பாதிக்கப்பட்ட பெண்களின் தகப்பனாக பேசுகிறேன்… சத்யராஜ் உருக்கம்

பாதிக்கப்பட்ட பெண்களின் தகப்பனாக பேசுகிறேன்… சத்யராஜ் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sathyarajகடந்த ஒரு வாரமாக கோலிவுட்டின் ஹாட் டாப்பிக் சுசித்ராவின் ட்விட்டர் பக்க செய்திகள்தான்.

இதனால் திரையுலகமே கலக்கமடைந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ஒரு ஆடியோவில் இதுபற்றி கூறியுள்ளதாவது…

‘நல்ல நண்பர்களை, காதலரை தேர்ந்தெடுங்கள். விளையாட்டாக எடுக்கும் போட்டோ, எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு வினையாக மாறலாம்.

நம்முடன் வசிப்பவள்தான் பெண். அவள் வேற்றுகிரகவாசி அல்ல.

இதுபோல் படங்கள் வெளியாவதால் பலர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் இது போன்ற செயலை செய்ய வேண்டாம்.

பாதிக்கப்பட்ட பல பெண்களின் தகப்பனாக உங்களிடம் இதை கேட்டுக்கொள்கிறேன்’ என்று சத்யராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.

அட்லி இயக்கும் விஜய்-61 பர்ஸ்ட் லுக் தேதி

அட்லி இயக்கும் விஜய்-61 பர்ஸ்ட் லுக் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayவிஜய்-ஏ.ஆர்.ரஹ்மான்-அட்லி-தேனாண்டாள் பிலிம்ஸ் உள்ளிட்டவர்கள் கொண்ட மாபெரும் கூட்டணி விஜய் 61 படத்திற்காக இணைந்துள்ளது.

இத்துடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் வருடம் இதே நாளில்தான் தெறி படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் 23 வசூல் மழையால் அருண் விஜய் ஆனந்தம்

குற்றம் 23 வசூல் மழையால் அருண் விஜய் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Arun Vijayஅறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள படம் ‘குற்றம் 23’.

இப்படம் கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியானது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே மாபெரும் எதிர்பார்ப்பு உருவானது.

அதற்கு சற்றும் குறைவில்லாமல் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களில் சுமார் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது.

நான்கு நாட்களில் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இதனால் குற்றம் 23 படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாம்.

எனவே, விரைவில் வெற்றிவிழா சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தங்கள் படைப்பு அபூர்வம்…’ தனுஷை பாராட்டிய இசையமைப்பாளர்

‘தங்கள் படைப்பு அபூர்வம்…’ தனுஷை பாராட்டிய இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushநடிகராக அடையாளம் காணப்பட்ட தனுஷ், முதன்முறையாக பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார்.

சீன் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற மார்ச் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தை இசையமைப்பாளர் சீன் ரோல்டான் பார்த்துள்ளார்.

இதனையடுத்து, தனது சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு அபூர்வமான படத்தை கொடுத்த தனுஷூக்கு நன்றி. இதில் என் பங்கும் இடம் பெற செய்தமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Sean Roldan‏ @RSeanRoldan
Watched #powerpandi today. What a film by Mr #dhanush. Thanks for creating this beauty and making me a part of it!

Music composer Sean Roldan appreciates Dhanush direction

‘அரசியலில் இருக்கிறேன்; கட்சி கொடி உண்டு…’ கமல் அதிரடி

‘அரசியலில் இருக்கிறேன்; கட்சி கொடி உண்டு…’ கமல் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan actionஎந்தவொரு செயலையும் சமூகம் சார்ந்த தொலை நோக்கு பார்வையுடன் பார்ப்பவர் கமல்ஹாசன்.

இவர் அண்மைகாலமாக நாட்டு நடப்புகள் குறித்து தன் கருத்துக்களை தொடர்ந்து கூறிவருகிறார்.

இதனிடையில் ஜல்லிக்கட்டு போரட்டாங்கள் தொடர்பாக கமலின் நற்பணி மன்றத்தை சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தன் நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகள் மற்றும் அதனை சார்ந்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தார் என்பதை பார்த்தோம்.

இதுபற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்காத பட்சத்தில் கிடைத்த தகவல்கள் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

சட்ட வல்லுனர்களுடன் கமல் ஆலோசனை கூட்டத்தின் சில துளிகள்..

கடந்த 35 வருஷமாக நற்பணி தான் பண்றோம். அதை இன்னும் பெரியதாக தொடர்வது எப்படி என்ற ஆலோசிக்கவே இந்த கூட்டம்.

