விஜய்சேதுபதியின் தர்மதுரை 2 & 4 படமும் ரெடி.; RK சுரேஷ் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ராதிகா, சௌந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘தர்மதுரை’.

யுவன் சங்கர்ராஜா இசையமைத்த இந்த படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியானது.

இதில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய ‘எந்தப் பக்கம் பார்க்கும் போதும்’ பாடல் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை வென்றது.

தற்போது படம் வெளியாகி 4 ஆண்டுகளாகிறது.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில்…

“இன்று ஆகஸ்ட் 19. தர்மதுரை திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளாகிறது. சீனுராமசாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமில்லாமல் விரைவில் தர்மதுரை 2 -ம் ரெடியாக இருக்கிறது.

தர்மதுரை போன்றே அதையும் பாசிட்டிவ்வான இளைஞனின் கதையாக சீனுராமசாமி உருவாக்குவார். அதையும் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெளியிடும் என்று கூறிக் கொள்கிறேன்.

மேலும் 4 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. திரையரங்குகள் திறந்தவுடன் வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

SPB உடல்நிலையில் முன்னேற்றமில்லை; பிரார்த்தனையே மீட்டெடுக்கும்.. சரண் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை குறித்து எஸ்பி. சரண் அவ்வப்போது வீடியோவில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை ரஜினி, கமல், பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்ய மக்களிடம் வேண்டுகோள் விடுத்த்னர்.

இன்றைய வீடியோவில் சரண் அவர்கள் எஸ்பிபி.யின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார்.

அதில்.. எஸ்பிபி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ள ஒவ்வொருவருக்கும், பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

அனைவரது பிரார்த்தனையும் எஸ்பிபியை மீட்டெடுக்கும் என நம்புகிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

ரஜினிக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனருடன் இணையும் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 165 படங்களில் நடித்து விட்டார்.

இதில் சூப்பர் ஹிட் படங்களே 100ஐ தாண்டிவிடும். அதிலும் முக்கியமாக சில படங்களை எடுத்தால் அண்ணாமலை, வீரா மற்றும் பாட்ஷா படங்கள் நிச்சயம் மூன்று இடம்பெறும்.

இந்த மூன்றையும் இயக்கியவர் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா.

ரஜினியுடன் இவர் இணைந்த இந்த மூன்று படங்களும் தொடர் ஹிட் அடித்தன.

தற்போது சினிமாவை விட்டு விலகி டிவி சீரியல்களை இயக்கி கொண்டிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சாக்லேட் என்ற சீரியலை இயக்கி இருந்தார்.

தற்போது மிர்ச்சி சிவா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

ஏற்கெனவே சிவா நடிப்பில் சுமோ என்ற படம் ரிலீசுக்கு தயராக இருக்கிறது.

தனுஷுடன் நடித்துவிட்டு படத்தை குறை சொன்ன சிவகார்த்திகேயன் பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த பாலிவுட் படம் ராஞ்சனா 2013ல் ரிலீசானது.

இதில் தனுஷ் உடன் சோனம் கபூர், அபய் தியோல் நடிக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடித்த அபய் தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஞ்சனா படத்தை கடுமையாக விமர்த்துள்ளார்.

பொதுவாக ஒரு படத்தை ரசிகர்கள் விமர்ச்சிப்பார்கள். இதில் படத்தில் நடித்தவரே விமர்சித்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அவரின் பதிவில்… “இந்தப் படம் பிற்போக்குத்தனமானது. பெண்ணின் உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது.

பெண்ணை ஒரு ஆண் துரத்தி துரத்தி காதலிக்கிறார். பிறகு பெண் ஒப்புக்கொள்கிறார். ஆனால், உண்மையில் நிஜத்தில் அப்படியல்ல.

சினிமாவில் மட்டுமே பெண் ஒப்புக்கொள்வாள். பெண்களை துரத்துவது பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கே வழிவகுக்கும்.

இதனை திரையில் கொண்டாடுவது என்பது பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம்சாட்டுவதில்தான் சென்று முடியும்” என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பரில் தியேட்டர்கள் திறக்க சாத்தியமே இல்லை.; ஏன்? ஓர் அலசல்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடெங்கிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏப்ரல் முதல் மக்களிடம் வருமானம் இல்லை. தனியார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. ஊழியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டம் இருந்தாலும் அரசு அதிகாரிகள் மட்டுமே சம்பளம் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுப்படுபவர்கள் சிரமத்தில் உள்ளனர் என்பதும் பணியின் போது சில ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கடந்த 5 மாதங்களாக இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது வரை தியேட்டர்கள் திறந்தப்பாடில்லை. அதுபோல் சினிமா சூட்டிங்குக்கும் இதுவரை அரசு அனுமதிக்கவில்லை.

