கொரோனாவுக்காக சாலையில் இறங்கிய சசிகுமார்; சபாஷ் சார் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சட்டத்தை மதிக்காமல் பலர் சாலையில் சுற்றி திரிகின்றனர்.

போலீசார் இவர்களை கண்டித்து சிறையில் அடைத்து வாகனங்கள் பறிமுதல் செய்தாலும் இன்னும் சிலர் இதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதை புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார்.

மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள நடிகரை சபாஷ் சார் என சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Actor Sasikumar on road to create Corona awareness

‘இன்று நேற்று நாளை’ பார்ட் 2 பணிகளை துவங்கிய 2 குமார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’.

டைம் டிராவல் கதையில் உருவான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நேற்று நாளை படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டாராம்.

இந்த தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: தாணுவின் 3வது அணி.. அப்போ விஷால்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல சங்கங்கள் இருந்தாலும் எல்லாராலும் முக்கியமாக கவனிக்கப்படும் சங்கங்கள் இரண்டு.

ஒன்று தயாரிப்பாளர்கள் சங்கம்.. மற்றொன்று நடிகர்கள் சங்கம்.

தற்போது இவையிரண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது.

இந்த இரண்டு சங்கத்திலும் விஷால் அணியே பதவியே இருந்தது. இவரால் ஏற்பட்ட நிர்வாக பிரச்சினையாலும் பல மோதல்களாலும் தற்போது சங்கத்தை அரசே நடத்தி வருகிறது.

நடிகர் சங்கம் தேர்தல் நடந்து கிட்டதட்ட 10 மாதங்கள் ஆன போதிலும் இதுவரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதாவது வருகிற ஜூன் 21ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் 2 அணிகள் மோதுவதாக அறிவித்துள்ளன. அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணியினரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.

தற்போது பதிவி காலத்தில் உள்ள. விஷால் அணி போட்டியிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக தாணு தலைமையில் ஒரு அணி களத்தில் இறங்கியுள்ளது.

இதில் எஸ்.பிக்சர்ஸ் பாலாஜி, சிவாஜி பிலிம்ஸ் குமார், பாலு, ரங்கநாதன் உட்பட பலரும் இணைந்துள்ளனர்.

இந்த அணிக்கு பல மூத்த தயாரிப்பாளர்களும் ஆதரவு இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பெயரை தன் மகனுக்கு சூட்டிய சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்து அண்மையில் வெளியான படம் ‘வால்டர்’.

போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்குள் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் தியேட்டர்களும் மூடப்பட்டன.

தற்போது பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ஜான் மகேந்திரன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஈ.டி. பட ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ கொரோனாவில் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எத்தனையோ ஹாலிவுட் படங்களை பார்த்திருப்போம். ஒரு சில படங்களில் ஏதாவது ஒரு வைரஸ் திடீரென பரவி மக்களை கொன்று குவிக்கும்.

தற்போது கொரோனா வைரஸ் நாம் பார்த்த சினிமாக்களை கண்முன் கொண்டு வந்துள்ளது எனலாம்.

இந்த வைரஸை கட்டுள்குள் கொண்டு வர இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் போராடி வருகின்றனர்.

இந்த தொற்று நோய்க்கு ஹாலிவுட் கலைஞர்கள் பலியாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ (வயது 77) கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளார்.

இவர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கிய ஈ.டி, தி கலர் பர்பிள், எம்பயர் ஆப் தி சன், தி எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆலன் டாவ்யூ 5 முறை உலக புகழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கொரானா லாக்டவுனில் பிரபலங்களுடன் உரையாடும் இயக்குனர் கேபிள் சங்கர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரானா பரவலை தடுக்க, அனைவரையும் வீட்டிலேயே இருக்க வலியுறுத்திய அரசின் உத்தரவை மதித்து பிரபலங்கள் முதல் சாமானியர் வரை வீட்டில் இருக்க, எழுத்தாளரும் இயக்குனருமான கேபிள் சங்கர் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இன்ஸ்டாகிராமில் ( Insta Id: cablesankar ) உள்ள இன்ஸ்டா லைவ் மூலமாய் பிரபலங்களுடன் உரையாடி வருகிறார்.

நடிகை வினோதினி வைத்தியநாதன், லவ் குரு ராஜவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, பாரம் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், நடிகர் மனோபாலா, இயக்குனர் சீனு ராமசாமி என பல பேரிடம் உரையாடி வருகிறார்.

இந்த இன்ஸ்டா லைவிற்கு இணைய தள பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

லைவ் நிகழ்ச்சியை அவரது யூ ட்யூப் சேனலிலும் வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

லாக்டவுன் நேரத்தில் பிரபலங்களுடனான இந்த உரையாடல் மிகவும் உபயோகமானதாகவும், பொழுது போக்கவும் பயன் படுகிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

அனைவரும் என் நண்பர்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் அவர்களுடன் உரையாடுவது மனதிற்கு இனிமையாய் இருக்கிறது என்கிறார் இயக்குனர் கேபிள் சங்கர்…
Attachments area

More Articles
Follows