கின்னஸ் சாதனை செய்து தமிழருக்கு பெருமை சேர்த்த ஆர்கே.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ.

இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.

இவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலக மார்க்கெட்டில் சந்தைப்படுத்துவதற்காக இதன் நம்பகத்தன்மையை உலக அரங்கில் நிரூபிப்பதற்காக மிகப்பெரிய கின்னஸ் சாதனையை இந்த சுதந்திர தினத்தன்று (ஆக-15) சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

சரியாக 1014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களைப் பயன்படுத்தச் செய்து, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1014 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்த ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகை தந்திருந்தனர்.

மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்.. அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரும் கலந்துகொண்டார்.

இந்த கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பயன்பாட்டாளர்களும் இதில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் தானா என்று நடுவர்கள் குழுவின் நீண்ட சோதனைகளுக்குப் பின்னரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் நடிகர் ஆர்.கே.விடம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 1014 பேருக்கும் இந்த கின்னஸ் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்படும்..

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு பற்றி பேசிய நடிகை கரிஷ்மா கபூர், “இந்த சுதந்திர தின நாளில் ரக்சா பந்தன் கொண்டாட்டத்தில் சென்னை வந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது.

மேலும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உபயோகித்து கின்னஸ் சாதனை செய்த இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து வியந்துபோனேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இந்த ஷாம்பூவை உபயோகித்து தங்கள் கைகளில் எதுவும் கறை எதுவும் படியவில்லை என கைகளை உயர்த்திக் காண்பித்தபோது நிஜமாகவே பிரமித்துப் போனேன்.

இப்படி ஒரு செயலை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்” என்றார்.

நடிகர் ஆர்கே பேசும்போது, ‘வெளிநாட்டில் இருந்து எத்தனையோ தயாரிப்புகள் வந்துள்ளன.. இந்தியாவில் ஒரு புதிய டெக்னாலஜியுடன் ஒரு தயாரிப்பைக் கண்டுபிடித்து, உலகம் முழுவதும் பிரஷ், பவுடர் பயன்படுத்தி டை அடித்துக் கொண்டு இருந்தவர்களை ஹேர் கலர் ஷாம்பூ என்கிற எளிய பயன்பாட்டிற்கு அழைத்து வந்ததில் பெரிய சாதனை படைத்துள்ளோம்.

வெளிநாட்டிற்கு இந்த புதிய கண்டுபிடிப்புகள் சென்றபோது இந்தியாவில் கண்டுபிடித்ததா, அதுவும் தமிழ்நாட்டில் கண்டுபிடித்ததா, கைகளில் ஒட்டாதா என எதையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே கேட்டனர்.

இதுவரை அவர்கள் தாங்கள் கடினமாக உபயோகித்து வந்த முறைக்கு மாற்றாக, எளிமையான ஒரு விஷயத்துடன் வியாபாரத்தில் நாங்கள் குதிப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேயே சந்தேகப்பட்டார்கள். எல்லாரும் கேள்வி கேட்கிறார்கள்.

அவர்களின் சந்தேகத்தை போக்குவதற்காகவே என்ன செய்யலாம் என நினைத்தபோது, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த கின்னஸ் சாதனையை முயற்சிக்கலாமே என்கிற எண்ணம் தோன்றியது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறும் கைகளில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை எடுத்து தங்கள் நரை முடி உள்ள இடங்களில் தடவி, தங்கள் முடி கருப்பானதையும், கைகளில் கறை படியாததையும் காட்டியதன் மூலம் இந்த கின்னஸ் சாதனை வெற்றி பெற்றுள்ளது.

உலக அளவில் சுமார் 40 நாடுகளில், ஒரு தமிழனுடைய தயாரிப்பால் அங்கு உள்ளவர்களின் தலைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு என்னால் ஏற்றுமதி செய்ய முடியும், அந்த வியாபாரத்தை இந்தியாவிற்கு எடுத்து வரமுடியும் என்கிற மிகப்பெரிய போராட்டத்தினுடைய ஒரு மைல்கல் தான் இந்த சாதனை.

கைகளில் கிளவுஸ் அணியாமல் இப்படி ஹேர் டை பயன்படுத்துகிறீர்களே, இது சரியானதா என்று என்னிடம் கேட்டார்கள். மிகவும் சென்சிட்டிவான பகுதியான தாடி மற்றும் மீசை அமைந்துள்ள உதட்டு பகுதியில் அதிக அளவில் கெமிக்கல் கலந்த டையைத்தான் இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம் கைகளுக்கு கையுறை அணியவில்லையா என்று கேட்கும் நீங்கள் உதடுகளுக்கு எந்த கிளவுஸ் போடுவீர்கள்,..?

அப்படி சில ஹேர் கலர் டை உதடுகளில் பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் என அவர்களிடம் கேட்டேன்.இந்தியனாய், தமிழனாய் ஒரு புதிய தயாரிப்பை எடுத்துக்கொண்டு போகும்போது, அதை சரி என்று நிரூபிப்பதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து ஒரு தயாரிப்பை இந்தியாவில் கொண்டு வந்து விற்கும்போது அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நாம் கேட்டுக்கொள்கிறோம்..

