நடிகர் பிரேம்ஜிக்கு மேரேஜ்..? பெண் கிடைச்சிடுச்சா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி.

இவர் அஜித்துடன் மங்காத்தா, சூர்யாவுடன் மாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு 40 வயதை கடந்துவிட்ட போதிலும் திருமணம் நடக்கவில்லை.

எனவே இவரது பெற்றோர்கள் நண்பர்கள் பெண் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆணும் பெண்ணும் இணைந்து நிற்கின்ற வாசகத்துடன் கேம் ஓவர் என வரையப்பட்ட டீசர்ட் உடன் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனால் பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது என பலரும் கூறி வருகின்றனர்.

ஜப்பானிலும் யுரேசியாவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா , அமெரிக்காவில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்படவிழாக்கள்
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபட்டு உலக திரைப்பட விழாக்களில் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள்,

தற்போது ஜப்பானில் நடைபெறும் மாபெறும் Fukuoka உலக திரைப்பட விழாவிலும் யுரேசியாவில் நடைபெறும் மாபெறும் உலக திரைப்பட விழாவிலும் இயக்குனர் வஸந்த் எஸ் சாயின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது! உலக திரைப்பட விழாவில் கொண்டாடப்படும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வீடியோவை பார்க்க

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இயற்கை விவசாயம் குறித்து விழா நடத்திய இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் வயலிலும் இயற்கை விவசாயத்தை பாரம்பரிய நெல்லில் செய்தும்,சினிமாவிலும்
இயற்கை விவசாயத்தை பற்றி குத்தூசி என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குனர் சிவசக்தி
அவர்கள்,தனது பிறந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர்
கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழா நடத்தினார்.

விழாவில் நம்மாழ்வார் படத்தை திறந்துவைத்து
இயற்கைவிவசாயம் ஏன் வேண்டும் , அதன் சிறப்பு பற்றியும் சான்றோர்கள் பேசினார்கள்.மற்றும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் காட்டுயாணம் காலாநமக்,மாப்பிள்ளை சம்பா தந்தும் ,ஏரி கரையில் நட பனை விதையும் , அனைவருக்கும் விதைபந்தும், பள்ளிமாணவர்களுக்கு
மரகன்றும் தந்தனர்.நிகழ்ச்சியில் 465 வகையான பாரம்பரிய நெல் கண்காட்சி வைத்தனர்.
அனைவருக்கும்
உணவாக பாரம்பரிய அரிசியான காட்டுயாணம் கஞ்சி.
மாப்பிள்ளை சம்பா சாதம் வழங்க பட்டது.உழவர்களுக்கு ஒரே கருத்தாக உங்கள் வயலில் உங்களுக்காண உணவை பாரம்பரிய நெல்லில் இயற்கை விவசாயம் செய்யுங்கள். விதைநெல்லை பாதுகாத்தும்.

இயற்கையை போற்றி வாழ்வோம் என்று கூறினார்கள். விழாவை
குத்தூசி இயற்கை போற்றும் நண்பர்கள் மற்றும் பசுமை சிகரம் அறக்கட்டளை.
எழில் இயற்கை
வேளாண் பண்னையும்
சேர்ந்து இவ்விழாவை நடத்தினார்கள் .

கல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரிமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அந்த டீசர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் துருவ் விக்ரம் சில தினங்களுக்கு முன்பு சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது அவரை மாணவிகள் சூழ்ந்து கொண்டனர். மாணவிகள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய அவர், நிகழ்ச்சியில் ஒரு பாடலும் பாடி அசத்தினார். கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற “கல்யாண வயசு தான்” என்ற பாடலை அவர் பாட மாணவிகள் கைகள் தட்டி உற்சாகப் படுத்தினார்கள்.

மேலும் மாணவிகள் அனைவரும் துருவ் விக்ரமோடு செல்பி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக ஆதித்ய வர்மா படத்தின் டீசர் திரையிடப்பட்டது. அவ்வேளையில் மாணவிகள் சந்தோசக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். துருவ் விக்ரமிற்கு படம் வெளிவரும் முன்பே ஒரு ரசிகர் படை உருவாகி வருகிறது.

மாநில துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நடிகர் என்ற பிரபல அடையாளத்தை விட பல துறைகளில் தன் திறமையை நிரூபித்து வருபவர் நடிகர் அஜித்.

பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் மற்றும் பிரியாணி சமையல் என அசத்தி வருபவர் இவர்.

அண்மையில் தக்‌ஷா குழுவுக்கு ஆலோசராகவும் இருந்தார்.

அந்த குழு ஆஸ்திரேலியாவில் நடந்த யூஏஈ மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

இந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான மாநில துப்பாக்கி சாம்பியன்ஷிப்பில் அஜித் கலந்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படியே சென்னை ரைபில் கிளப் சார்பில் 25 மீட்டர் பிரிவில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார்.

அஜித் கலந்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Actor Ajith takes part in state rifle championship in Coimbatore

கதை திருடும் கார்ப்பரேட் நிறுவனங்களை தோலுரிக்கும் ‘படைப்பாளன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது.

அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் “படைப்பாளன்“ LS தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் S.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் – விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி நாயகனும், இயக்குனருமான L.S.பிரபுராஜா கூறியதாவது..

முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை இது. முன்பெல்லாம் படத்தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள்.

இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு அவர்களை
அழைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் ஒரு பிரபலமான இயக்குனர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள்.

அந்த உதவி இயக்குனரின் உழைப்பு, வலிகளிக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்தக் கதைப் பற்றியும் அவன் சொன்ன கதைப்பற்றியும் தான் இந்த படம். கடவுள் ஒருவனை தண்டிக்க நினைத்தால் அவனை உதவி இயக்குநராக படைத்து விடுவார் என்று சொல்வார்கள். உதவி இயக்குநர்களின் வாழ்வு அத்தகைய துயரம் நிறைந்தது.

உதவி இயக்குநராக இருப்பவனுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை பெரும் சங்கடம் தான். மக்களிடையே சினிமா இயக்குனர் என்றால் ஒரு விதமான மோசமாகவே கருதுகிறார்கள்.

ஆனால் மக்களை தங்கள் படங்களின் மூலம் மகிழ்விப்பவனே ஒரு படைப்பாளன் தான் அப்படியான வலி மிகுந்த உதவி இயக்குநரின் வலிகளையும் வழிகளையும் இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்ட உள்ளது என்கிறார் நாயகனும் இயக்குனருமான L.S. பிரபுராஜா.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : வேல்முருகன்
இசை : கிருபாகரன்
பாடல்கள் : கு.கார்த்திக்
கலை : ஸ்ரீமன் பாலாஜி
எடிட்டிங் : எஸ்.பி.அகமது
மக்கள் தொடர்பு : மணவை புவன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் – L.S.பிரபுராஜா இவர் இயக்குனர் தருண்கோபியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

Padaipaalan movie based on Story theft Corporate Companies

More Articles
Follows