தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் சந்தானம் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்து வரும் படம் டிக்கிலோனா.
நாயகன் 3 வேடங்களில் நடிப்பதால் சந்தானம் என்ற பெயரை கூட சந்-தா-னம் என பிரித்து போட்டு வருகின்றனர்.
இந்த படத்தில் சந்தானம் உடன் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆடும் ஒரு மாதிரியான விளையாட்டின் பெயரே இந்த படத்தை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்பட 2வது லுக் போஸ்டரில் ஆடையில்லாமல் நிர்வாணமாக நிற்கிறார் சந்தானம். அந்த இடத்தில் ஹாட் என வார்த்தையை வைத்து மறைத்துள்ளனர்.
ஏற்கெனவே ஆபாச காமெடி டைட்டிலை வைத்துவிட்டு, தற்போது போஸ்டரையும் இப்படி டிசைன் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 3வது கெட் அப் போஸ்டர் ஒன்று வரவுள்ளதாம். அது சர்ச்சையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Actor Santhanam nude poster from Dikkilona goes viral