ஆனால் நாம் இங்கிருந்து தயாரிப்புகளை எடுத்துச்செல்லும்போது எண்ணற்ற கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்/ அமெரிக்காவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இந்தியாவிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் இந்தியாவில் இருக்கின்ற செருப்பு தொழில் செய்து கொண்டிருக்கிற ஒரு தொழிலதிபர் வெளிநாட்டிற்கு செல்வது என்பது கடினமாக இருக்கிறது.. இதுதான் உண்மை.

இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்துவதற்கு இந்த தேதியை (ஆக-15) நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் வெள்ளையனே வெளியேறு என்ற சுதந்திரத்திற்காக போராடியது போல், நம் தலையில் இருந்து நிரந்தரமாக வெள்ளைக்காரர்கள் போல ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த வெள்ளை முடிகளையும் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளோம்.

இந்த சாதனை இந்தியாவின் சாதனை.. இந்த உலக நாடுகளில் எங்களுடைய உழைப்பையும் எங்களுடைய வியர்வையையும் எடுத்துச்சென்று, தமிழன் தலை நிமிர்ந்து நிற்பான் என்பதற்கு உதாரணமாக இந்த படைப்பை கொண்டு செல்கிறோம்” என்கிறார் ஆர்கே பெருமையுடன்.

Actor Rkay made Guinness World Record in VIP Hair color shampoo

Breaking சுந்தர் சி & விஷால் இணையும் ‘ACTION’ லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடித்த மத கஜராஜா மற்றும் ஆம்பள என 2 படங்களை இயக்கினார் சுந்தர் சி.

இதில் மதகஜராஜா படம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி.
இதில் தமன்னா நாயகியாக நடித்து வருகிறார்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க, ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்து வருகிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்தவொரு முன்னறிப்பும் இன்றி தற்போது இப்படத்த பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஆக்ஷன் என பெயரிட்டுள்ளனர்.

இந்த ஆக்ஷன் படத்திற்கான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் என்ற இரட்டை சண்டை பயிற்சி இயக்குனர்கள் அமைத்துள்ளனர்.

ஏற்கெனவே சுராஜ் இயக்கிய கத்தி சண்டை படத்தில் விஷாலுடன் தமன்னா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sundar C and Vishals next movie titled Action

BREAKING தமிழக அரசியலின் மையமாக மீண்டும் போயஸ் கார்டன்.? ரஜினி சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்த் தன் பைரவி படம் மூலம் ஹீரோவாக உயர்த்தியவர் கலைஞானம்.

அவருக்கான பாராட்டு விழா தற்போது சென்னையில் நடைபெறவுள்ளது.

அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் செல்லும்போது சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன்.

காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை மதிப்பிற்குரிய சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனையடுத்து வருகிற சித்திரை 1ல் கட்சி பெயர் அறிவிக்கப்படுமா? என்று கேட்டதற்கு.. விரைவில் தெரிவிப்பேன் என்றார்.

அதனையடுத்து போயஸ் கார்டன் மீண்டும் அரசியல் களத்தின் மையமாகுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள்” என சூப்பர் ஸ்டார் நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.

Rajinis super reply Will Poes garden became Political center of TN again

உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு (11-08) பனை விதைகளை நட்டதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாக பிறந்த தினத்தில் மரக்கன்றுகளை நடுவது அனைவராலும் அறிந்த விசயமே, ஆனால் பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது. அதனை காக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் நடிகர் சௌந்தர்ராஜா தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு பனை விதைகளை நட்டார்.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன்ரமேஸ், லையன்ஸ் கிளப் பிரேம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கத்தினர், மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பெண் குழந்தைகள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தர்ராஜா பேசுகையில், எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை நட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் பனை விதைகளை நட உள்ளோம். ஒவ்வொருவரும் தங்களது ஊரில் உள்ள கண்மாய் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும். இளைஞர்கள் இதனை ஆர்வத்தோடு செய்ய வேண்டும். நான் இந்த பனை மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல், இதனை பராமரிப்பதை சவாலாக எடுத்துள்ளேன். இந்த கண்மாயை சுத்திகரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

56000 திரைகளில் செப்டம்பர் 6ஆம் தேதி ரஜினியின் 2.0 ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய்குமார் ஆகியோரது நடிப்பில் உருவான 2.0 படம் கடந்தாண்டு 2018ல் வெளியானது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்தை ஷங்கர் இயக்க, ஏஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் இந்தியாவில் முதலுக்கு மோசமில்லாத நல்ல வசூலை பெற்றது.

இந்த நிலையில் சீனாவில் படத்தை வெளியிட்டு, பெரிய லாபம் ஈட்ட திட்டமிட்டனர்.

கடந்த மே மாதம் சீனாவில் வெளியிட இருந்த நிலையில் ‘தி லயன் கிங்’ படம் வெளியானதால் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது வருகிற செப்டம்பர் 6ம் தேதி படத்தை வெளியிடஉள்ளனர்.

சீனாவில் மட்டும் மொத்தமாக 56000 (48000 3டி திரைகள்) திரைகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரம் பரிசளித்த தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஜிஎஸ், அட்லி, விஜய், ரஹ்மான் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தன் காட்சிகளை முடித்துவிட்ட விஜய் படக்குழுவினர் 400 பேருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வருடம் தீபாவளி வெளியீடாக பிகில் வரவுள்ளது.

More Articles
Follows