தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதிய முகம் திரைப்படம் மூலம் நடிகராக தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சுரேஷ் மேனன்.
சினிமாவில் பல துறைகளில் பணியாற்றிய இவர் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் ஆவார்.
இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நம் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினார்.
அவர் பேசியதாவது…
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். சினிமாவில் எல்லா வேலைகளையும் செய்துவிட்டேன்.
சினிமா ஒருபக்கம் இருந்தாலும், சமூகம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்ய பல ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். அதில் ஒரு சிலவற்றை அரசு செய்துள்ளது.
சென்னை ராஜ்பவன் கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை தந்தேன். தற்போது அங்கு போக்குவரத்து மாற்றப்பட்டது.
இதுபோல நிறைய இலவச ஆலோசனைகள் அளித்து வருகிறேன். இதனால் என்னை அவ்வப்போது தலைமை செயலகத்தில் பார்க்கலாம்.
சில நேரங்களில் இது உனக்கு தேவையில்லாத வேலை என்பார்கள். எனக்கு பொருளாதார ரீதியாக எந்த பயனும் இல்லை. ஆனால் ஒரு மன திருப்திக்காக இதனை செய்து வருகிறேன்.
ஒரு முறை டெல்லி சென்றேன். சில நல திட்டங்களுக்கு ஆலோசனை சொல்ல பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை.
அதுபோல் ரஜினி, கமலை சந்திக்கவும் நேரம் கேட்டேன். ஆனால் அவர்களுக்கு என்னை சந்திக்க விருப்பமில்லை.
நான் ஒரு மலையாளி என்பதால் தமிழ்நாட்டில் என்னால் அரசியலில் சாதிக்க முடியாது.
அதேபோல் நான் இங்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் அங்கும் (கேரளா) என்னால் ஒண்ணும் சாதிக்க முடியாது.
எனவே, தற்போது மை கர்மா (my karma) என்ற மொபைல் ஆப் மூலம் வினாவிடை போட்டி ஒன்றை ஆரம்பித்துள்ளேன். எனது நண்பர்கள் ஆதரவுடன் ரூ. 20 லட்சம் செலவில் இதை ஆரம்பித்துள்ளேன்.
இந்தியாவை பற்றி தான் 90% கேள்விகள் கேட்கப்படும். குடும்பத்துடன் அமர்ந்து இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
தினமும் மாலை 7 மணி, 8 மணி, 9 மணி என 3 முறை இப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயழியை பதிவிறக்கம் செய்து விளையாடலாம். ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகை உண்டு”, என சுரேஷ் மேனன் கூறினார்.
Actor Suresh Menon launched My Karma mobile app You can win Cash prizes