நம்பிக்கை வைத்தவருக்கு கைகொடுத்த சூர்யா: 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாவுடன் கூட்டணி

நம்பிக்கை வைத்தவருக்கு கைகொடுத்த சூர்யா: 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாவுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று அக்டோபர் 27ல் நடிகர் சிவகுமார் தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். எனவே பல்வேறு பிரபலங்கள் சிவகுமாரை அவரு இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் செய்திருந்தனர்.

இந்த பிறந்தநாள் விழாவில் இயக்குநர் பாலாவும் கலந்துக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளதை ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

“என்னை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க, மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்”.

இவ்வாறு தெரிவித்துள்ளார் சூர்யா.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா’ படம் 2001-ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான ‘பிதாமகன்’ படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா.

நடிகர் சூர்யாவுக்கு இப்படியொரு நடிப்பு திறமையா? என கோலிவுட்டே வியக்குமளவுக்கு நடிக்க வைத்தவர் பாலா தான் என்றால் அது மிகையல்ல. அதன்பின்னர்தான் சூர்யாவிற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இணைகின்றனர்.

ஆர்யா விஷால் நடித்த அவன் இவன் படத்தில் பாலாவுக்காக கெஸ்ட் ரோலில் தோன்றினார் சூர்யா.

தற்போது பாலா இயக்கவுள்ள படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சமீபகாலமாக பாலாவின் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. மேலும் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்த வர்மா படத்தை பாலா இயக்கியிருந்தார். முழுப் படத்தை பார்த்தபின் தனக்கு பிடிக்கவில்லை என தயாரிப்பாளர் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தினார்.

அதன்பின்னர் பாலா படங்கள் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் பாலாவுடன் சூர்யா இணைவது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Suriya and director Bala team up again after 2 decades

EXCLUSIVE WARNING : பாஃலோயர்ஸ் இருக்காங்களா? சான்ஸ் தர்றேன்.; தரம் கெடும் தமிழ் சினிமா

EXCLUSIVE WARNING : பாஃலோயர்ஸ் இருக்காங்களா? சான்ஸ் தர்றேன்.; தரம் கெடும் தமிழ் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைவாணர் என்எஸ்கே கால சினிமாவில் ஒருவருக்கு பல திறமைகள் இருந்தால் மட்டுமே சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. அதாவது நடிக்க தெரியனும்.. பாட தெரியனும்.. வீர பயிற்சிகள் தெரிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகள் தேவைப்பட்டன.

மேலும் சிகப்பாக இருக்க வேண்டும். நல்ல அழகாக இருக்க வேண்டும் எனவும் எழுதப்படாத விதிமுறைகள் இருந்தன.

பின்னர் எம்ஜிஆர் சிவாஜி கால சினிமாக்களிலும் இது தொடர்ந்து கொண்டே இருந்தன.

பின்னர் நாளடையில் அதாவது 1960களில் பாடகர்கள் அறிமுகமாகினர். நடிகர்கள் பாட்டுக்கு வாய் அசைத்தால் போதும் என்ற நிலை உருவானது. இதனால் நடிகர்களுக்கு லேசான பணிச்சுமை குறைந்தன.

அதன்பின்னர் 1970 மற்றும் 1980களில் பிற மொழி நடிகர் நடிகைகள் மற்ற மொழி படங்களில் நடித்தாலும் அவர்களுக்கு மொழி தெரியாவிட்டாலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டிகள் அதிகளவில் வரத் தொடங்கினர்.

மேலும் ஸ்டண்ட் கலைஞர்கள் டூப் போட தொடங்கினர். இதனால் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் கூடுதலாக பணிச்சுமை குறைந்தன.

ரஜினிகாந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வரை சிகப்பு தோல் நடிகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தன. அதனை ரஜினி முறியடித்தார். கருப்பு நிற மனிதர்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்தார்.

இதனால் விஜயகாந்த் சரவணன் பார்த்திபன் உள்ளிட்ட பல திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ராதிகா, மாதவி உள்ளிட்ட மாநிற நடிகைகளுக்கும் வாய்ப்புகள் வந்தன.

