தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு.
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.
இவரது தந்தை டி.ராஜேந்தர் இப்படத்தை இயக்கியிருந்தார்.
வெறும் நடிப்பு மட்டுமில்லாமல், பாடல் எழுதுவது, பாடுவது, படங்களை இயக்குவது என தன் திறமையை வளர்த்துக் கொண்டார்.
மற்ற ஹீரோக்களின் படங்களிலும் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்துள்ளார்.
தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை சிம்பு பாடிய பாடல்கள் 100ஐ கடந்துள்ளதால், அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Actor Simbu aka STR crooned 100 songs in Cinema