வாழ்க்கையில் முதன் முறையாக காவ்யா அறிவுமணியுடன் காதல்.. – நடிகர் ஶ்ரீனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் கார்த்திக் இயக்கத்தில் மகேந்திரன், ஸ்ரீனி, ஆர்த்தி பொடி, காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரிப்பப்பரி’.

ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ஶ்ரீனி பேசியதாவது…

இந்தப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் AKவுக்கு நன்றி. படத்தில் பேயாக வருவது நான் தான். நிறையப் படங்கள் அடுத்தடுத்து வருகிறது. இந்தப்படத்தில் பேயாக நடித்தது சவாலாக இருந்தது. நல்ல படம் செய்திருக்கிறோம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

எனக்கு ஜோடியாக காவ்யா நடித்திருக்கிறார். என் சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக இந்தப்படத்தில் கொஞ்சமாகக் காதலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர், அவருக்கு நன்றி. படம் நல்ல எண்டர்டெயினராக இருக்கும்.” என்றார்.

Actor Srini about his love portion in movie

JUST IN மீண்டும் வெற்றிக் கூட்டணி.; மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள்.

இத்திரைப்படத்தை ZEE Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்து, வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ZEE Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது.

மேலும் தனுஷின் Wunderbar Films சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில், இறங்குவது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

இது உண்டர்பார் நிறுவனத்தின் 15 வது படைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush and Mari Selvaraj joins for a new project

மகேந்திரனுக்கான காலம் வரும்.; தைரியம் தந்த கதைதான் ‘ரிப்பப்பரி’ – அருண் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.

ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

இயக்குநர் Na. அருண் கார்த்திக் பேசியதாவது…

முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்ற போது பயம் அதிகமாக இருந்தது.

ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும்.. அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முயற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்தக்கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள். அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது.

திவாரகா தியாகராஜன் இசை, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு, முகேன் வேல் எடிட்டிங் இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

மாஸ்டர் மகேந்திரன் இந்தப்படம் மூலம் எனக்கு சகோதரராக கிடைத்துள்ளார்.

எனது வேலையைப் பாதி அவரே செய்து விடுவார், அவருக்குள் சினிமா ஊறியிருக்கிறது. அவருக்கான காலம் விரைவில் வரும். அவரைத்தாண்டி ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி என எல்லோருமே சிறப்பாகச் செய்துள்ளார்கள்.

இது உங்களை மகிழ்விக்கும் ஒரு அழகான காமெடி படம். ஏப்ரல் 14 திரைக்கு வருகிறது. ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் பேசியதாவது…

ரிப்பப்பரி படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் கதை உருவாகும்போதே, ஜாதி பற்றி வரும் இடங்களில், யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன். படம் மிக நன்றாக வந்துள்ளது.

என்னுடைய கேமரா டீம் பாய்ஸ்க்கு நன்றி. அவர்கள் உழைப்பால் தான் என்னால் ஈஸியாக வேலை செய்ய முடிந்தது. மாஸ்டர் மகேந்திரன் கூட வேலை பார்த்த அனுபவம் அட்டகாசமாக இருந்தது. மிக மிக நல்ல மனிதர். படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் திவாரகா தியாகராஜன் பேசியதாவது…

இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போதே இது அட்டகாசமாக இருக்குமென்று தெரிந்தது. நாங்கள் குறும்படம் எடுக்கும் காலத்திலிருந்தே நண்பர்கள். இந்தப்படத்தில் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருந்தது. என்னிடம் நிறைய வேலை வாங்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் மிக நன்றாக நடித்துள்ளார். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

‘Ripupbury’ is a story of courage – Arun Karthik

JUST IN இன்று ஏப்ரல் 9.. மாலை 7.30 மணி.; மீண்டும் தொடங்கும் தனுஷ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ்.

இளம் வயதிலேயே இரண்டு முறை தேசிய விருதையும் வென்று இருக்கிறார். மேலும் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

நடிகராக பிரபலமான பின்னர் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார்.

மேலும் விஐபி, பவர் பாண்டி, காக்கிச்சட்டை, காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு, வடசென்னை, மாரி, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

தனது முன்னாள் மாமனார் ரஜினிகாந்த்தை வைத்து ‘காலா’ என்ற பிரம்மாண்ட படத்தையும் தயாரித்திருந்தார் தனுஷ்.

தனது வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக பல படங்களை தயாரித்த வந்த தனுஷ் சமீப காலமாக படங்கள் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 9 தேதி மாலை 7.30 மணிக்கு வுண்டர் பார் நிறுவனம் சார்பாக புதிய தகவல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Something’s brewing at wunder bar films

ராம்சரண் – ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் புதிய படம்.; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC 15 என்று அழைக்கப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் ராம்சரண்.

இந்த படத்திற்கு சமீபத்தில் கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்த நிலையில் ராம் சரணின் 16 வது படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

RC 16 என்று அழைக்கப்படும் இந்த படத்தை புஜ்ஜி பாபு சனா என்பவர் இயக்குகிறார்.

இவர் வைஷ்ண தேஜ், கீர்த்தி ஷெட்டி, விஜய் சேதுபதி நடித்த ‘உப்பெண்ணா’ என்ற படத்தை இயக்கியவர். இந்த படம் 2021 இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது ராம்சரண் மற்றும் புஜ்ஜிபாபு இணையும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு 2023 செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது.

Ram Charan – AR Rahman joins for a new film

குரு ஷங்கர் வழியில் சிஷ்யர் நீலேஷ்.; நயன்தாரா 75 சூட்டிங் & ஆர்ட்டிஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்.

மேலும் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்து விட்டனர்.

மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பானது திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

(இயக்குனது ஷங்கர் படங்கள் என்றாலே பிரம்மாண்டம் தான்.. அவரின் உதவியாளர் இயக்கும் படம் என்றால் அதுவும் பிரமாண்ட படமாக தானே இருக்கும்..)

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன் ISC,
இசை: தமன் எஸ்,
கலை: ஜி. துரைராஜ், படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி,
வசனம்: அருள் சக்தி முருகன்,
கிரியேட்டிவ் புரொடியூசர்: சஞ்ஜய் ராகவன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: லிண்டா அலெக்சாண்டர், பப்ளிசிட்டி டிசைன்: வெங்கி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

Nayanthara 75 shooting and artist update

More Articles
Follows