தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் உள்ள நட்சத்திரங்களே விஜய்க்கு ரசிகர்களாக இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அதில் முக்கியமான சிலர் அடிக்கடி தங்களை விஜய் ரசிகர்களாகவே காட்டிக் கொண்டு பெருமிதம் கொள்வர்.
அவர்களில் ஜிவி. பிரகாஷ், சிபிராஜ், சாந்தனு முக்கியமானவர்கள்.
இந்நிலையில் விஜய்யின் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இதனை பார்த்த நடிகர் சாந்தனு… அந்த போஸ்டரை தன் ட்விட்டரில் பகிர்ந்து என் பொண்டாட்டியை கூட நான் இவ்வளவு ரசிக்கல. அப்படி உங்களை ரசிக்கிறேன் விஜய் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.
சாந்தனுவின் திருமணத்தை விஜய்தான் தலைமை ஏற்று நடத்தி வைத்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Actor Shanthanu praises Vijay and his look in Sarkar first look Poster