தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.
நடிகர் வடிவேலு மாதிரியே இருப்பதாலும் அவரது கெட்டப் போட்டு காமெடி செய்வதாலும் ‘வடிவேல்’ பாலாஜி என அழைக்கப்பட்டார் இவர்.
‘அது இது எது’ நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தொகுத்து வழங்கினார்.
அதில் வரும் ‘சிரிச்சா போச்சு’ ரவுண்டில் வடிவேல் பாலாஜி நிச்சயம் இடம் பெறுவார்.
அப்போது முதலே இருவரும் நல்ல நட்பு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் கல்விச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக வடிவேலு பாலாஜியின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று மதியம் 2.30 மணியளவில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளது.
Actor sivakarthikeyan help for vadivel balaji family