இப்படியாக சினிமாவிற்கான தகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.

1990களில் சினிமாவின் வாரிசுகள் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்தன. ஒரு பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளமே போதுமானதாக கருதப்பட்டது.

2000 கால கட்டங்களில் பணம் இருந்தால் படம் எடுக்கலாம். அந்த நபரே நாயகனாக நாயகியாக நடிக்கலாம் எனவும் தமிழ் சினிமா மாறியது.

இதனிடையில் திறமைக்கான மதிப்புகள் குறைந்து நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட்களும் அதிகரிக்க ஆரம்பித்தன.

2010 கால கட்டங்களில் மொழி தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் அவர் மக்களிடையே பிரபலமாக இருந்தால் போதும் சினிமாவில் வாய்ப்புகள் வரத்தொடங்கியது.

மேலும் சின்னத்திரை நடிகர்களுக்கும் சினிமாவில் வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன.

தற்போது 2020 ஆண்டை கடந்துவிட்டோம். சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கம் உச்சத்தில் உள்ளன.

யூடிப் பிரபலம்… டிக்டாக் பிரபலம்.. ட்விட்டர் பிரபலம்.. பேஸ்புக் பிரபலம்… இன்ஸ்ட்ரா பிரபலம் உள்ளிட்டோருக்கு சினிமாவில் வாய்ப்புகள் பெருக தொடங்கியுள்ளது..

அண்மையில் ஒரு திறமையான இளம் நடிகை இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அதற்கு உனக்கு இன்ஸ்ட்டாகிராமில் எவ்வளவு பாஃலோயர்ஸ் இருக்காங்க? என கேட்டுள்ளார். அதற்கு அவரோ 20,000க்கும் குறைவாகவே உள்ளது என சொல்லியுள்ளார்.

அது போதுமானதாக இல்லை. இன்ஸ்ட்டாவில் 50000 பாலேஃயர்ஸ் இருந்தால் சினிமா சான்ஸ் ரெடியாக இருக்கு என்றாராம்.

அட்ட்ட்டா… இதுவல்லவோ தமிழ் சினிமாவிற்கான தகுதி… தயாரிப்பாளர்களே… இயக்குனர்களே… தமிழ் சினிமாவை வாழ விடுங்க.. தகுதியற்ற சினிமாவாக கோலிவுட்டை மாற்றிவிடாதீர்கள்.

சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமாகி சில திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது தவறில்லை. ஆனால் இங்கே பாஃலோயர்ஸ் மட்டுமே ஒரு சினிமாவிற்கான தகுதியாக மாறிவிடுமா என்ன? அதுவும் பாஃலோயர்ஸ் ஏற்ற பணம் கொடுத்து பெறுபவர்களும் இங்கே அதிகளவில் உள்ளனர்.
எனவே சிந்திப்பீர்.. சிறப்பான தமிழ் சினிமா வளர வழி கொடுப்பீர்.

கூடுதல் தகவல்…

பிரபலமான நடிகைகளின் இன்ஸ்டாகிராமில் பாஃலோயர்கள் பற்றிய தகவல்…

இந்திய அளவில் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா 69.6 மில்லியன் பாஃலோயர்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ராஷ்மிகா மந்தனா. – 23 மில்லியன் பாஃலோயர்ஸ்

காஜல் அகர்வால். – 20 மில்லியன் பாஃலோயர்ஸ்

சமந்தா – 19.2 மில்லியன் பாஃலோயர்ஸ்

ஸ்ருதிஹாசன் மற்றும் டாப்ஸீ – 18 மில்லியன் பாஃலோயர்ஸ்

filmi street exclusive warning for Tamil Cinema

வா சாமீ… பிரசிடெண்ட் பின்றாருய்யா.. அனல் பறக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர்

வா சாமீ… பிரசிடெண்ட் பின்றாருய்யா.. அனல் பறக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சிவா இயக்க இமான் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, சதீஷ், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அண்ணாத்த அண்ணாத்த பாடல் முதலில் வெளியானது. இப்பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

அதன்பின்னர் சாரல் காத்து.. மருதாணி… வா சாமீ ஆகிய பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியானது.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி ‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணாத்த ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இது பக்கா ரஜினி படம் என்று சொல்லலாம். ரஜினிக்கே உரித்தான காமெடி கலகலப்பு, செம ஸ்டைல், அனல் பறக்கும் ஆக்சன் என பட்டைய கிளப்பியிருக்கிறார்.

ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சிஸ்டர் சென்டிமெண்ட் காட்சிகளும் செமயாய் ஒர்க் அவுட்ஆகியுள்ளது, தங்கச்சிக்கு ஒன்னுன்னா துடிக்கும் பாசமிகு அண்ணனாக அண்ணாத்த வருகிறார்.

சூரக்கோட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக (பிரசிடெண்ட்) ரஜினி நடித்துள்ளார். இவரது கேரக்டர் பெயர் காளையன்.

ரஜினியின் முறைப் பெண்களாக குஷ்பூ மீனா நடித்துள்ளனர். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினியுடன் கூடவே சுத்தும் கேரக்டர்களில் சூரி சதீஷ் உள்ளனர்.

சூரக்கோட்டை வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்க கொல்கத்தா வில்லனாக அபிமன்யூ சிங் & ஜெகபதிபாபு நடித்துள்ளனர்.

ட்ரைலர் முழுக்க நகைச்சுவையும் ஆக்சனும் தெரிகிறது. எனவே இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியின் கிராமத்து வாசனையை உணரலாம்.

1995ல் பாட்ஷா படத்தை பாத்துவிட்டு எப்படி ஆட்டோ டிரைவர்கள் செம கெத்தாக சுற்றினார்களோ.. அதே போல் தற்போது ‘அண்ணாத்த’ படத்த பாத்துட்டு காலர தூக்கி கெத்து கவுன்சிலர்கள் சுற்றுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Superstar Rajinis Annaatthe Trailer makes storm on internet

#AnnaattheDeepavali

சூர்யா நடிச்ச ‘ஜெய் பீம்’ படம் பார்க்க இந்த காரணங்கள் போதுமா? இன்னும் வேணுமா?

சூர்யா நடிச்ச ‘ஜெய் பீம்’ படம் பார்க்க இந்த காரணங்கள் போதுமா? இன்னும் வேணுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொண்டு வருகிறது.

அண்மையில் வெளியான ஜெய்பீம் படத்தின் டீஸரே இது ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது.

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க உண்மையைக் வெளிக்கொணர வழக்கறிஞர் சந்துரு அயராது பாரம் சுமக்கிறார்.
இத்தகைய சக்தி வாய்ந்த கதையம்சமே போதும், ஜெய் பீம் படத்தைத் தவறவிடக் கூடாது என்பதை உணர்த்த…. ஆனால் இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்தப் படத்தை தவறவிடக் கூடாது என்பதற்கு இன்னும் 5 காரணங்கள் இருக்கின்றன.

புதிய அவதாரத்தில் சூர்யா:

ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட சூர்யா அதன் பின்னர் தன்னை ஒரு பாக்ஸராக, தொழில்முனைவராக என பல கதாபாத்திரங்களில் நிரூபித்தார். அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார்.
ஒவ்வொரு முறை திரையில் வரும்போதும் அவர் நம்மை ஆச்சர்யபட வைக்கிறார். ஜெய் பீம் ட்ரெயலரில் நாம் சூர்யாவை, ஒரு பன்முகத்தன்மை கொண்ட நடிகரை அழுத்தமான வழக்கறிஞராகப் பார்க்கவுள்ளோம். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக எந்த அளவுக்கும் அவர் செல்வார் என்பதை அறிய முடியும்.

ஆழமான நடிப்பு, அனல் பறக்கும் வசனம் என அசத்தியிருக்கிறார். நிச்சயம் இந்த புதிய கதாபாத்திரத்திலும் அவர் ரசிகர்களின் நெஞ்சை அள்ளுவார்.