நாம் செய்யும் நற்பணிகளுக்கு எந்த வித இடையுறும் வரக்கூடாது. அப்படி வந்தால், சட்டம் படித்த இந்த ஆலோசகர்களின் உதவி தேவை. இவர்கள் நமக்கு உதவுவார்கள்.

முதலமைச்சாராக இருந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை.

நான் எட்டாம் வகுப்பு. ஆனாலும் எனக்கும் #சட்டம் தெரியும். ஆனால், சட்டம் படித்த நீங்கள் அதை சொல்லும் போது தான் அதற்கு உரிய மரியாதை கிடைக்கும்.

நாங்கள் காவல் துறையினரிடம் பேசுவதற்கும், சட்டம் படித்த வல்லுனர்கள் பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது.

அரசியலுக்கு வருவது என்பது என்னால் இயலாத காரியம். வரவும் முடியாது. அது என்னுடைய வேலையும் அல்ல.

கச்சேரியில் பாட்டு சரியில்லை என்று கூறை கூறுவதால் நீ மேடைக்கு வந்து பாடுன்னு சொல்லலாமா?

சமையலில் ஏற்படும் குறைகளை சுட்டிக் காட்டத் தான் முடியும். அதற்காக வந்து சமைத்துப் பார் என்று கூறினால் எப்படி?

நான் இப்போது மட்டும் அறிக்கைகள் விடவில்லை. 30 வருடங்களுக்கு முன்பு இருந்தே நான் கருத்து கூறிவருகிறேன்.

அன்றே இலங்கை பிரச்சனைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தேன். ஆனால் இப்போதுதான் நான் கூறுவது அவர்களுக்கு கேட்கத் தொடங்கியுள்ளது.

நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது. நான் அரசியலில் தான் உள்ளேன்.

ஆனால் நான் செய்யும் அரசியல் ஓட்டு வாங்கும் அரசியல் அல்ல. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல்.

நான், நீங்க யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறமாட்டேன். ஆனால், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று கூறுவேன்.

என்னுடைய கட்சி கொடி டெல்லியில் மூவர்ணமாக பறந்து கொண்டு இருக்கிறது. அதற்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நான் காப்பேன்.

பச்சை தனியாக, வெள்ளை தனியாக, காவி தனியாக கிழிபடுவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பேன்.

இனி அந்த மாவட்ட பிரச்சனைகளை கையில் எடுப்பேன் அதற்க்கு பக்கபலமாக மாவட்ட சட்ட ஆலோசர்கள் முன் வரவேண்டும்.

என்னால் முடியாத எதையும் உங்களை நான் செய்யச்சொல்ல மாட்டேன். இனி, இன்னொரு #சுதாகர் சிறைச் செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.

தவறு செய்திருந்தால் நான் நிச்சயம் தைரியமாக மன்னிப்பு கேட்பேன். ஆனால்,செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பதை அனுமதிக்க மாட்டேன்.

நாம் செய்யும் நற்பணி கண்டு நம் மாநிலம் மட்டுமில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிங்களும் அழைத்து பாராட்ட போகிறது.

நற்பணி இயக்கத்தின் மூலம் ரூ. 20 கோடி வரை கடந்த 20 ஆண்டுகளில் நற்பணி செய்துள்ளனர்.

எந்த அரசியல்வாதி தவறு செய்தாலும் நாகரீகமான முறையில் கண்டனத்தை பதிவு செய்யுங்கள். மரியாதையாக பேசுங்கள்.

எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடரவேண்டும். நான் மனிதனை மனிதனாகப் பார்ப்பவன்.

நல்லது செய்ய நல்ல உள்ளம் போதும். அது உங்களிடம் உள்ளது. அதற்கு துணையாக நான் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

Kamal meeting with Lawyer fans news updates

kamal meeting

மீண்டும் கார்த்தி-விஜய்சேதுபதி இணைவார்களா.?

மீண்டும் கார்த்தி-விஜய்சேதுபதி இணைவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi Vijay sethupathiதமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் கார்த்தி மற்றும் விஜய்சேதுபதிக்கு முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இருவருமே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

விரைவில் கார்த்தி நடிப்பில் காற்று வெளியிடை படம் வெளியாகவுள்ளது.

அதுபோல் விஜய்சேதுபதி நடிப்பில் புரியாத புதிர், கவண், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

விஜய்சேதுபதி சினிமாவில் வளர்ந்து வரும் காலத்தில்  கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்தார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Will Karthi and Vijay Sethupathi Join again for new Project

karthi vijay sethupathi

More Articles
Follows