தமிழகத்திலும் இதே நிலை தான் இன்று வரை தொடர்கிறது.

சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள், டாஸ்மாக், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை திறக்க அரசு அனுமதி அளித்தாலும் இதுவரை பள்ளிகள் மற்றும் தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை.

கடைகள் திறக்கப்பட்டாலும் மாலை 7 மணிவரை மட்டுமே திறக்க அனுமதியுள்ளது. அதை மீறி திறக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் செப்டம்பரிலும் ஊரடங்கு இதே தளர்வுகளுடன் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில நாளிதழ்கள் மற்றும் இணையத்தளங்களில் செப்டம்பரில் தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.

வார நாட்களில் காலை காட்சிகளுக்கு கூட்டமே இருக்காது. வெள்ளி இரவு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மட்டுமே தியேட்டர்கள் நிரம்பி வழியும்.

அதுபோல் வார நாட்களில் மாலை காட்சி மற்றும் இரவு காட்சிகளுக்கு கூட்டம் இருக்கும்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமே இல்லை. மாலை 7 மணி முதல் காலை வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்போது எப்படி தியேட்டர்களில் மாலை காட்சிகளுக்கு வரவேற்பு இருக்கும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத ஊரடங்கு இருக்கும்போது அன்றும் காட்சிகள் திரையிட வாய்ப்பில்லை.

போதிய வருமானம் இன்றி தவிக்கும் மக்கள் நிச்சயமாக தங்கள் வேலைகளை விட்டுவிட்டு காலை காட்சிகளுக்கு செல்ல வாய்ப்பில்லை.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்காத நிலையில் மாணவர்களை பெற்றோர்கள் தியேட்டருக்கு அனுப்ப போவதில்லை. பணம் கொடுக்கும் சூழ்நிலையிலும் பெற்றோர்கள் இல்லை.

மேலும் 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் வெளியே சுற்ற அனுமதியில்லை. அப்படியிருக்கையில் அந்த வயதினரும் தியேட்டருக்கு வரப்போவதில்லை.

இவையில்லாமல் தியேட்டரில் சமூக இடைவெளியுடன் மக்கள் அமர வேண்டும் என்ற விதி உள்ளது. எனவே போதுமான மக்கள் இல்லாமல் படங்களை திரையிட வாய்ப்பில்லை.

டாஸ்மாக்கை திறக்கும் அரசு தியேட்டர்களை திறப்பதில்லையே? என்ற நியாயமான கேள்வியும் இங்கே எழுகிறது.

ஆனால் சரக்கு வாங்கி வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் அடித்துக் கொள்ளலாம். அது சினிமாவுக்கு சாத்தியமில்லை.

மேலும் பல மால்களில் சரக்கு அடித்து உள்ளே செல்ல அனுமதியும் இல்லை. இதனால் அந்த மது பிரியர்கள் கூட்டமும் தியேட்டருக்கு செல்ல முடியாது.

ஆக பள்ளிகளை போல தியேட்டர்கள் திறப்பதும் தற்போது சாத்தியமில்லை.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து அரசும் மக்களும் சகஜநிலைக்கு திரும்பும்வரை இதற்கு முடிவு கிட்டப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

உணவுப் பற்றாக்குறை; வீட்டு நாய்களை அரசிடம் ஒப்படைக்க கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் நாடுகள் திணறி வருகிறது.

இதனால் உலகெங்கிலும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

ஆனால் ஆரம்பம் முதலே கரோனா பாதிப்பு இல்லை எனக் கூறி வரும் வட கொரியா, அங்கு என்ன நடக்கிறது என்பதையே இந்த உலகத்திற்கு தெரிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவி வருவதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு நிலவி வரும் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வட கொரியா அதிபர் கிம் ஜாங் அவர்கள்… பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை கட்டாயம் இறைச்சிக்காக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென கட்டளையிட்டு இருக்கிறாராம்.

மக்களிடம் இருந்து பெறப்படும் நாய்கள் அங்குள்ள உணவகங்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றன.

வட கொரியாவில் பணக்காரர்கள் மட்டுமே நாய்களை வளர்ப்பாளர்கள். ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பன்றிகளை தான் வளர்ப்பார்களாம்.

கடந்த ஜூலை மாதம் முதல் யாரும் வீட்டில் நாய்களை வளர்க்க கூடாது என கிம் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வடகொரியாவில் நாய்களை வளர்க்க அரசின் அனுமதி வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் வடகொரியாவில் வசிக்கும் 60% மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணம் அணு ஆயுத சோதனைகளுக்காக செலவிடப்படும் தொகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows