தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பல்வேறு துறைகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது.
முக்கியமாக நமக்கு உணவிடும் விவசாயிகளின் வாழ்வதாரமே முற்றிலும் முடங்கியுள்ளது.
விவசாய மக்களுக்கு ஊரடங்கு கடுமையாக விதிக்கப்படாவிட்டாலும் உற்பத்தி செய்த பொருட்களை சரிவர விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் இணையத்தில் ஒரு வீடியாவை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் தன் வாழைத் தோட்டத்தின் வீடியோவை வெளியிட்டுருந்தார்.
அந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் பத்திரிகையாளரும், கத்துக்குட்டி பட இயக்குனருமான இரா.சரவணன் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
“வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன்.
தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்” எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இரா.சரவணனின் இந்த ட்வீட்டைப் பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான சசி குமார் உடனடியாக அந்த விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி உதவி செய்துள்ளார்.
இதனால் மனம் நெகிழ்ந்த கோபாலகிருஷ்ணன், ‘சசி சார் உதவியா கொடுத்தாலும், அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்கு திருப்பிக் கொடுப்பேன்’ என்று கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
எதையுமே இலவசமாக பார்க்கும் மக்கள் மத்தியில் பெற்ற உதவியை கடனாக நினைத்து திருப்பி கொடுப்பேன் என்று கூறிய இந்த விவசாயி உயர்ந்து நிற்கிறார்.
Actor Sasikumar help farmer but farmer says he will re pay