்லி டான்ஸ் ஆகியவற்றையும் முறையாக கற்றுள்ளார்.

டைகர் ஷரூஃப் நடிப்பில் ‘முன்னா மைக்கேல்’ என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தெலுங்கில் சவ்யாச்சி, மிஸ்டர் மஜ்னு, ஐஸ்மார்ட் சங்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் லட்சுமணன் இயக்கும் ஜெயம் ரவி நடிக்கும் ‘பூமி’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் ஓடிடி ஆன்லைனில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கவுள்ள STR 39 படத்தில் சிம்புக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Actress Niddhie Aggarwal to play female lead in STR 39

தளபதியின் ‘மாஸ்டர்’ டீசர் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த புரொடியூசர்

தளபதியின் ‘மாஸ்டர்’ டீசர் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Teaserலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள படம் ‘மாஸ்டர்’.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் மாளவிகா, சாந்தனு, ரம்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Actor Vijays Master teaser to be out soon

கமல் வழங்கும் ‘பிக்பாஸ் சீசன் 4’ தொடங்கியது.; போட்டியாளர்கள் விவரங்கள் இதோ…

கமல் வழங்கும் ‘பிக்பாஸ் சீசன் 4’ தொடங்கியது.; போட்டியாளர்கள் விவரங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss tamil 4விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும்
பிக்பாஸ் சீசன் 4 ஒளிப்பரப்பு தொடங்கியது.

அதன் போட்டியாளர்கள் விவரம் இதோ…

1. முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் ரியோ ராஜ். டிவி தொகுப்பாளராக இருந்து அதன்பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்தவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

2. மாடல் சனம் ஷெட்டி 2016-ம் ஆண்டில் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர்.

‘அம்புலி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார்

3. கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானப்படங்களில் நடித்த நடிகை ரேகா.

4. மாடலிங் துறையைச் சேர்ந்தவர் பாலா என்ற பாலாஜி முருகதாஸ். 2017-ம் ஆண்டு மிஸ்டர் பெர்ஃபெக்ட் பட்டம் பெற்றுள்ளார். இவர் ‘டைசன்’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார்.

5. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இவரின் அழகிய தமிழுக்கி ரசிகர்கள் ஏராளம். பிக்பாஸ் 3ல் லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக உள்ளே சென்றார்.

6. கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

7. நடிகர் ஜித்தன் ரமேஷ். திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமாவார் இவர்.

8. பின்னணி பாடகர் வேல்முருகன். சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

9. நடிகர் ஆரி அர்ஜுனா. ஜல்லிக்கட்டு போராளி.. சமூக ஆர்வலர். என பன்முகம் கொண்டவர்.

10. குத்துச்சண்டை வீரர் சோம் சேகர். மாடலிங். ஆல்பம் சாங்ஸ் நடிகர்.. நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

11. நடிகை கேப்ரில்லா.. ‘3’ படத்தில் ஸ்ருதிக்கு தங்கையாக நடித்தவர். ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

12. நடிகை அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கியவர்.

13. நடிகை ரம்யா பாண்டியன்.. ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மொட்டை மாடியில் போட்டோ ஷூட் எடுத்து இடுப்பழகி என பெயரெடுத்தவர். கலக்கப்போவது யாரு சீசன் 9, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

14. டிவி நடிகை சம்யுக்தா. மாடல், சிவில் என்ஜினியர், ஊட்டச்சத்து நிபுணர் என பன்முகம் கொணரடவர் சம்யுக்தா கார்த்திக்.

15. நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. அழகன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். பாட்டிகள் ஜாக்கிரதை என்ற தொடரில் பாட்டியாக நடித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார்.

16. பாடகர் ஆஜித்… 2012ல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டத்தை வென்றவர் ஆஜித்.

Bigg Boss 4 Tamil full contestants list here

தருண்கோபி இயக்கத்தில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ நாயகன் நடிக்கும் ‘யானை’

தருண்கோபி இயக்கத்தில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ நாயகன் நடிக்கும் ‘யானை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Tarun Gopiவிஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது , ” மாயாண்டி குடும்பத்தார் ” படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தருண்கோபி அடுத்து விரைவில் வெளிவரவிருக்கும் ” வெறி ( திமிரு – 2 ) ” அருவா இயக்கி முடித்த கையோடு சூட்டோடு சூடாக தற்போது ஒரு ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த ” யானை ” என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

நடிப்பில் யானை பலம் பொருந்திய முன்னனி நடிகை ஒருவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் முன்னணி நடிகை, நடிகர்கள், நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன்

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கவுளார்.

எடிட்டிங் – வி.டி.விஜயன்

கலை – மணி கார்த்திக்

ஸ்டண்ட் – கனல்கண்ணன்

நடனம் – தினேஷ், பிருந்தா

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – மன்னன்காடு M.குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா

படம் பற்றி இயக்குனர் தருண்கோபி கூறியதாவது..

ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டிற்கு மகளாக போக வேண்டும், அதேபோல் ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும். என்ற மையக்கருத்தை வைத்து உணர்வுப்பூர்வமாக, ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த கதை, மக்கள் அன்றாட சந்திக்கும் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படத்தை இயக்கவுள்ளேன்.

படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது என்கிறார் இயக்குனர் தருண்கோபி.

Director Tarun Gopi’s next film is titled Yaanai

More Articles
Follows