தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால், ஒப்பந்தம் செய்யப்படி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளவில்லையாம்.
கட்டிடமும் கட்டவில்லை. பணமும் வந்தபாடில்லை என்பதால் இருவருக்கும் மோதல் முற்றியது.
சண்முகசுந்தரத்தின் அலுவலகத்துக்கு தன் உதவியாளர் ரமேஷ் என்பவருடன் சென்றுள்ளார் சந்தானம்.
அப்போது பேச்சுவார்த்தை கைகலப்பாக மாற, சந்தானம் சண்முகசுந்தரத்தை தாக்கியுள்ளார்.
அப்போது சண்முகசுந்தரத்தின் நண்பர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரை அடித்துள்ளார்.
இதனால் போலீஸில் இருதரப்பு புகார் கொடுக்க, தற்போது பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து புகாரை பெற்ற போலீஸார் இரண்டு தரப்பினர் மீதும் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சந்தானம் எனத் தெரிய வந்துள்ளது.
Actor Santhanam apply Anticipatory Bail
