BIG NEWS வருவாரா? மாட்டாரா..? பாபாஜி ஜென்ம நட்சத்திர நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி இறுதி முடிவு..?

BIG NEWS வருவாரா? மாட்டாரா..? பாபாஜி ஜென்ம நட்சத்திர நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி இறுதி முடிவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகொரோனா ஊரடங்காலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை செய்யவுள்ளார் ரஜினிகாந்த்.

நவம்பர் 30 ஆம் தேதி மஹா அவதார் பாபாஜியின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திர நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில் அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajinikanth to hold discussions with district secretaries of RMM on Monday

ஒரு டாக்டர் & நர்ஸ் உடன் டிசம்பர் 15க்குள் 2000 நடமாடும் மினி கிளினிக்..; முதல்வர் உத்தரவு

ஒரு டாக்டர் & நர்ஸ் உடன் டிசம்பர் 15க்குள் 2000 நடமாடும் மினி கிளினிக்..; முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mini clinic in tamilnaduநவம்பர் மாத கொரோனா ஊரடங்கு முடிவடைய உள்ளது.

எனவே டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் பேசியதாவது…

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

கால்நடைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

நிவர் புயல் அறிவிப்பின் போதே மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்துக்கு தேவையான உதவிகளை சொன்னபடி செய்தார்.

பிரதமரும் தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதுவரை 7525 கோடி ரூபாய் கொரனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5,22,530, காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.

நாட்டிலேயே கொரோனா தொற்று கண்டறிய அதிகளவில் ஆய்வகங்கள் அமைத்தது தமிழகம் தான்.

பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதில்லை. மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நோய் கட்டுப்படுத்த முடியாது.

ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் 2000 நடமாடும் மினி கிளினிக் தொடங்கப்படும்.

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் இருப்பார்கள்.

இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.

Tamil Nadu plans 2000 mini clinics in december

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திலிருந்து சூர்யா விலகல்..?.; கலைப்புலி தாணு விளக்கம்

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திலிருந்து சூர்யா விலகல்..?.; கலைப்புலி தாணு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaadi vasal suriyaகலைப்புலி s தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது.

இப்படத்திற்கு ‘வாடி வாசல்’ என பெயரிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

ஆனால் சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா @Suriya_offl விலகுகிறார்.

கூடிய விரைவில் தகுந்த கதாநாயகன் பெயர் அறிவிக்கப்படும்

நன்றி , வணக்கம் .
#Vaadivasal !! என போலியான தகவலை ஒரு நபர் பதிவிட்டார்.

https://t.co/E1Z9mL0kZo இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம்.” என தாணு தெரிவித்தார்.

மேலும் அவரது பிஆர்ஓ தரப்பில்….

தயாரிப்பாளர் திரு கலைப்புலி s தாணு அவர்களின் பெயரில் போலியான ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் அவரது படங்கள் பற்றிய தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் .

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rumours on Vaadi Vasal shut down, the project is truly on

பிக்பாஸில் வெளியேறும் நபர்.; தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தாரே.. அவருக்கா இந்த நிலைமை..? அடுத்த தலைவர் யார்..?

பிக்பாஸில் வெளியேறும் நபர்.; தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தாரே.. அவருக்கா இந்த நிலைமை..? அடுத்த தலைவர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும் சுசித்ரா ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தற்போது அர்ச்சனாவுடன் 14 போட்டியாளர்கள் மீதமிருக்கின்றனர்.

இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய 7 பேர் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

இந்த நிலையில், நாமினேஷன் கார்டு என்ற புதிய முறையை அறிமுகம் செய்தார் பிக்பாஸ்.

நாமினேஷனில் லிஸ்டில் இருப்போரில் யார் இந்தக் கார்டைப் பெறுகிறாரோ அவர் வீட்டிலிருக்கும் ஒரு போட்டியாளரை நாமினேட் செய்யலாம் என்றும் கூறப்பட்டது.

இதனால் இந்த வாரம் சம்யுக்தா அல்லது நிஷா வெளியேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக பலர் நினைத்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட உள்ளார்.

எந்த பிரச்சினையிலும் ஈடுபடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவர் ஜித்தன் ரமேஷ்.

இந்த வார கால் சென்டர் டாஸ்க்கில் கூட ரம்யாவின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார் ரமேஷ்.

இதனால் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராகவும் ஜித்தன் ரமேஷ் தேர்வாகியுள்ளார்.

இவருடன் பாலாஜி & ரம்யா தேர்வாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் வாரங்களில் பாலாஜி தான் பிக்பாஸ் வீட்டின் தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Jithan Ramesh evicted this week in Bigg Boss Tamil 4 ?

jithan ramesh bigg boss

நிவர் புயல் நிவாரணம்..: ரூ.100 கோடி கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம்.!

நிவர் புயல் நிவாரணம்..: ரூ.100 கோடி கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் நிவர் புயல் காரைக்கால், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை தாக்கியது.

இதனால் புதுச்சேரியில் ஏராளமான வீடுகள், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு திங்கள்கிழமை நவம்பர் 30ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வர உள்ளது.

இந்த நிலையில் முதல் அமைச்சர் நாராயணசாமி ரூ.100 கோடி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிவாரணம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனிடையில் தமிழக அரசும் நிவர் புயல் தொடர்பான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2,27,317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Pondicherry CM Narayana samy writes letter to PM

narayanasamy

‘பாவ கதைகள்’… 4 பிரபல இயக்குனர்கள் கூட்டணி..; கௌதம் மேனன் & சிம்ரன் ஜோடி

‘பாவ கதைகள்’… 4 பிரபல இயக்குனர்கள் கூட்டணி..; கௌதம் மேனன் & சிம்ரன் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simran gautham menonநெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவ கதைகள்” வெளியிட்டது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கௌதம் மேனன் & விக்னேஷ் சிவன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர்.

வெற்றி மாறன் எழுதி இயக்கியுள்ள படத்தில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி நடித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி உள்ள படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் , சிம்ரன் நடித்துள்ளனர்.

ஷான் கருப்பசாமி கதை எழுத சுதா கொங்கரா இயக்கியுள்ள கதையில் பவானிஶ்ரீ, காளிதாஸ் ஜெய ராம், சாந்தனு நடித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ள படத்தில் அஞ்சலி, கல்கி கொச்சிலின், பதம் குமார் நடித்துள்ளனர்.

இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் ஆர் எஸ்விபி மூவிஸ் (RSVP Movies) நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் ஃபிளையிங் யுனிகார்ன் எண்டர்டெயின் மெண்ட் (Flying Unicorn Entertainment) நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 2020 டிசம்பர் 18ல் வெளியாகவுள்ளது.

Simran and Gautham Menon joins for Paava Kadhaigal

More Articles
Follows