சிறப்பான நடிகர் பட்டாளம்:

படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா உலா வரும் அதே வேளையில், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் எனப் பலரும் நடித்திருப்பார்கள்.
ஒரு நல்ல கதை பாதி வெற்றியைத் தரும். ஆனால் அதை கொண்டு சேர்க்க நல்ல நடிகர்கள் வேண்டும். அப்போது தான் உயிர் கிடைக்கும். ட்ரெய்லரைப் பார்க்கும் போதே நடிகர்கள் தங்கள் உழைப்பை முழுவீச்சில் பாய்ச்சியிருப்பதைக் காண முடியும்.

கேமராவுக்குப் பின்னால்.

படத்தின் முதல் காட்சி தொட்டு கடைசிக் காட்சி வரை கேமராவின் மாய வித்தை நம்மைக் கட்டிப்போடும். இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் தா.செ.ஞானவேல். இவர் பத்திரிகையாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர். அவர் சூர்யாவின் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கிடுதல் செய்துள்ளார். அவருடன் கேமராவைக் கையாண்டிருக்கும் எஸ்.ஆர்.கதிர் ஒரு தேர்ந்த கலைஞர்.

இசையமைப்பாளர் ஷான் ரால்டன், எடிட்டர் ஃபிலோமின் ராஜா என அனைவருமே உண்மையின் மாண்பை சொல்லும் இந்தப் படத்திற்கு மெருகேற்றியுள்ளனர்.

உணர்வுகளைத் தூண்டும் இசை:

ஜெய் பீம் படத்தின் முதல் பாடலான பவர் பாடலை அறிவு பாடியிருக்கிறார். பாடலுக்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். அதிரடி பாடலான இது அனைவரையும் தாளம் போட்டு ஆட வைக்கும்.
தல கோதும் என்ற இரண்டாவது பாடல், பிரதீப் குமாரால் பாடப்பட்டுள்ளது. ராஜூமுருகன் எழுதியுள்ளார். மென்மையான மெலடிப் பாடலாக இது இதயத்தை வருடும். நீதிக்கான பயணத்தை நம் கண் முன்னே நிறுத்தும். இந்த இரண்டு பாடல்களும் மிகவும் அழுத்தமானவையே.

பரபரப்பான நீதிமன்ற காட்சிகள்:

நீதிமன்றக் காட்சிகளைக் காண்பதில் எப்போதுமே திரை ரசிகர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். அதுவும் அழுத்தமான நீதிமன்றக் காட்சிகள் என்றால் கேட்கவா வேண்டும். ஜெய் பீமில் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையேயான வாதவிவாதங்கள் நீதிமன்ற அறைக் காட்சிகளாக ஆழமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ட்ரெய்லரில் நாம் பார்த்தபோது ஏற்பட்ட தாக்கம் படம் முழுவதுமே நமக்கும் ஏற்படும். ரசிகர்களை நிச்சயமாக சீட்டின் நுணியில் அமரவைத்து பார்க்க வைக்கும்.

திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளனர். ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

5 reasons we cant wait for Suriyas Jai Bhim coming up this Diwali

தல கணம் இல்லாத தளபதி.: வெற்றி வேட்பாளர்களை வாழ்த்தி அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

தல கணம் இல்லாத தளபதி.: வெற்றி வேட்பாளர்களை வாழ்த்தி அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலங்கள் பலருக்கும் அரசியலுக்கு வரும் ஆசை வருவதுண்டு. ஒரு சிலருக்கு அது நிறைவேறாமல் போகலாம்.

இதில் முதலில் சொன்ன வரிகளில் வருபவர் நடிகர் விஜய்.

விஜய்யை அவரது ரசிகர்கள் அடிக்கடி அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள் ஒட்டி வருவதுண்டு. அதை விஜய்யும் கவனித்துதான் வருகிறார்.

இன்றைய கால கட்டத்தில் அரசியலில் நுழைந்தால் அது எந்தளவு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் விஜய் ஆலோசித்துதான் வருகிறார்.

இந்த நிலையில் அவரது எண்ணத்திற்கேற்ப நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் அமைந்துள்ளன எனலாம்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட நிர்வாகிகள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளதால் விஜய் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

எனவே பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி இருக்கிறார் விஜய்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட விஜய் அதில் எவருமே கண்டுபிடிக்காத படி ஒரு ஓரத்தில் அமர்ந்துள்ளார்.

இந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பொதுவாக இது போன்ற போட்டோக்களை எடுக்கும்போது ஒரு இயக்கத்தின் தலைவர் எல்லோருக்கும் நடுவில்தான் இருப்பார். ஆனால் விஜய் எங்கே இருக்கிறர்? என தேட வேண்டி உள்ளது. அவர் ஒரு ஓரமாக அமர்ந்து இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் ‘தல கணம் இல்லாத தளபதி’ என புகழ்ந்து வருகின்றனர்.

Actor Vijay took photo with TN Local body election winners

கபாலி காலர் ட்யூன்.. ரஞ்சித்தாசன் பெயர்..; என்ன சொல்கிறார் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பட இயக்குனர்.?

கபாலி காலர் ட்யூன்.. ரஞ்சித்தாசன் பெயர்..; என்ன சொல்கிறார் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பட இயக்குனர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் இதே கதைகருவில் தான் உருவாகியுள்ளது.

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததும், இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சிறப்பு திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

இந்த நிகழ்வில் பேசிய நாயகன் கார்த்திக் கூறியதாவது…

என்னுடைய முதல் படம் பீச்சாங்கை இந்தப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் நீங்கள் பெரிய ஆதரவு தந்துள்ளீர்கள் அதற்காக அனைவருக்கும் நன்றி
இயக்குநர் பிரபு ஜெயராம் கூறியதாவது….

கமர்ஷியலாக கதை சொல்ல நினைக்கும் இயக்குநரான ஒருவன், சீரியஸாக ஒரு கதை சொல்ல முயற்சிப்பதாக தான் இந்த திரைக்கதையை அமைத்தேன்.

இது 90 கிட்ஸ்களுக்கான படமாகத்தான் எடுத்திருக்கிறோம். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை, இடஒதுக்கீட்டில் தேவை உள்ளோர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இதை சொல்லியிருக்கிறோம்.

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நான் வரவேற்கிறேன் அதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் கதாப்பாத்திரங்களின் பின்னணியை தான் சொல்லியிருக்கிறேன்.

(இந்த படத்தில் ரஞ்சித்தாசன் கேரக்டர் ஏன்..? கோட் சூட் போடுவேன்டா.. நான் முன்னுக்கு வருவேன்டா..? என்ற ரஜினி டயலாக் கபாலி காலர் ட்யூன் ஏன்? என FILMISTREET RAJESH கேள்வி கேட்கையில்…)

ரஞ்சித் தாசன் கதாப்பாத்திரம் என்பது, ஒரு அடிப்படை சமூகத்தில் இருந்து வந்து, கோபத்துடன் அவரது நியாயத்தை சொல்லும் பாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, ரஞ்சித் சார் பெயர் வைக்கலாம் என தோன்றியது.

அதைத்தவிர, மத்தபடி ரஞ்சித் சாருக்கும் இந்தப்படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்தப் படத்திற்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ள “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

Director Prabhu Jeyaram talks about his movie Yennanga Sir Unga Sattam

படத்தின் தொழில்நுட்ப குழு விபரம்
குணா பாலசுப்ரமணியம்- இசை
அருண் கிருஷ்ணா – ஒளிப்பதிவு
பிரகாஷ் கருணாநிதி- படதொகுப்பு
Teejay – கலை இயக்கம்
கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு – பாடல் வரிகள்
தேஜா- மேக்கப்
கிருஷ்ணன் சுப்ரமணியம்- ஒலிப்பதிவு
பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன்- பாடகர்கள்
அருண் உமா- டப்பிங் இன்ஞ்னியர்
ராம் பிரசாத் – ஸ்டில்ஸ்
ஶ்ரீராம் -DI

More Articles
Follows